ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா பல்கலைக்கழகம்

இராமகிருசுணா மிசன் விவேகானந்தா பல்கலைக்கழகம் (Ramakrishna Mission Vivekananda University) இராமகிருசுண இயக்கத்தினர் நிர்வகிக்கும் ஓர் பல்கலைக்கழகமாகும். இது சூலை 2005இல் பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தின் மூன்றாம் பிரிவின் கீழ் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக நடுவணரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.[1] இது நான்கு வளாகங்களில் இயங்குகின்றது: பேலூர், கோயம்புத்தூர், ராஞ்சி, நரேந்திரப்பூர்.

இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா பல்கலைக்கழகம்
रामकृष्ण मिशन विवेकानंद विश्वविद्यालय
வகைநிகர்நிலைப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்2005
அமைவிடம், ,
சேர்ப்புப.மா.கு
இணையதளம்http://www.rkmvu.ac.in/

இந்தப் பல்கலைக்கழகத்தில் ஊரக, பழங்குடியினர் வளர்ச்சி, குறைவீன மேலாண்மை மற்றும் சிறப்புக் கல்வி, அடிப்படை அறிவியல் கல்வி, இந்தியப் பண்பாடு மற்றும் ஆன்மீக பாரம்பரியம் குறித்த பல்வேறு பாடத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

இப்பல்கலைக்கழகத்தில் சூலை 2008இல் கணித அறிவியலுக்கான பள்ளி திறக்கப்பட்டது. வகுப்புகள் பேலூரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்திலும் கொல்கத்தாவில் விவேகானந்தர் வசித்த மூதாதையர் வீட்டிலுள்ள விவேகானந்தா ஆய்வு மையத்திலும் நடத்தப்படுகின்றன.

தனது பாடத்திட்டங்களை நாடெங்கிலும் உள்ள தனது சிறப்பு திணைக்கள மையங்களிலும் நடத்துகின்றது. கோயம்புத்தூரில் உள்ள வளாகத்தில் குறைவீன மேலாண்மை மற்றும் அவர்களுக்கான சிறப்புக் கல்வி குறித்த படிப்பு வகுக்கப்பட்டுள்ளது. இராஞ்சியிலும் நரேந்திரப்பூரிலும் உள்ள மையங்களில் ஊரக வளர்ச்சி, பழங்குடியினர் வளர்ச்சி, மேலாண்மை குறித்த படிப்பு வழங்கப்படுகின்றது.

மேற்சான்றுகள்

தொகு
  1. "UGC Act-1956" (PDF). mhrd.gov.in/. Secretary, University Grants Commission. பார்க்கப்பட்ட நாள் 1 February 2016.

வெளி இணைப்புகள்

தொகு