ராஜா ராணி (2013 திரைப்படம்)
ராஜா ராணி இது 2013ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி காதல் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை புதுமுக இயக்குனர் அட்லீ குமார் எழுதி, இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் ஷங்கர் உடன் எந்திரன், நண்பன் போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜா ராணி | |
---|---|
இயக்கம் | அட்லீ |
தயாரிப்பு | ஏ. ஆர். முருகதாஸ் எஸ். சண்முகம் |
கதை | சி. எஸ். அமுதன் |
இசை | ஜி. வி. பிரகாஷ்குமார் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் |
படத்தொகுப்பு | அந்தோனி எல். ரூபன் |
கலையகம் | ஏ. ஆர் முருகதாஸ் புரடக்சன்ஸ் த நெக்ஸ்ட் பிக் பிலிம்ஸ் |
விநியோகம் | பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் |
வெளியீடு | செப்டம்பர் 27, 2013 |
ஓட்டம் | 159 நிமிடங்கள் |
நாடு | தமிழ்நாடு இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 13 கோடி (US $ 2.1 மில்லியன்) |
மொத்த வருவாய் | 80 கோடி (25 நாட்கள்) 10 கோடி (தெலுங்கு முதல் வாரம்) |
இந்த திரைப்படத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நசீம், சத்யராஜ், சந்தானம், சத்யன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.[1] இந்த திரைப்படம் செப்டம்பர் 27, 2013 அன்று வெளியானது. இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் ராஜா ராணி என்ற அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மார்ச் 14 அன்று வெளியானது. காதல் தோல்வியோடு வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. ஒவ்வொரு காதலுக்குப் பிறகும் இன்னொரு காதல் இருக்கிறது, இன்னொரு வாழ்க்கை இருக்கிறது என்பது தான் கதை. அது மீண்டும் மாற்றப்பட்டது 2015 ம் ஆண்டில் பௌத்தமாக சுது தோமாரி ஜான்னோ என பெயரிடப்பட்டது நடித்தார் தேவ்,சிராபந்தி சாட்டர்ஜி,சோஹம் சக்கரவர்த்தி,மற்றும மிமி சக்கரவர்த்தி.மற்றும ஓடியா து ஜீ சேய் நடித்தார் பாபுசான்
கதைச்சுருக்கம்
தொகுஆர்யா, நயன்தாரா இருவருக்கும் காதல் தோல்வி ஏற்பட, ஒரு கட்டத்தில் இவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் நடக்கிறது. இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலும், தங்களது பெற்றொர்களுக்காக திருமணம் செய்துகொள்ளும் இவர்கள் இல்லற வாழ்க்கையில் தடுமாற, இதற்கிடையில் இவர்களுடைய முந்தைய காதலைப் பற்றி இருவரும் அறிந்துகொள்கிறார்கள். பிறகு இவர்களுடைய தடுமாற்றம் நீடித்ததா அல்லது இவர்கள் இணைந்தார்களா என்பது தான் கதை.
நடிகர்கள்
தொகு- ஆர்யா - ஜான்
- ஜெய் - சூர்யா
- நயன்தாரா - ரெஜினா
- நஸ்ரியா நசீம் - கீர்த்தனா
- சத்யராஜ் -ஜேம்ஸ் (நயன்தாராவின் அப்பாவாக)
- சந்தானம் - சாரதி (ஆர்யாவின் நண்பனாக)
- சத்யன் - ஐயப்பன் (ஜெய்யின் நண்பனாக)
- மனோபாலா
- ராஜேந்திரன்
- தனியா பாலகிருஷ்ணா - நயன்தாராவின் தோழியாக
- மிஸா க்ஹோஷால் - நயன்தாராவின் தோழியாக
- சுவாமிநாதன்
- மதுமிதா
- கானா பாலா - ஒரு பாடலுக்கு மட்டும்
பாடல்கள்
தொகுராஜா ராணி | ||||
---|---|---|---|---|
ஒலிப்பதிவு ராஜா ராணி
| ||||
வெளியீடு | 23 ஆகஸ்ட் 2013 | |||
இசைப் பாணி | ஒலிப்பதிவு | |||
மொழி | தமிழ் | |||
இசைத் தயாரிப்பாளர் | ஜி. வி. பிரகாஷ் குமார் | |||
ஜி. வி. பிரகாஷ் குமார் காலவரிசை | ||||
|
