ரெய்க்ஸ்டாக் கட்டடம்
ரெய்க்ஸ்டாக் கட்டடம் (Reichstag building, இடாய்ச்சு மொழி: Reichstagsgebäude; உத்தியோகபூர்வமாக: Plenarbereich Reichstagsgebäude) என்பது பேர்லினில் அமைந்துள்ள வரலாற்று மாளிகையும், செருமானிய பேரரசின் ரெய்க்ஸ்டாக் என்றழைக்கப்படும் நாடாளுடன்றமும் ஆகும். இது 1894 இல் திறக்கப்பட்டு[1] 1933 தீயினால் பாரதூரமாக சேதமாகும் வரை நாடாளுடன்றமாகச் செயற்பட்டது. இரண்டாம் உலகப்போரின் பின் இக்கட்டடம் பாவனைக்கு இல்லாதுபோனது. மேற்கு, கிழக்கு செருமனிகளின் நாடாளுடன்றங்கள் வெவ்வேறு இடங்களின் இயங்கின.
ரெய்க்ஸ்டாக் | |
---|---|
ரெய்க்ஸ்டாக் கட்டடம். அர்ப்பணிப்பு Dem deutschen Volke, அர்த்தம் செருமனிய மக்களுக்கு, இதனை கட்டடத்தின் மேலுள்ள பட்டையில் காணலாம். | |
பொதுவான தகவல்கள் | |
நகரம் | பேர்லின் |
நாடு | செருமனி |
கட்டுமான ஆரம்பம் | 9 சூன் 1884 |
நிறைவுற்றது | 1894 |
புதுப்பித்தல் | 1961-64, 1992 |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | போல் வோலட் |
புதுப்பித்தல் குழு | |
கட்டிடக்கலைஞர்(கள்) | நோர்மன் போஸ்டர் |
1960 இல் அழிவுற்றிருந்த கட்டடம் பகுதியாக புதுப்பிக்கப்பட்டது. ஆயினும், 3 ஒக்டோபர் 1990 இல் செருமானிய மீளிணைவு வரை முழுமையான புதுப்பித்தல் மேற்கொள்ளப்படவில்லை. அதன் பின் ஆரம்பிக்கப்பட்ட முழுமையான புதுப்பித்தல் 1999 இல் நிறைவுற்று, செருமானிய நாடாளுடன்ற கூடுமிடமாக மாறியது.
உசாத்துணை
தொகு- ↑ "Reichstag". பார்க்கப்பட்ட நாள் 10 நவம்பர் 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புக்கள்
தொகு- Website of the German parliament
- panoramas and other images of the German Reichstags building in Berlin பரணிடப்பட்டது 2017-06-30 at the வந்தவழி இயந்திரம்
- Wrapped Reichstag பரணிடப்பட்டது 2005-02-10 at the வந்தவழி இயந்திரம்
- Learn about the Reichstag's Architecture
- Photos of the Reichstag from 1989 and Photos of the 1945 Battle for the Reichstag.
- Article in Exberliner Magazine [தொடர்பிழந்த இணைப்பு]
- Reichstag and vicinity at dawn, July 1971. From the "Berlin 1969" website.
- Panoramic view of The Reichstag (building)[தொடர்பிழந்த இணைப்பு]