ராம் லட்சுமண்
ஆர். தியாகராஜன் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
ராம் லட்சுமண் (Ram Lakshman) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
ராம் லட்சுமண் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஆர். தியாகராஜன் |
தயாரிப்பு | சி. தண்டாயுதபாணி (தேவர் பிலிம்ஸ்) |
கதை | தேவர் பிலிம்ஸ் குழு |
இசை | இளையராஜா |
நடிப்பு | கமல்ஹாசன் ஸ்ரீபிரியா |
ஒளிப்பதிவு | வி. ராமமூர்த்தி |
படத்தொகுப்பு | எம். ஜி. பாலு ராவ் |
வெளியீடு | பெப்ரவரி 28, 1981 |
நீளம் | 3951 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- கமல்ஹாசன் - ராம்
- ஸ்ரீபிரியா - மீனா
- எம். என். நம்பியார் - சந்திரசேகர், ராமின் தந்தை, காவல்துறை ஆய்வாளர்.
- பண்டரிபாய் - மீனாட்சி, ராமின் தாயார் (சிறப்புத் தோற்றம் )
- எஸ். ஏ. அசோகன் - பரந்தாமன், மீனாவின் தந்தை.
- ரவீந்திரன் - ராஜா
- சிவசந்திரன் - குமார்
- சுருளி ராஜன்
- தேங்காய் சீனிவாசன்
- மேஜர் சுந்தரராஜன்
- வி. கோபாலகிருஷ்ணன்
- மாஸ்டர் பிட்டு
- மற்றும்
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை வாலியும் வைரமுத்துவும் எழுதியுள்ளனர்.
இத்திரைப்படத்தின் ஒரு பாடலான "நான் தான் உங்கப்பன்டா" எனும் பாடல் 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடக்கநாள் விழாவில் ஒரு பாடலாக ஒலிபரப்பு செய்யப்பட்டது[1].
எண். | பாடல் | பாடகர்(கள்) |
---|---|---|
1 | "நான் தான் உங்கப்பன்டா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
2 | "நடக்கட்டும்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
3 | "வாலிபமே வா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா |
4 | "விழியில் உன்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா |
5 | "ஓணான் ஒன்னு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Lesser-known Ilayaraja number at Olympics opener". The Hindu. 20 June 2012 இம் மூலத்தில் இருந்து 22 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20171222162901/http://www.thehindu.com/news/cities/chennai/lesserknown-ilayaraja-number-at-olympics-opener/article3547902.ece.