ரசியா சசாது சகீர்

ரசியா சசாது சாகீர் (Razia Sajjad Zaheer 15 அக்டோபர் 1918, அஜ்மீர் - 18 டிசம்பர் 1979, டெல்லி ) ஓர் இந்திய உருது மொழி எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர் ஆவார். இவர் உத்தரபிரதேச மாநில சாகித்ய அகாதமி விருதையும் சோவியத் லேண்ட் நேரு விருதையும் வென்றார்.

ரசியா சசாது சகீர்
Razia Sajjad Zaheer
பிறப்புரசியா தில்சாத்து
(1918-10-15)அக்டோபர் 15, 1918
ஆச்மீர்
இறப்புதிசம்பர் 18, 1979(1979-12-18) (அகவை 61)
தில்லி
தொழில்எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்
மொழிஉருது
குடியுரிமைஇந்தியன்
கல்வி நிலையம்அலகாபாத்து பல்கலைக்கழகம்
காலம்1948–1979
இலக்கிய இயக்கம்முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
துணைவர்சாச்சாத்து சாகீர்
பிள்ளைகள்நாதிரா பாபர்,[1]

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

ரசியா தில்சாது 15 அக்டோபர் 1918 இல் ராஜஸ்தானின் அஜ்மீரில் [2] கல்வியாளர்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை அஜ்மீர் இஸ்லாமியா கல்லூரியின் முதல்வராக இருந்தார். [3] இவர் அஜ்மீரில் இளங்கலைப் பட்டம் பெற்றார். [4]

கவிஞரும் பொதுவுடைமை ஆர்வலருமான சசாது சகீரை 20 வயதில் திருமணம் செய்து கொண்டார். இவர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் (PWA) நிறுவனர்களில் ஒருவராக இருந்தார், மேலும் இவர் பயிற்சி பெற்ற சட்டத் தொழிலைத் தொடர ஆர்வம் காட்டவில்லை. இவர்களின் திருமணத்திற்குப் பிறகு, இவர் தனது புரட்சிகர நடவடிக்கைகளுக்காக பிரித்தானியர்களால் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். [3]

ரசியா அலகாபாத் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். [4] 1940 களில், ரசியா மற்றும் இவரது கணவர் பம்பாயில் இருந்தனர், அங்கு இவர்கள் வாராந்திர முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கூட்டத்தினை ஏற்பாடு செய்து கலாச்சாரத் துறையில் தீவிரமாக இருந்தனர். [3]

1948 இல், ரசியாவுக்கு நான்கு மகள்கள் இருந்தனர், இவருடைய கணவர் இந்தியப் பிரிவினைக்கு ஆதரவளித்த இந்தியப் பொதுவுடைக் கட்சியின் உத்தரவின் பேரில் பாகிஸ்தானில் இருந்தார். இவர் தனது மகள்களுடன் லக்னோ சென்றார். [3]

தொழில் வாழ்க்கை

தொகு

ரசியா தனது குழந்தை பருவத்திலிருந்தே ஃபூல், தெஹ்ஸிப்-இ-நிஸ்வான் மற்றும் இஸ்மத் போன்ற பத்திரிகைகளுக்கு சிறுகதைகளை வழங்கி வந்தார். [5] லக்னோவில், ரசியா கற்பிக்கவும், எழுதவும் ,மொழிபெயர்க்கவும் தொடங்கினார். இவர் சுமார் 40 புத்தகங்களை உருது மொழியில் மொழிபெயர்த்தார். [6] பெர்தோல்ட் பிரெக்டின் லைப் ஆஃப் கலிலியோவினை உருது மொழியில் மொழிபெயர்த்ததின் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார். [7] சியாராம் சரண் குப்தாவின் நாரியினை மொழிபெயத்தார் (சாகித்ய அகாடமியால் இவுரத் ( பெண் ) என வெளியிடப்பட்டது), [8] மற்றும் முல்க் ராஜ் ஆனந்தின் செவன் இயர்சு ( சாத் சால், 1962) ஆகியவற்றை இவர் மொழிபெயர்த்தார். [9]

1953 ஆம் ஆண்டில், இவரது சார்-இ-ஷாம் புதினம் வெளியிடப்பட்டது, காந்தே ( முட்கள், ஒரு புதினம்) 1954 இல் வெளியிடப்பட்டது, அதே நேரத்தில் சுமன் எனும் மற்றொரு புதினம் 1964 இல் வெளிவந்தது. சிறைச்சாலையில் இருந்து தனது கணவர் அனுப்பிய கடிதங்களை நுகுஷ்-இ-ஜிந்தன் எனும் பெயரில் 1954 இல் வெளியிட்டார். [10]

இவர் கவிஞர் மசாசு லக்னோவின் ஒரு புதினத்தில் பங்காற்றினார், அது முடிக்கப்படாமல் இருந்தது. [6]

இவரது சிறுகதைகள் ஒரு சோசலிச நோக்கம் கொண்டதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. [11]

சார்ட் குலாப் ( மஞ்சள் ரோஸ், 1981) மற்றும் அல்லா டி பந்தா லே ( கடவுள் கொடுக்கிறார், மனிதன் எடுத்துக்கொள்கிறார், 1984) இவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் இவரது மரணத்திற்குப் பின் வெளியிடப்பட்டன. [4]

பிற்கால வாழ்வு

தொகு

ரசியாவின் கணவர் 1956 வரை பாகிஸ்தானில் சிறையில் இருந்தார், பின்னர் இவர் இந்தியா திரும்பி லக்னோவில் தனது குடும்பத்துடன் சேர்ந்தார். 1964 இல், இவர்கள் டெல்லி சென்றனர். [6]

ரசியா சஜ்ஜாத் ஜாகீர் 18 டிசம்பர் 1979 அன்று தில்லியில் இறந்தார். [5]

சான்றுகள்

தொகு
  1. Salman 2018.
  2. SA 1961.
  3. 3.0 3.1 3.2 3.3 Mahmood 2020a.
  4. 4.0 4.1 4.2 Tharu & Lalita 1993.
  5. 5.0 5.1 Naeem 2019.
  6. 6.0 6.1 6.2 Mahmood 2020b.
  7. Husain 1972.
  8. Rao 2004.
  9. Husain 1963.
  10. Tharu & Lalita 1993, ப. 144.
  11. Machwe 1977.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரசியா_சசாது_சகீர்&oldid=3289140" இலிருந்து மீள்விக்கப்பட்டது