இரகுமான்கான்

தமிழக அரசியல்வாதி
(ரஹ்மான்கான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Rahmankhon.jpg

க. ரஹ்மான்கான் என்பவர் திராவிட முன்னேற்றக் கழக,தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழக அமைச்சரவையில் 1996 இல் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், இருமுறை தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைதலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

பிறப்புதொகு

ரஹ்மான்கான் அப்துல் ரசீது கான் என்பவருக்கு மகனாக அன்றைய மதுரை மாவட்டமும் தற்போதைய தேனி மாவட்டம் கம்பத்தில் பிறந்தார்.

கல்விதொகு

பள்ளிக்கல்வியை கம்பத்தில் உள்ள ஏல விவசாயிகள் ஐக்கிய உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை பட்டமும், சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று பட்டம் பெற்றார்.[1]

சட்டக்கல்லூரியில்தொகு

திமுகவை அண்ணா துவங்கிய பின்னர், மாணவரான ரகுமான்கான். சென்னை சட்டக் கல்லூரியில் துரைமுருகன், முரசொலி செல்வம் உள்ளிட்டோருடன் இணைந்து பல போராட்டங்களில் பங்கேற்றார். அதுவே பின்னர் அவரை அரசியலில் உயரத்துக்கு கொண்டு சென்றது.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில்தொகு

சட்டப்பேரவை முன்னாள் தலைவர் காளிமுத்து, கவிஞர் நா.காமராசன், முன்னாள் துணைவேந்தர் ராமசாமி ஆகியோருடன் இணைந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டார் ரகுமான்கான்.அதன் ஒரு பகுதியாக நடந்த சட்டநகல் எரிப்பு போராட்டத்திலும் பங்கேற்று சிறை சென்றார். இதன்மூலம் கருணாநிதியின் மனதில் இடம்பிடித்தார். [2]

தி.மு.க.வில்தொகு

நாவண்மை மிக்க இவர் தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாளராகவும், தலைமை செய்தித் தொடர்பாளராகவும் இருந்தார். தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். மேடைப் பேச்சில் இலக்கியமும், உலக வரலாறும் அருவியாகக் கொட்டும். சட்டசபையில் அவரது வார்த்தை வீச்சில் வந்து விழும் புள்ளிவிவரங்கள் எதிர்கட்சியினரை தெறிக்கவிடும்.[3]

சட்டமன்றத்தில்தொகு

சட்டமன்ற உறுப்பினராகதொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1977 சேப்பாக்கம் திமுக 38.40
1980 சேப்பாக்கம் திமுக 55.64
1984 சேப்பாக்கம் திமுக 56.26
1989 பூங்கா நகர் திமுக 49.25
1996 இராமநாதபுரம் திமுக 51.22 [4][5][6][7],[8],[9],[10]


மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரகுமான்கான்&oldid=3026593" இருந்து மீள்விக்கப்பட்டது