ரன்பீர் கபூர்

ரன்பீர் கபூர் (ஆங்கில மொழி: Ranbir Kapoor, இந்தி: रणबीर कपूर, இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில், 1982 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 அன்று பிறந்தார்) பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கும் ஓர் இந்திய நடிகராவார். அவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சாவரியா என்னும் திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படத்திற்காக அவர் சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.[1]

ரன்பீர் கபூர்

இயற் பெயர் ரண்பீர் கபூர்
பிறப்பு செப்டம்பர் 28, 1982 (1982-09-28) (அகவை 41)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தொழில் நடிகர்
நடிப்புக் காலம் 2007 – இன்று

ஆரம்பகால வாழ்க்கை தொகு

ரன்பீர் கபூர், நடிகர்களான ரிஷி கபூர் மற்றும் நீத்து சிங் தம்பதியருக்குப் பிறந்தார். இவர் ப்ரித்திவிராஜ் கபூரின் கொள்ளுப்பேரனும், நடிகரும் திரைப்பட இயக்குனருமான ராஜ் கபூரின் பேரனும் ஆவார். ரன்பீர் ரித்திமா கபூரின் சகோதரராவார். ரந்தீர் கபூர் மற்றும் ராஜீவ் கபூர் ஆகியோர் அவருடைய சித்தப்பாக்கள். கரீஷ்மா கபூர், கரீனா கபூர் மற்றும் நிகில் நந்தா உள்ளிட்டவர்கள் அவரது பிரபல உறவினர்கள் ஆவர். ரன்பீர் குழந்தைப்பருவத்தில் மும்பையின் மாஹிம் என்ற இடத்திலுள்ள பாம்பே ஸ்காட்டிஷ் பள்ளியில் பயின்றார். பின்னர் நியூயார்க்கில் உள்ள லீ ஸ்ட்ராஸ்பெர்க் தியேட்டர் அண்ட் பிலிம் இன்ஸ்டியூட்டில் மெத்தட் ஆக்டிங் என்னும் நடிப்பு முறையைக் கற்றுக்கொண்டார்.[2]

தொழில் வாழ்க்கை தொகு

ரன்பீர் நடிகராகும் முன்பு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியிடம் உதவியாளராகப் பணிபுரிந்தார். அப்போது அவர் பிளாக் (2005) திரைப்படத்தின் உருவாக்கத்தில் ஈடுபட்டார். பின்னர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு நவம்பரில் வெளியான சாவரியா (Saawariya) திரைப்படத்தில் ரன்பீர் அறிமுகமானார். அப்படத்தில் ரன்பீர் புதுமுக நடிகை சோனம் கபூருடன் நடித்தார். அத்திரைப்படம் வசூலில் வெற்றிபெறாவிட்டாலும்,[3] காதல் வயப்பட்ட பாடகர் ரன்பீர் ராஜ் கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக பாராட்டு விமர்சனங்களைப் பெற்றார். விமர்சகர் தரன் ஆதர்ஷ் "ரன்பீர் கபூர் மிகத்திறமை வாய்ந்தவர், இதில் மாற்றுக்கருத்தில்லை. ஆம், அவர் அழகாக இருக்கிறார், ஆனால் நீங்கள் திரைப்படம் முடிந்து திரும்பும்போது அவரது நடிப்பு மட்டுமே உங்கள் மனதில் நிற்கும். இவர் அறிமுகத் திரைப்படத்திலேயே இவ்வளவு சிறப்பாக நடித்திருக்கிறார் என்றால், இவர் தான் வரும் ஆண்டுகளில் கபூர் குடும்பத்திற்குப் பெருமை சேர்க்கப்போகிறார். ஓர் அறிமுக நடிகருக்கு இது குறிப்பிடத்தக்க ஒன்றாகும் [sic]."[4]

