ராஜ்கர் மாவட்டம்
மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்
ராஜ்கார் மாவட்டம், இந்திய மாநிலமாகிய மத்தியப் பிரதேசத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைநகரம் ராஜ்கார் நகரம். இது 6, 154 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இதன் எல்லைக்குள் 1676 கிராமங்கள் உள்ளன. இங்கு வாழும் மக்களின் கல்வியறிவு 51% ஆகும். மாநில சட்டசபைக்கு ராஜ்கார் சட்டசபைத் தொகுதியில் இருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்திய அளவில் பின் தங்கிய மாவட்டங்களில் இதுவும் ஒன்று. தேசிய நெடுஞ்சாலை 3, 12 ஆகியன இந்த மாவட்டத்தின் போக்குவரத்திற்கு உதவுகின்றன. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இம்மாவட்டப் பகுதிகள் ராஜ்கர் சமஸ்தானம் மற்றும் கில்ச்சிபூர் சமஸ்தானம் பகுதிகளில் இருந்தது.
இதனையும் காண்க
தொகுசான்றுகள்
தொகுதொடர்புடைய தளங்கள்
தொகு- ராஜ்கார் மாவட்ட இணையதளம் பரணிடப்பட்டது 2016-05-16 at the வந்தவழி இயந்திரம்