ரூபினா முகிம்யார்

ஆப்கானித்தானின் தடகள வீராங்கனை

ரோபினா முகிம்யார் (Robina Muqimyar) (பிறப்பு ஜூலை 3, 1986) ரூபினா ஜலாலி எனவும் அறியப்படும் இவர் , முன்னாள் ஒலிம்பிக் விளையாட்டு வீரர் ஆவார். இவர் 2004லிலும், 2008 ஒலிம்பிக்கிலும் ஆப்கானித்தானை பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர், 30 சர்வதேச போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றார்.[1] இவர் முகிம்யார் என்ற பெயரில் தடகளத்தில் போட்டியிட்டார். ஆப்கானித்தானின் நாடாளுமன்றத்தின் கீழ் சபையான வோலேசி ஜிர்காவில் தனது குடும்பப் பெயரை ஜலாலி என்பதை பயன்படுத்தி அதிலும் ஒரு இடத்திற்கு போட்டியிட்டார்.[2]

ரூபினா முகிம்யார்
روبینا مقیم‌یار
தனிநபர் தகவல்
தேசியம் ஆப்கானித்தான்
பிறப்புசூலை 3, 1986 (1986-07-03) (அகவை 36)
காபுல், ஆப்கானித்தான்
விளையாட்டு
நாடுஆப்கானித்தான்

பாரம்பரிய முஸ்லிம் பெண்ணின் தலையை மறைக்கும் ஹிஜாப் அணிந்து கொண்டு விளையாட்டில் ஈடுபட்டபோது இவர் சர்வதேச கவனத்தை ஈர்த்தார்.[2]

ஏதென்ஸில் 2004இல் நடந்த கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் பிரிபா ரெசாயுடன் இணைந்து ஒலிம்பிக் போட்டிகளில் யுடோ விளையாட்டில் ஆப்கானித்தானை பிரதிநிதித்துவப்படுத்திய முதல் இரண்டு பெண்களில் ஒருவராக இருந்தார்.

ஜலாலி, ஆப்கானித்தானின் காபூலில் தனது பெற்றோருக்கு ஒன்பது குழந்தைகளில் ஒருவராக பிறந்தார் (ஏழு பெண்களும் இரண்டு ஆண் குழந்தைகளும்). இவருடைய தந்தை கணினித் துறையில் ஒரு தொழிலதிபராக இருந்தார். அவர் இப்போது ஒரு இலாப நோக்கற்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இது ஆப்கானித்தான் பெண்களுக்கு தையலைக் கற்றுக்கொடுக்கிறது.[2] தாலிபான்களின் காலத்தில் கல்வியிலும் சமூக வாழ்விலும் பெண்ணின் சுதந்திரத்திற்கும் தாலிபான்கள் விதித்த கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக ஜலாலி வீட்டிலேயே பள்ளிப் படிப்பைப் படித்தார். அப்போது பெண்களுக்குப் பள்ளி படிப்பது தடைசெய்யப்பட்டிருந்தது. இவர், 2001க்குப் பிறகு பள்ளியில் படித்தார்.[2] தலிபான்களின் கீழான வாழ்வை விவரித்து: " தாலிபானின் கீழ் பெண்கள் எதுவும் செய்யவில்லை. நாங்கள் பள்ளிக்கு செல்ல முடியாது. நாங்கள் விளையாட முடியவில்லை. எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நாங்கள் எப்போதும் வீட்டிலேயே இருந்தோம்" எனரு கூறினார்.[3]

2004 ஒலிம்பிக்தொகு

முகிம்யார், 2004 ஒலிம்பிக்கில் பெண்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றார்.[4] சோமாலியாவின் பார்த்தூன் அபுக்கர் ஓமரை விட 0.15 வினாடிகள் முன்னிலையில் 14.14 வினாடிகளில் எட்டாவது இடத்தைப் பிடித்தார். பந்தயத்தில் ஜமைக்காவின் வெரோனிகா காம்ப்பெல் 11.17 வினாடிகளில் வெற்றி பெற்றார்.[5] இந்த நிகழ்வின் போது இவருக்கு 17 வயது.[6] இவர் அதிக காற்றோட்டமான போட்டி ஆடைகளை விட "டி-சட்டையும், நீண்ட பச்சை கால்சராயும் " அணிந்து ஓடினார்.[7]

