ராஜ் பவேஜா (Raj Baveja) என்பவர் இந்திய மகளிர் மருத்துவ நிபுணர், மகப்பேறு மருத்துவர் மற்றும் அலகாபாத்தில் உள்ள மோதிலால் நேரு மருத்துவக் கல்லூரியின் மகளிர் மற்றும் மகப்பேறு துறையின் முன்னாள் தலைவர் ஆவார்.[1] இவர் அலகாபாத்தில் உள்ள கமலா நேரு நினைவு மருத்துவமனையின் கெளரவ மருத்துவ கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.  பவேஜா இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவர் இளம்பருவ மகளிர் மருத்துவம்,[2] கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பு மேலாண்மை பற்றிய பல மருத்துவ நூல்களை எழுதியுள்ளார்.[3] உலக சுகாதார அமைப்பின் இயல்பான பிறப்பில் பராமரிப்பு குறித்த பணிக்குழுவிற்கு இவர் உதவியிருக்கிறார்.[4][5] 2000ஆம் ஆண்டில் கருத்தடை குறித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவிற்குத் தலைமை தாங்கினார். இவர் தேசிய மருத்துவ அறிவியல் கழகத்தின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[6][7] இந்திய அரசு இவருக்கு 1983-ல் நாட்டின் நான்காவது உயரிய இந்தியக் குடிமகன் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது.

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Department of Obstetrics & Gynaecology". Motilal Nehru Medical College. 2015. பார்க்கப்பட்ட நாள் 4 July 2015.
  2. Krishna, Usha R. (2000). Adolescence. Orient Blackswan. பக். 194. https://books.google.com/books?id=wPQ6LVIQaQQC&q=Raj+Baveja&pg=PA10. 
  3. Krishna (2001). Pregnancy at Risk Current Concepts, (FOGSI). Jaypee Brothers Publishers. பக். 519. https://books.google.com/books?id=gadYMLeYXOkC&q=Raj+Baveja&pg=PR15. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Care in Normal Birth: a practical guide". World Health Organization. 2015. Archived from the original on 3 January 2021. பார்க்கப்பட்ட நாள் 4 July 2015.
  5. "Evaluating contraceptive choice through the method-mix approach". PubMed. 2015. Archived from the original on 5 July 2015. பார்க்கப்பட்ட நாள் 4 July 2015.
  6. "List of Fellows - NAMS" (PDF). National Academy of Medical Sciences. 2016. பார்க்கப்பட்ட நாள் 19 March 2016.
  7. "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 19 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 18 June 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்_பவேஜா&oldid=3639493" இலிருந்து மீள்விக்கப்பட்டது