ரமேஷ் - பிரேம்

பின்நவீனத்துவ அணுகுமுறை, இலக்கியக் கோட்பாடுகள், படைப்புகள் ஆகியவற்றைத் தமிழில் அறிமுகம் செய்து, அது குறித்த விவாதங்களை உருவாக்கி, தமிழ் இலகக்கிய அறிவுலகப் போக்கை ஆக்கபூர்வமானதாக மாற்றியவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் பிரேம்-ரமேஷ். பின்நவீனத்துவ படைப்பிலக்கியவாதிகளாகவும் விமர்சகர்களாகவும் அறியப்படுபவர்கள். கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், விமர்சனக் கட்டுரைகள் இவர்கள் இலக்கியப் பங்களிப்புகள். புதுச்சேரி அரசின். ”கம்பன் புகழ் விருது” இரண்டு முறை இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2007 முதல் இருவரும் இணைந்து எழுதுவதை விடுத்து தனித்தனியே தமது எழுத்துகளை அளித்துவருகின்றனர்.


ஆக்கங்கள் தொகு

கவிதை தொகு

  • இருபது கவிதைகளும் இரண்டாயிரம் ஆண்டுகளும்
  • கருப்பு வெள்ளைக் கவிதை
  • பேரழகிகளின் தேசம்
  • சக்கரவாளக் கோட்டம்
  • கொலை மற்றும் தற்கொலை பற்றி
  • அதீதனின் இதிகாசம்
  • உப்பு
  • நாவற்கொம்பு

நாடகம் தொகு

  • ஆதியிலே மாம்சம் இருந்தது (ஐந்து நாடகங்கள்)
  • இரண்டு பிரெஞ்சு நாடகங்கள்(மொழிபெயர்ப்பு)
  • பெர்னாதா அல்பாவின் இல்லம்(மொழிபெயர்ப்பு)

புனைவு தொகு

  • புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்ட மனிதர்களும்(நாவல்)
  • சொல் என்றொரு சொல்(நாவல்)
  • முன்பொரு காலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன (கதைகள்)
  • கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக் குறிப்புகள்(நெடுங்கதைகள்)
  • பரதேசி(கதைகள்)
  • மகாமுனி (கதைகள்)

அல்புனைவு தொகு

  • சிதைவுகளின் ஒருங்கமைவு : பின்நவீனத்துவப் பிரச்சனைப்பாடுகள்
  • கட்டுரையும் கட்டுக்கதையும்
  • பேச்சு மறுபேச்சு

மொழிபெயர்ப்பு தொகு

  • வரலாறு : மிகச்சுருக்கமான அறிமுகம்
  • பின்நவீனத்துவம்  :: மிகச்சுருக்கமான அறிமுகம்
  • இந்திய சிறுகதைகள் : 1900 - 2000

பிற தொகு

  • கி. ராஜநாராயணன் எழுத்துலகம்
  • இளையராஜா : இசையின் தத்துவமும் அழகியலும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமேஷ்_-_பிரேம்&oldid=2810138" இலிருந்து மீள்விக்கப்பட்டது