ராம் (திரைப்படம்)

அமீர் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ராம் (Raam) 2005 ஆம் ஆண்டு அமீரின் எழுத்து, தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மர்மம் தொடர்பான பரபரப்பூட்டும் இத்திரைப்படத்தில் ஜீவா, காஜலா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முதன்மை வேடங்களிலும் குணால் சா, இரகுமான், கஞ்சா கறுப்பு, முரளி ஆகியோர் துணை வேடங்களிலும் நடித்திருந்தனர். இப்படம் 2005 மார்ச் 4 அன்று வெளியிடப்பட்டு வெற்றி பெற்றது. இத்திரைப்படம் 2006-இல் சைப்ரஸ் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. விழாவில் ஜீவாவிற்கு சிறந்த நடிகர் விருது, யுவன் சங்கர் ராஜாவிற்கு சிறந்த இசையமைப்பாளர் விருது என இரண்டு விருதுகளை வென்றது. ஜீவா, சரண்யா ஆகியோரின் நடிப்பிற்காகவும், திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு ஆகியவற்றிற்காகவும், இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. இத்திரைப்படம் இந்தியில் போலோ ராம் (2009) என்றும் கன்னடத்தில் குச்சா 2 (2018) என்றும் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[1][2]

ராம்
இயக்கம்அமீர்
தயாரிப்புஅமீர்
கதைஅமீர்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஜீவா
கஸாலா
ரஹ்மான்
முரளி
சரண்யா
சக்தி
பிரதாப் பொத்தன்
கஞ்சா கருப்பு
விநியோகம்Teamwork Production House
வெளியீடு2005
மொழிதமிழ்

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

மகன் அவனது தாயைக் கொன்று விட்டதாக வரும் செய்தி கேட்டு அதிர்ந்து போகும் காவல்துறையினர் தமது தேடுதலின் பின்னர் உண்மையான கொலையாளி யார் என்பதனைக் கண்டுபிடிக்கின்றனர்.இதற்கிடையே கொலைகாரனாகக் கைது செய்யப்படும் காதலனைப் பார்த்து மனம் வருந்துகின்றார் ராமின் காதலி. ராமின் தாய் அவனின் காதலியின் சகோதரானால் கொல்லப்படும் செய்தி கேட்டறிகின்றான் ராம். மேலும் அவன் கஞ்சா போன்ற போதைபொருட்களினை உபயோகிப்பதனைப் பார்த்த ராமின் ஆசிரியரான தாயாரை யாருக்கும் தெரியாதவண்ணம் கொலையும் செய்யப்படுகின்றார். அதே சமயம் அங்கு வந்த ராம் இதனைப் பார்த்து திகைத்து நிற்கையில் தாயாரின் வயிற்றில் குத்தப்பட்டிருந்த கத்தியினை தன் கையிலெடுத்து பின் மயங்கி சரிகின்றார். இதற்கிடையில் கூடும் காவல்துறையினர் ராம் மீது கொலைப்பழியினையும் சுமத்துவது பரிதாபம். இறுதியில் கொலைகாரனாகக் கருதப்பட்ட ராம் செய்யாத தவறிற்காக சிறை சென்றதற்காகவும் தாயாரைக் கொலை செய்தவனைப் பழிவாங்குவதற்காகவும் மீண்டும் கொலை செய்யத் தூண்டப்படுகின்றான்.

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ஓர் இசைக்கருவிப் பாடலுடன் சேர்த்து மொத்தம் ஏழு பாடல்களை அமைத்திருந்தார். பாடல் வரிகளை சினேகன் எழுதியிருந்தார்.[3]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "பூம் பூம்"  யுவன் சங்கர் ராஜா, ஜோயஸ்தனா இராதாகிருஷ்ணன், பிரேம்ஜி அமரன், திப்பு 4:36
2. "ஆராரிராரோ நானிங்கே"  கே. ஜே. யேசுதாஸ் 4:46
3. "விடிகின்ற பொழுது"  சிறீமதுமிதா 3:59
4. "யாரோ அறிவால்"  மது பாலகிருஷ்ணன் 2:26
5. "மனிதன் சொல்கின்ற"  கே. ஜே. யேசுதாஸ், விஜய் யேசுதாஸ், இரஞ்சித் 4:41
6. "நிழலினை நிஜமும்"  விஜய் யேசுதாஸ், யுவன் சங்கர் இராஜா 5:21
மொத்த நீளம்:
25:49

மேற்கோள்கள்

தொகு
  1. Duara, Ajit (6 January 2010). "Bolo Raam". Open (Indian magazine)-Open. Archived from the original on 25 மார்ச்சு 2023. Retrieved 25 மார்ச்சு 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "Huchcha-2 cast and crew finalized". சிஃபி. 4 திசம்பர் 2014. Archived from the original on 8 திசம்பர் 2014. Retrieved 9 ஆகத்து 2022.
  3. "Raam (2005)". Raaga.com. Archived from the original on 23 September 2023. Retrieved 26 September 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_(திரைப்படம்)&oldid=4198361" இலிருந்து மீள்விக்கப்பட்டது