ரேடியம் ஐதராக்சைடு
ரேடியம் ஐதராக்சைடு (Radium hydroxide) என்பது Ra(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ரேடியமும், ஐதரசன் ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1] சுழிய அயனி வலிமையில் நீரிய RaOH+ அயனி இணையின் நிலைப்புத்தன்மை மாறிலியின் மதிப்பு ஐந்துக்கு சமமாகும்.[2]
இனங்காட்டிகள் | |
---|---|
98966-86-0 | |
ChemSpider | 66737595 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
H2O2Ra | |
வாய்ப்பாட்டு எடை | 260.01 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள் |
கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகு- ரேடியமும் தண்ணீரும் சேர்ந்து வினைபுரிந்தால் ரேடியம் ஐதராக்சைடு உருவாகும்:[3]
- Ra + 2H2O → Ra(HO)2 + H2
- ரேடியம் ஆக்சைடு சேர்மமும் தண்ணீரும் வினைபுரிந்தாலும் ரேடியம் ஐதராக்சைடு உருவாகும். இவ்வினையில் அதிக அளவிலான வெப்பம் வெளியிடப்படுகிறது:[4]
- RaO + H2O → Ra(HO)2
- ரேடியம் நைட்ரேட்டுடன் சோடியம் ஐதராக்சைடு கரைசலை வினைபுரியச் செய்தும் ரேடியம் ஐதராக்சைடு தயாரிக்கப்படுகிறது[4]
இயற்பியல் பண்புகள்
தொகுரேடியம் ஐதராக்சைடு நிறமற்ற படிகங்களாக உருவாகிறது. இது பேரியம் ஐதரக்சைடை விட அதிகமாக தண்ணீரில் கரைகிறது. மேலும் அதிகமான காரப் பண்புகளையும் கொண்டுள்ளது.
ரேடியம் ஐதராக்சைடு Ra(OH)2·8H2O என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட நீரேற்றாகவும் உருவாகிறது.[5]
ரேடியம் ஐதராக்சைடு நச்சு மற்றும் அரிக்கும் தன்மை கொண்ட வேதிப்பொருள் ஆகும். பேரியம் ஐதராக்சைடு (Ba(OH)2) மற்றும் இசுட்ரோன்சியம் ஐதராக்சைடு (Sr(OH)2) ஆகியவற்றை விட குறிப்பிடத்தக்க அளவு நச்சுத்தன்மை வாய்ந்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Brown, Paul L.; Matyskin, Artem V.; Ekberg, Christian (1 June 2022). "The aqueous chemistry of radium" (in en). Radiochimica Acta 110 (6–9): 505–513. doi:10.1515/ract-2021-1141. பன்னாட்டுத் தர தொடர் எண்:2193-3405. https://www.degruyter.com/document/doi/10.1515/ract-2021-1141/html?lang=en. பார்த்த நாள்: 8 June 2023.
- ↑ Matyskin, Artem V.; Brown, Paul L.; Ekberg, Christian. "Weak barium and radium hydrolysis using an ion exchange method and its uncertainty assessment". Journal of Chemical Thermodynamics 128: 362-371. https://www.sciencedirect.com/science/article/pii/S0021961418303239.
- ↑ "Alkaline Earth Hydroxide - an overview | ScienceDirect Topics". ScienceDirect. பார்க்கப்பட்ட நாள் 8 June 2023.
- ↑ 4.0 4.1 Ropp, Richard C. (31 December 2012). Encyclopedia of the Alkaline Earth Compounds (in ஆங்கிலம்). Newnes. p. 124. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-59553-9. பார்க்கப்பட்ட நாள் 8 June 2023.
- ↑ Schweitzer, George K.; Pesterfield, Lester L. (14 January 2010). The Aqueous Chemistry of the Elements (in ஆங்கிலம்). Oxford University Press. p. 448. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-974219-6. பார்க்கப்பட்ட நாள் 8 June 2023.