ரன்பீர், சித்தார்த் ஆனந்தின் பச்னா ஏ ஹசீனோ என்ற காதல் நகைச்சுவைத் திரைப்படத்தில் பிபாஷா பாசு, மினிஸ்ஷா லம்பா மற்றும் தீபிகா படுகோனே ஆகியோருடன் நடித்தார். 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று வெளிவந்த அத்திரைப்படம் வசூலில் ஓரளவு வெற்றி பெற்றது.[5] 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி வெளியான அவரது அடுத்த திரைப்படமான வேக் அப் சித், இந்தியாவிலும் அதேபோல வெளிநாடுகளிலும் சிறந்த வரவேற்பைப் பெற்றது. அக்டோபர் 15 ஆம் தேதி கணக்கின்படி, அப்படத்தின் முதல் வாரயிறுதி வசூல் ரூ. 215 மில்லியன் (ரூ. 21.5 கோடி) ஆகும். அதில் இந்தியாவில் மட்டும் ரூ. 170 மில்லியன் (ரூ. 17 கோடி) வசூலானது. ஐக்கிய இராச்சியத்தில் 165,934 டாலர் வசூலித்த இத்திரைப்படம் அமெரிக்க ஒன்றியத்தில் 355,532 டாலர் வசூலைப் பெற்றது. கரன் ஜோஹர் தயாரித்த இத்திரைப்படத்தை அய்யன் முகர்ஜி இயக்கினார்.

ரன்பீர், கத்ரீனா கைஃப்புடன் இணைந்து நடிக்கும் அஜாப் ப்ரேம் கி காசப் கஹானி என்ற ராஜ்குமார் சந்தோஷியின் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு முடிந்திருந்தது.[6] ஷிமித் அமீனின் ராக்கெட் சிங்: சேல்ஸ்மேன் ஆஃப் த இயர், அஜய் தேவ்கன் மற்றும் கத்ரீனா கைஃப்புடன் [7] இணைந்து நடிக்கும் பிரகாஷ் ஷாவின் ராஜ்னீதி மற்றும் பிரியங்கா சோப்ராவுடன் நடிக்கும் சித்தார்த் ஆனந்தின் அடுத்த படமான அஞ்சானா அஞ்சானி ஆகியவை அவரின் எதிர்காலத் திரைப்படங்களாகும்.

ரன்பீர் தான் இதுவரை நடித்ததிலேயே சித் பாத்திரமே நடிப்பதற்குக் சவாலான பாத்திரமாக இருந்தது என்று கூறுவார். தான் நிஜ வாழ்க்கையில் சித் கதாப்பாத்திரம் போல இல்லை என்பது நம்பமுடியாவிட்டாலும் அதுவே உண்மை என்றும் கூறினார்.[8]

விருதுகளும் பரிந்துரைகளும் தொகு

பிலிம்பேர் விருதுகள் தொகு

வெற்றி பெற்றது

  • 2008 – சாவரியா திரைப்படத்திற்காக சிறந்த ஆண் அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது

ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள் தொகு

வெற்றியாளர்

  • 2008 – சாவரியா திரைப்படத்திற்காக மிக நம்பிக்கையூட்டும் புதுமுகத்திற்கான ஸ்டார் ஸ்கிரீன் விருது - ஆண்
  • 2008 - நோக்கிய பியூச்சர் ஆப் எண்டர்டெயின்மெண்ட் விருது

பரிந்துரைக்கப்பட்டது

  • 2008 - ஸ்டார் ஸ்கிரீன் விருது ஜோடி நம்பர். 1 சோனம் கபூருடன் இணைந்து, சாவரியா திரைப்படத்திற்காக
  • 2009 - சிறந்த நடிகருக்கான ஸ்டார் ஸ்கிரீன் விருது, பச்னா ஏ ஹசீனோ திரைப்படத்திற்காக

