ராஜா ரங்குஸ்கி (திரைப்படம்)

ராஜா ரங்குஸ்கி (Raja Ranguski) 2018இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தை தரணிதரன் இயக்கியுள்ளார்.. ஸ்ரீரீஷ் சரவணன், சாந்தினி தமிழரசன் ஆகிய இருவரும் முன்னணிக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அனுபமா குமார் ஒரு முக்கிய பாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளார். இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. நாயகி சாந்தினி, ரங்குஸ்கி என்ற படத் தலைப்பின் பெயரில் நடித்துள்ளார்.[1] இப்படம் பரவலாக நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

ராஜா ரங்குஸ்கி
இயக்கம்தரணிதரன்
கதைதரணிதரன்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஸ்ரீரீஷ் சரவணன்]]
சாந்தினி தமிழரசன்
அனுபமா குமார்
ஒளிப்பதிவுடி. கே. யுவா
படத்தொகுப்புஷபிக் மொஹமது அலி
கலையகம்வாசன் புரடக்‌ஷன்ஸ், பர்மா டாக்கீஸ்
வெளியீடு21 செப்டம்ப்ர் 2018
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம் தொகு

இது காவல் பணியுடன் எழுத்துப் பணியையும் செய்யும் ராஜா, ரங்குஸ்கி என்பவரின் காதலை அடிப்படையாக கொண்ட கதையாகும். மரியா பழங்கால பொருட்களைச் சேகரிப்பவர். அவர், தனது பாதுகாப்பிற்காக காவல் துறையின் உதவியை நாடுகிறார். இதற்காக காவல் துறை அதிகாரியான ராஜா அடிக்கடி மரியாவை சந்திக்கிறார். மரியாவும் ரங்குஸ்கியும் அருகருகே வசிக்கிறார்கள். ராஜா, ரங்குஸ்கியை கண்டவுடன் காதலிக்க முயல்கிறார். இதற்காக தொலைபேசியில் தனது அடையாளத்தை மறைத்து தன்னைக் காதலிக்குமாறு அவளை வற்புறுத்துகிறார். கடைசியில் ரங்குஸ்கி ஒருவழியாக ராஜாவின் மேல் காதலாகிறாள். இதன் பின்னரும் அடிக்கடி ரங்குஸ்கிக்கு தொலைபேசியில் மிரட்டல் வருவதும், தன்னையும் அவளை கொலை செய்யச் சொல்வதும் வரும் மிரட்டலினால் ராஜா, ரங்குஸ்கியை காப்பாற்ற விரைகிறான். அங்கே மரியா கொலை செய்யப்பட்டு கிடக்கிறார், சூழ்நிலை இப்போது ராஜாவை கொலைப்பழியில் தள்ளுகிறது. அங்கேயிருந்து தப்பித்த ராஜா உண்மைக் குற்றவாளியை கண்டுபிடிப்பதே இப்படத்தின் மீதிக்கதையாகும். முடிவில் எதிர்பாராத திருப்பம் ஒன்று கதையில் நிகழ்கிறது.

நடிகர்கள் தொகு

ராஜாவாக ஸ்ரீரீஷ் சரவணன்
ரங்குஸ்கியாக சந்தினி தமிழரசன்
மரியாவாக அனுபமா குமார்
பாஸ்கராக கல்லூரி வினோத்
கே. கே.வாக ஜெயகுமார் ஜானகிராமன்
ஆரோக்கியமாக சத்யா
மாதுவாக மாது ரகுராம்
ராஜாராமாக விஜய் ராகவன்
கோபி
சாயி சங்கர்
ரவிச்சந்திரன்
துரை பாண்டியாக குமார்.

தயாரிப்பு தொகு

முதலில் தரணிதரன் மற்றும் ஸ்ரீரீஸ் ஆகிய தாங்கள் இருவரும் 2016இல் மெட்ரோ (2016), என்ற பெயரில் வெளியிடப் போவதாக அறிவித்தனர். இதற்கு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஒப்புக்கொண்டார்.[2][3] பின்னர் இப்படத்தின் பெயர், பிரபல எழுத்தளர் சுஜாதா (எழுத்தாளர்) அவர்களின் பேனாவின் பெயரும், 2010இல் வெளிவந்த எந்திரன் (திரைப்படம்) படத்தில் வரும் ஒரு கொசுவின் பெயரைக் கொண்டு வெளிவந்தது.[4][5][6][7][8] இப்படத்தின் முன்னோட்டம் பெரிதும் எதிபார்க்கப்பட்டு வலைதளத்தில் பெரும் ஆதரவைப் பெற்றது. பர்மா (திரைப்படம்), ஜாக்சன்துரை (திரைப்படம்) போன்ற படங்களை அளித்த இயக்குனர் தரணிதரன் காவல் துறை விசாரணை மேற்கொள்ளும் ஒருபடமாக இதை நமக்கு வழங்கியுள்ளார்..[9]

மேற்கோள்கள் தொகு

வெளிப்புற இணைப்புகள் தொகு