ரூபவதி நடராஜா
இந்த கட்டுரை விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கோ கலைக்களஞ்சிய கொள்கைகளுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம். இதனை நீக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது.
நீக்க வேண்டியதற்கான காரணம்: குறிப்பிடத்தக்கமை. மேலும் கருத்துக்களை இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். |
ரூபவதி நடராஜா (ஏப்ரல் 11, 1943) ஈழத்து நூலகவியலாளரும் எழுத்தாளரும் ஆவார். இலங்கை யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்டவர். 1981 ஆம் ஆண்டு சூன் 1 ஆம் திகதி யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டப்பட்டபோது நூலகத்தின் பிரதம நூலகராகக் கடமையாற்றியவர்.[1]
தனது யாழ்ப்பாணப் பொது நூலக பணிசார் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணப் பொது நூலகம்: அன்றும் இன்றும் எனும் நூலை 2019 இல் வெளியிட்டுள்ளார். இலங்கையிலிருந்து வெளிவந்த நூலகவியல் காலாண்டிதழின் ஆசிரியர்களுள் ஒருவராகவும் விளங்கினார்.[2] ரூபவதி தற்போது இங்கிலாந்தில் வசிக்கிறார்.
வாழ்க்கைக் குறிப்பு தொகு
ரூபவதி ஏப்ரல் 11, 1943 அன்று இலங்கை, யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த சுப்பிரமணியம் சின்னத்துரை - இராசம்மா இணையருக்கு மகளாகப் பிறந்தார்.
இவர் இராஜேந்திரம் நடராஜாவை[3] [197-?] ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.
கல்வி தொகு
ரூபவதி தனது ஆரம்பக்கல்வியை நாவலப்பிட்டி கதிரேசன் தமிழ்ப் பாடசாலையிலும் இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வியை யாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லூரியிலும் பயின்றார்.
பின்னர், பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலைப் பட்டப்படிப்பையும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நூலக அறிவியல் கற்கை நெறியையும் மேற்கொண்டார்.
தொழில் தொகு
1974ஆம் ஆண்டு தை மாதம் 10 ஆம் திகதி ரூபவதி யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் நூலகராக இணைந்து கொண்டார்.[3]
பின்னர், சிறிது காலம் கொழும்பு பொது நூலகத்தின் தமிழ்ப் பிரிவில் உதவி நூலகராகக் கடமையாற்றினார்.
1977 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பிரதம நூலகராகப் பதவியேற்று 1987 ஆம் ஆண்டு வரை கடமையாற்றினார். 1981 ஆம் ஆண்டு சூன் 1 ஆம் திகதி யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டப்பட்டபோதும் பின்னர் 1984 ஆம் ஆண்டு மீண்டும் திறக்கப்பட்டபோதும் நூலகத்தின் பிரதம நூலகராகக் கடமையாற்றினார்.[3]
இவர் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகவியல் பகுதிநேர விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
நூல்கள் தொகு
யாழ்ப்பாணப் பொது நூலகம்: அன்றும் இன்றும் தொகு
ரூபவதி எழுதிய யாழ்ப்பாணப் பொது நூலகம்: அன்றும் இன்றும் எனும் நூல் இலங்கை யாழ்ப்பாணப் பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி[4] வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியம் ஈலிங்கில் 2019 ஆம் ஆண்டு சூன் மாதம் முதலாம் திகதியும்[5] கனடா ஸ்காபுரோவில் சூலை மாதம் 27 ஆம் திகதியும் வெளியிடப்பட்டது.
உசாத்துணைகள் தொகு
- ↑ Selvarajah, N (2021). Rising from the Ashes: Tragic Episode of the Jaffna Library. London: Thesam Publishers. பக். 44.
- ↑ "ஆசிரியர் குழு". நூலகவியல் காலாண்டிதழ் மலர் 1; இதழ் 2: 2. 1985-12. https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_1985.12.
- ↑ 3.0 3.1 3.2 நடராஜா, ரூபவதி (2019). யாழ்ப்பாணப் பொது நூலகம்: அன்றும் இன்றும். கொழும்பு-சென்னை: குமரன் புத்தக இல்லம். பக். 60.
- ↑ "யாழ்ப்பாணப் பொது நூலகம்: அன்றும் இன்றும் நூல் வெளியீடு (யாழ்ப்பாணம்)". ஆவணகம். 2019-02-23. September 9, 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "யாழ்ப்பாணப் பொது நூலகம்: அன்றும் இன்றும் நூல் வெளியீடு (லண்டன்)". ஆவணகம். 2019-06-01. September 9, 2022 அன்று பார்க்கப்பட்டது.