ராஜபாளையம் தங்கப்பூ ஜடையாரம்

இராசபாளையம் தங்கப்பூ சடையாரம்[1] என்பது திருமணத்தின் போது மணப்பெண்களுக்குச் சூட்டப்படும் ஒரு அலங்காரப் பொருள் ஆகும். இவை காலங்காலமாக விருதுநகர் மாவட்டம் இராசபாளையம் பகுதியில் கைவேலைப்பாடுகளுடன் தயார் செய்யப்படுகிறது. இந்த அலங்காரப்பொருள் கோவில்களில் அம்மன் ஊர்வலத்திலும் சாமிக்குச் சூட்டப்பட்டு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகிறது.

முக்கியத்துவம்

தொகு

ராஜபாளையம் பகுதியில் வாழும் ராஜூக்கள் அவர்களின் கல்யாணத்தில் மணப்பெண்களுக்குக் கூந்தலை அலங்கரிக்க தங்கப்பூ ஜடையாரம், குஞ்சங்கள் போன்றவற்றைப் பயன்படுத்திக் கல்யாண ஊர்வலம் நடத்துவார்கள்.

செய்யும் முறை

தொகு

சுத்த தங்கத்தைத் தகடாக முதலில் மாற்றி பின்னர் பலவகையான இரும்பு அச்சுக்களில் வைத்து 21 முதல் 23 வகையான தங்கப்பூக்கள் தயாரிக்கப்பட்டு இவற்றின் மேல் நாகர், கிருஷ்ணர் போன்ற தெய்வங்களின் உருவங்களும் பதிக்கப்படுகின்றன.

ஏற்றுமதி

தொகு

இந்த ராஜபாளையம் ஜடையாரங்கள் சிங்கப்பூர், லண்டன், அமெரிக்கா போன்ற வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மேற்கோள்

தொகு