ரெட்டிப் பேரரசு

ரெட்டிப் பேரரசு (Reddy kingdom) (ஆட்சி காலம்: கி பி 1325–1448)[1][2][3]தென்னிந்தியாவின் தற்கால ஆந்திரப் பிரதேசம் கடற்கரை மற்றும் மத்திய ஆந்திரப் பிரதேசத்தின் பகுதிகளை கொண்டது. காக்கத்தியர் பேரரசையும் மற்றும் தேவகிரி யாதவர்களை வென்ற பின்பு தில்லி சுல்தானகப் படைகளை எதிர் கொள்ள வேண்டி, புரோலய வேமா ரெட்டி என்பவர் இப்பேரரசை கி. பி 1325இல் நிறுவினார்.

ரெட்டிப் பேரரசு
1325–1448
14ஆம் நூற்றாண்டில் ரெட்டிப் பேரரசு
14ஆம் நூற்றாண்டில் ரெட்டிப் பேரரசு
தலைநகரம்அத்தன்கி (துவக்கம்)
கொண்டவீடு கோட்டை
ராஜமுந்திரி
பேசப்படும் மொழிகள்தெலுங்கு மொழி
சமயம்
இந்து சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்மத்தியகால இந்தியா
• தொடக்கம்
1325
• முடிவு
1448
முந்தையது
பின்னையது
[[காக்காத்தியர்]]
[[விசயநகரப் பேரரசு]]
[[கஜபதி பேரரசு]]

தோற்றம்

தொகு

தெலுங்கானா பகுதியை ஆண்ட காக்கத்தியர் பேரரசில், ரெட்டி இன மக்கள் படைத் தலைவரகளாகவும், குறுநில மன்னர்களாகவும் இருந்தவர்கள். தில்லி சுல்தான்களால், காகாதீயப் பேரரசு 1323இல் வீழ்ச்சி கண்ட பின், ரெட்டி குறுநில மன்னர்கள் தன்னாட்சியுன் ஆட்சி புரிந்தனர். புரொலய வேமா ரெட்டி என்பவர் தற்கால பிரகாசம் மாவட்டம், அத்தங்கி எனும் ஊரில் தற்காலிகமாக தலைநகரத்தை அமைத்து ரெட்டிப் பேரரசை 1325இல் நிறுவினார். பின்னர் ராஜமுந்திரிக்கு தலைநகரம் மாற்றம் செய்யப்பட்டது. [4][5]

பேரரசின் விரிவாக்கம்

தொகு
 
கொண்டவீடு கோட்டை, ரெட்டிப் பேரரசு, ஓவியம்

ரெட்டி பேரரசர்கள் மத்திய ஆந்திரத்தையும், கடற்கரை ஆந்திரப் பிரதேசத்தையும் 1325 முதல் 1448 முடிய ஆட்சி செய்தனர்.[1][6]பின்னர் வடக்கில் ஒடிசாவின் கட்டக் முதல் தெற்கில் காஞ்சிபுரம் மற்றும் மேற்கில் ஸ்ரீசைலம் வரை ரெட்டிப் பேரரசு விரிவு படுத்தப்பட்டது.[4] தற்காலிக தலைநகரம் அத்தங்கியிலிருந்து ராஜமுந்திரிக்கு மாற்றப்பட்டது.[7][8]இரண்டு மலைக் கோட்டைகளை கட்டினர். ஒன்று விஜயவடாவிற்கு வடமேற்கில் 20 கி. மீ தொலைவில் கொண்டபள்ளியில் ஒரு மலைக் கோட்டையும், மற்றொன்று குண்டூரிலிருந்து மேற்கில் 30 கி. மீ தொலைவில் கொண்டவீடு எனுமிடத்தில் ஒரு மலைக் கோட்டை கட்டினர்.[4][9] பெல்லம்கொண்டா, வினுகொண்டா மற்றும் நாகாஜூனா கோட்டைகள் ரெட்டி அரசின் கீழ் வந்தன. [4][10] ஒடிசாவின் கஜபதி பேரரசு, 15ஆம் நூற்றாண்டின் நடுவில் ரெட்டிப் பேரரசை வெற்றிக் கொள்ளும் வரை ஆந்திராவை ஆட்சி செய்தனர்.[3]

கிருஷ்ணதேவராயரால் கஜபதி பேரரசு வெற்றி கொள்ளப்பட்ட போது, ரெட்டிப் பேரரசும் கிருஷ்ணதேவராயால் வெற்றிக் கொள்ளப்படது.[11][12]