ஜீ சினி விருதுகள் தொகு

வெற்றியாளர்

  • 2008 - சிறந்த அறிமுக நடிகருக்கான ஜீ சினி விருது, சாவரியா திரைப்படத்திற்காக

IIFA விருதுகள் தொகு

வெற்றியாளர்

ஸ்டார்டஸ்ட் விருதுகள் தொகு

வெற்றியாளர்

  • 2008 - ஸ்டார்டஸ்ட் நாளைய சூப்பர்ஸ்டார் - ஆண், சாவரியா திரைப்படத்திற்காக

அப்சரா திரைப்பட & தொலைகாட்சி தயாரிப்பாளர்களின் சங்க விருதுகள் தொகு

வெற்றியாளர்

  • 2008 – சிறந்த ஆண் அறிமுக நடிகர் , சாவரியா திரைப்படத்திற்காக

பிற விருதுகள் தொகு

  • 2007 - ஸ்டார்ஸ் சப்ஸே பேவரிட் கௌன் விருதுகள், சப்ஸே பேவரிட் நயா ஹீரோ , சாவரியா திரைப்படத்திற்காக
  • 2007 – HT கபே பிலிம் விருதுகள், சிறந்த புதுமுக விருது (ஆண்) , சாவரியா திரைப்படத்திற்காக
  • 2008 - ரீபோக் ஜூம் க்லாம் விருதுகள், க்லாம் அறிமுகம் (ஆண்) , சாவரியா திரைப்படத்திற்காக[9]
  • 2008 - பாலிவுட் பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது, சிறந்த ஆண் அறிமுகம் , சாவரியா திரைப்படத்திற்காக[10]

திரைப்பட விவரங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
2007 சாவரியா ரன்பீர் தாகுர் வெற்றியாளர் , சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது
2008 பச்னா ஏ ஹசீனோ ராஜ் ஷர்மா
2009 லக் பை சான்ஸ் அவராகவே கேமியோ
வேக் அப் சித் சித்
அஜாப் பிரேம் கி கசாப் கஹானி பிரேம்/ராஜ் சிங் ரத்தோட் நவம்ப 6, 2009 அன்று வெளியானது
Rocket Singh: Salesman of the Year ஹார்ப்ரீத் சிங் டிசம்பர் 11, 2009 அன்று வெளியாகிறது
2010 ராஜ்னீதி ஜனவரி 22, 2010 அன்று வெளியாகிறது
அஞ்சானா அஞ்சானி ப்ரீப்ரொடக்‌ஷன்
2012 பர்ஃபி! பர்ஃபி

சொந்த வாழ்க்கை தொகு

ரன்பீர் தற்போது தனது பெற்றோருடன் மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையிலுள்ள பாலி ஹில் என்ற இடத்தில் வசித்து வருகிறார். அவர் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுடன் டேட்டிங்கில் இருக்கிறார். எதிர்காலத்தில் திரைப்படங்களை இயக்கவும் தயாரிக்கவும் விருப்பமுள்ளதாகக் கூறியுள்ளார்.

குறிப்புகள் தொகு

  1. "Darsheel, Tabu bag critics award at Filmfare". Screen. February 24, 2008. பார்க்கப்பட்ட நாள் 27 August 2009. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  2. "Ranbir Kapoor biography". Yahoo. Archived from the original on 2009-12-15. பார்க்கப்பட்ட நாள் 2009-11-19.
  3. "Box Office 2007". BoxOfficeIndia.com. Archived from the original on 2012-07-30. பார்க்கப்பட்ட நாள் 2008-01-09.
  4. Adarsh, Taran (November 9, 2007). "Movie Review: Saawariya". IndiaFM. பார்க்கப்பட்ட நாள் 2007-11-28.
  5. "Box Office 2008". BoxOfficeIndia.com. Archived from the original on 2012-07-22. பார்க்கப்பட்ட நாள் 2009-01-31.
  6. Jha, Subhash K. (June 18, 2008). "Santoshi will begin shooting Ranbir-Katrina starrer tomorrow". IndiaFM. பார்க்கப்பட்ட நாள் 2008-06-21.
  7. ரன்பீர் கபூர் பாலிவுட்டின் சமீபத்திய நீலக்கண்ணன்
  8. "I am not at all like Sid".
  9. TNN (January 15, 2008). "Ranbir Kapoor:2008 Glam Debutant". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2008-01-15.
  10. "Planet Bollywood – People's Choice Awards". Planet Bollywood. Archived from the original on 2012-02-19. பார்க்கப்பட்ட நாள் 2009-02-09.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரன்பீர்_கபூர்&oldid=3569488" இலிருந்து மீள்விக்கப்பட்டது