# | பாடல் | வரிகள் | பாடகர்கள் | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "ஏ பேபி" | நா. முத்துக்குமார், கானா பாலா | ஜி. வி. பிரகாஷ் குமார், கானா பாலா, ஐசுவரியா | 05:06 | |
2. | "அஞ்ஞாடே" | பா. விஜய் | சக்திசிறீ கோபாலன் | 03:37 | |
3. | "சில்லென" | நா. முத்துக்குமார் | கிளிண்டன் செரெஜோ, அல்போன்சு ஜோசெப், அல்கா அஜித் | 05:12 | |
4. | "உன்னாலே" | நா. முத்துக்குமார் | வந்தனா சீனிவாசன் | 01:41 | |
5. | "ஓடே ஒடே" | பா. விஜய் | விஜய் பிரகாஷ், சாசா, சல்மாலி கோல்கடே | 04:32 | |
6. | "இமையே இமையே" | பா. விஜய் | ஜி. வி. பிரகாஷ் குமார், சக்திசிறீ கோபாலன் | 03:26 | |
7. | "எ லவ் ஃபார் லைஃப்" | ஜி. வி. பிரகாஷ்குமார், நவீன் ஐயர், சென்னை சிம்பொனி | 03:17 | ||
மொத்த நீளம்: |
26:50 |
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
தொகுவிழா | பிரிவு | வேட்பாளர் | முடிவு |
---|---|---|---|
எடிசன் விருதுகள் | சிறந்த நடிகை | நயன்தாரா | வெற்றி |
சிறந்த அறிமுக இயக்குநர் | அட்லீ குமார் | வெற்றி | |
சிறந்த பின்னணி இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் | வெற்றி | |
நோர்வே தமிழ்த் திரைப்பட விழா | மிகவும் பிரபலமான திரைப்படம் | பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், ஏ. ஆர் முருகதாஸ் புரடக்சன்ஸ் | வெற்றி |
விஜய் விருதுகள் | விருப்பமான நாயகி | நயன்தாரா | வெற்றி |
சிறந்த நடிகை | வெற்றி | ||
சிறந்த அறிமுக இயக்குநர் | அட்லீ குமார் | வெற்றி | |
சிறந்த கதை, திரைக்கதை எழுத்தாளர் | பரிந்துரை | ||
சிறந்த வசனம் | பரிந்துரை | ||
பிடித்த பாடல் | ஏ பேபி ஜி. வி. பிரகாஷ் குமார் |
பரிந்துரை | |
சிறந்த இசையமைப்பாளர் | பரிந்துரை | ||
சிறந்த பின்னணி இசை | பரிந்துரை | ||
சிறந்த துணை நடிகர் | சத்யராஜ் | பரிந்துரை | |
சிறந்த திரைப்படம் | பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், ஏ. ஆர் முருகதாஸ் புரடக்சன்ஸ் | பரிந்துரை | |
சிறந்த ஒளிப்பதிவாளர் | ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் | பரிந்துரை | |
சிறந்த படத்தொகுப்பாளர் | அந்தோனி எல். ரூபன் | பரிந்துரை | |
சிறந்த கலை இயக்குநர் | தி. முத்துராஜ் | பரிந்துரை | |
சிறந்த ஒப்பனை | ராமு, சண்முகம், ராமச்சந்திரன், ஆல்பர்ட் செட்டியார், அவினாஷ், புஜ்ஜி பாபு | பரிந்துரை | |
சிறந்த ஆடையமைப்பாளர் | சைதன்யா ராவ், தீபாலி நூர், சத்யா, Kaviza Raebhela | பரிந்துரை | |
பிலிம்பேர் விருதுகள் | சிறந்த நடிகை | நயன்தாரா | வெற்றி |
சிறந்த துணை நடிகர் | ஜெய் | பரிந்துரை | |
சிறந்த துணை நடிகர் | சத்யராஜ் | வெற்றி | |
சிறந்த துணை நடிகை | நஸ்ரியா நசீம் | பரிந்துரை | |
தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் | சிறந்த தமிழ் நடிகை | நயன்தாரா | Pending |
சிறந்த துணை நடிகர் ஆண் | ஜெய் | Pending | |
சிறந்த இசையமைப்பாளர் | ஜி. வி. பிரகாஷ்குமார் | Pending | |
சிறந்த அறிமுக இயக்குநர் | அட்லீ குமார் | Pending | |
சிறந்த திரைப்படம் | பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், ஏ. ஆர் முருகதாஸ் புரடக்சன்ஸ் | Pending |
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Jai to work with Nayanthara". Times of India. 27 September 2012. Archived from the original on 12 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 29 September 2012.