ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்

ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் என்பவர் இந்திய துப்பாக்கி சுடு வீரரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை ஏதன்சில் நடந்த 2004 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வென்றார்.[1] இந்தியாவின் முதல் தனிநபர் வெள்ளிப் பதக்கமும், 2004 ஆண்டின் ஒரே பதக்கமும் இதுதான்.[2] இவர் இந்தியத் தரைப்படையில் பணியாற்றி 2013இல் ஓய்வு பெற்றார்.

வென்ற பதக்கங்கள்
ஆண்களுக்கான குறி பார்த்துச் சுடல்
வெள்ளி 2004 ஏதென்ஸ் Double trap

இவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து[3] 2014 இந்தியப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். நரேந்திர மோதியின் மத்திய அமைச்சரவையில் அருண் ஜெட்லிக்கு கீழுள்ள செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக உள்ளார்.

இவர் மீண்டும் 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.

மேற்கோள்கள்தொகு

  1. Shooter Rathore strikes silver
  2. Olympic medals won by Norman Pritchard - Stats - 2008 Beijing Olympic Games - ABC (Australian Broadcasting Corporation)
  3. Olympic hero Rajyavardhan Rathore joins BJP, quits army