ரெட்டி பேரரசர்கள்

தொகு
  1. பிரளய வேமா ரெட்டி கி பி 1325-1424 - ரெட்டிப் பேரரசை நிறுவியவர்.
  2. அனவோதா ரெட்டி 1335-1364 - பிரளய வேமா ரெட்டியின் மகன்
  3. அனவெமா ரெட்டி 1364-1386 - அனவோதா ரெட்டியின் சகோதரன். ராஜமுந்திரி நகரத்தை இசுலாமியர்களிடமிருந்து கைப்பற்றி ரெட்டி அரசின் தலைநகரத்தை ராஜமுந்திரிக்கு மாற்றியவர்.
  4. கொமாரகிரி ரெட்டி 1386-1402 - அனவோதா ரெட்டியின் மகன்
  5. கட்டய வேமா ரெட்டி 1395-1414 - விசயநகரப் பேர்ரசர் ஹரிஹர ராயலுவின் மகளை மணம் செய்து கொண்டவர்.
  6. அல்லாதா ரெட்டி 1414-1423
  7. வீரபத்திர ரெட்டி 1423-1448

சமயம் & இலக்கியம்

தொகு
 
ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில், ஸ்ரீசைலம்
 
நரசிம்மர் கோயில், அகோபிலம்

ரெட்டி அரசர்கள் சைவ சமயத்திற்கும், வைணவ சமயத்திற்கு ஆதரவாக இருந்தனர். ஸ்ரீசலைத்தில் சிவன் கோயிலையும், அகோபிலத்தில் நரசிம்மர் கோயிலையும் அன்னியப் படையெடுப்புகளிலிருந்து காத்து பராமரித்தனர். இவ்வரசின் காலத்தில் ஆந்திரத்தில் சமசுகிருதம் வளர்ந்து பல இலக்கியங்களை வழங்கியது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Pran Nath Chopra (1982). Religions and communities of India. Vision Books. p. 136. பார்க்கப்பட்ட நாள் 4 July 2011.
  2. Mallampalli Somasekhara Sarma; Mallampalli Sōmaśēkharaśarma (1948). History of the Reddy kingdoms (circa. 1325 A.D. to circa 1448 A.D.). Andhra University. பார்க்கப்பட்ட நாள் 8 July 2011.
  3. 3.0 3.1 Government Of Madras Staff; Government of Madras (1 January 2004). Gazetteer of the Nellore District: brought upto 1938. Asian Educational Services. p. 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-1851-0. பார்க்கப்பட்ட நாள் 1 July 2011.
  4. 4.0 4.1 4.2 4.3 Gordon Mackenzie (1990). A manual of the Kistna district in the presidency of Madras. Asian Educational Services. pp. 9, 10, 224–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-0544-2. பார்க்கப்பட்ட நாள் 6 July 2011.
  5. P. Sriramamurti (1972). Contribution of Andhra to Sanskrit literature. Andhra University. p. 60. பார்க்கப்பட்ட நாள் 28 August 2011.
  6. Kapila Kasipathi (1970). Tryst with destiny. K. V. Rao. pp. 4, 6. பார்க்கப்பட்ட நாள் 6 July 2011.
  7. Sheldon I. Pollock (2003). Literary cultures in history: reconstructions from South Asia. University of California Press. pp. 385–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-22821-4. பார்க்கப்பட்ட நாள் 8 July 2011.
  8. Reddys of Rajahmundry: http://www.rajahmundry.net/rajahmundry/history.asp#Rajamahendravaram பரணிடப்பட்டது 2007-04-28 at the வந்தவழி இயந்திரம்
  9. Sir William Wilson Hunter; Great Britain. India Office (1908). Imperial gazetteer of India. Clarendon Press. p. 393. பார்க்கப்பட்ட நாள் 6 July 2011.
  10. W. Francis (1988). Gazetteer of South India. Mittal Publications. pp. 333–. GGKEY:4Y158YFPNGZ. பார்க்கப்பட்ட நாள் 31 August 2011.
  11. Hermann Kulke; Dietmar Rothermund (2004). A history of India. Routledge. p. 189. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-32919-4. பார்க்கப்பட்ட நாள் 16 August 2011.
  12. Chenchiah; Bhujanga (1 January 1988). A History of Telugu Literature. Asian Educational Services. pp. 24, 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-0313-4. பார்க்கப்பட்ட நாள் 16 August 2011.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெட்டிப்_பேரரசு&oldid=3227075" இலிருந்து மீள்விக்கப்பட்டது