2008 ஒலிம்பிக்தொகு

2008ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இவர் ஆரம்பத்தில் போட்டியிடவில்லை.[8] ஆனால் நோர்வேயில் அரசியல் புகலிடம்[9] பெற்று தங்கியிருந்த மற்றொரு தடகள வீரர் மெகுபூபா அத்தியார் அங்கிருந்து வெளியேறி சூன் மாதத்தில் இவரது பயிற்சி முகாமில் சேர்ந்தவுடன் இவரும் ஆப்கானித்தானின் அணியில் இணைந்தார்.[10] 2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றார். இவரது முதல் சுற்றில் எட்டாவதாகவும் கடைசியாகவும் 14.80 வினாடி நேரத்தில் ஓடி முடித்தார். இது இரண்டாவது சுற்றுக்கு முன்னேற போதுமானதாக இல்லை.[1]

அரசியல் வாழ்க்கைதொகு

செப்டம்பர் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் பெண்களுக்கும் இளைஞர்களுக்குமான சம உரிமைகளின் பின்னணியில் இவர் சுயேட்சையாக போட்டியிட்டார்.[2][11] தான் வெற்றி பெற்றால் ஆப்கானித்தானில் பள்ளித் தடகளத்தை ஊக்குவிப்பதாக இவர் வாக்களித்தார்.[11] ஆனால் இவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.[12]

2019 இல் இவர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்ததால் 15 ஆகஸ்ட் 2021 அன்று ஆப்கானித்தான் அரசாங்கத்தின் வீழ்ச்சியால் அவரது பதவி பறி போனது.[13]

29 ஆகத்து 2021 முதல், (ஆகஸ்ட் 29 வரை) இவரைப் பற்றிய எந்த தடயமும் இல்லை.[14]

மேற்கோள்கள்தொகு

 1. 1.0 1.1 Athlete biography: Robina Muqimyar பரணிடப்பட்டது 2008-09-02 at the வந்தவழி இயந்திரம், beijing2008.cn, ret: Aug 27, 2008
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 David Nakamura (September 11, 2010). "One of Afghanistan's rare female Olympians now running for parliament". The Washington Post. https://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/09/11/AR2010091102504.html?hpid=topnews. David Nakamura (September 11, 2010). "One of Afghanistan's rare female Olympians now running for parliament". The Washington Post.
 3. "True Olympians", The Guardian, August 1, 2004
 4. "Afghan women's Olympic dream", BBC, June 22, 2004
 5. "The first Afghan women to participate in Track & Field: Robina Muqimyar 7th out of 8 in 100 meter sprint" பரணிடப்பட்டது 2022-11-08 at the வந்தவழி இயந்திரம், National Olympic Committee of the Islamic Republic of Afghanistan
 6. "Afghan women making Olympic history", USA Today, August 17, 2004
 7. "Afghan Woman Runs Toward Olympics Despite Jeers, Potential Danger", Associated Press, March 16, 2008
 8. "Afghan Athletes Train for Beijing Olympic ", Afghan embassy to the United States, April 29, 2008
 9. "Olympics-Against all odds, Afghans try their luck in Beijing", Reuters, August 9, 2008
 10. Fears ease after missing Afghan athlete found, Times of London, July 10
 11. 11.0 11.1 "Topic Running for Women's Rights in Afghanistan". The NATO Channel. ஆகஸ்ட் 25, 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. September 11, 2010 அன்று பார்க்கப்பட்டது.
 12. "Jalali, Robina Muqimyar Mrs". Who's Who in Afghanistan?. December 6, 2011 அன்று பார்க்கப்பட்டது.
 13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2021-09-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-09-08 அன்று பார்க்கப்பட்டது.
 14. FAZ.net (German)

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூபினா_முகிம்யார்&oldid=3629747" இருந்து மீள்விக்கப்பட்டது