ரோகில்கண்ட்

ரோகில்கண்ட் (Rohilkhand) என்பது வட இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வடமேற்கு பகுதிகளாகும். இப்பகுதியினை ரோகில்கண்ட் என இங்கு குடியேறிய ஆப்கானிய பஷ்தூன் மக்களால் பெயரிடப்பட்டது. எனவே இப்பகுதியில் வாழ்ந்த ஆப்கானிய பஷ்தூன் இன மக்களை ரோகில்லா பதான்கள் என வரலாற்று ஆசிரியர்கள் அழைப்பர். [1]

வரலாற்றுக் கால வட இந்தியப் பகுதிகள்
ரோகில்கண்ட்
ரோகில்கண்ட் பகுதியில் ஒரு தர்காவின் ஓவியம்
Location உத்தரப் பிரதேசம்
State established: கி பி 1690
மொழி உருது
இந்தி
அரச குலங்கள் பாஞ்சாலர்கள்
மொகலாயர்கள் (1526–1736)
ரோகில்லாக்கள் (1736–1858)
Historical capitals பரேலி
பதாவுன்
Separated sube தற்கால பரேலி
மொராதாபாத்
ராம்பூர்
பிஜ்னோர்
பிலிபித்
ஷாஜகான்பூர்
பதாவுன்
உத்தரப் பிரதேசத்தின்ரோகில்கண்ட், தோவாப்,அவத், புந்தேல்கண்ட், பூர்வாஞ்சல், பகேல்கண்ட் பகுதிகள்

மகாபாரத இதிகாசத்தில் ரோகில்கண்ட் பகுதியை மத்சய நாடு எனக் குறிப்பிட்டுள்ளது. [2]

புவியியல்

தொகு

கங்கைச் சமவெளியின் மேற்பகுதியில் 25,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வளமான வண்டல் மண் கொண்ட நிலப்பகுதியாகும். ரோகில்கண்ட் பகுதியின் தெற்கில் கங்கை ஆறும். மேற்கில் உத்தராகண்டம் மாநிலம், வடக்கில் நேபாளம், கிழக்கில் அவத் இராச்சியப் பகுதிகளை எல்லைகளாகக் கொண்டது.

ரோகில்கண்ட் பகுதியில் தற்கால உத்தரப் பிரதேச மாநிலத்தின் பரேலி மாவட்டம், மொராதாபாத் மாவட்டம், ராம்பூர் மாவட்டம், பிஜ்னோர் மாவட்டம், பிலிபித் மாவட்டம், ஷாஜகான்பூர் மாவட்டம், பதாவுன் மாவட்டங்கள் அடங்கியிருந்தது.

வரலாறு

தொகு

இராஜபுத்திர குல மன்னர்களின் எழுச்சியை அடக்க மொகலாய மன்னர் அவுரங்கசீப் ஆப்கானிய முரட்டு பழங்குடி மக்களான பஷ்தூன் மக்களை இப்பகுதியில் கூட்டம் கூட்டமாக குடியமர்த்தினார். [3][3][4] பஷ்தூன் மொழியில் ரோ எனில் மலைகள் என்று பொருள். எனவே ரோகில்லாக்கள் எனில் மலை மக்கள் எனப் பொருள்படியாக இப்பகுதியை ரோகில்கண்ட் என பெயரிட்டனர். இவர்களது தலைநகரம் பரேலி நகரம் ஆகும்.[1]

மராத்தியப் படைகள் 1751–1752-ஆம் ஆண்டில் ஆப்கானியர்கள் ஆண்ட ரோகில்கண்ட் பகுதியையும், அயோத்தி நவாபிடமிருந்து அவத் இராச்சியத்தையும் கைப்பற்றினர். [5] போரில் தோற்ற ஆப்கானிய ரோகில்லாக்கள் தற்கால உத்தராகண்டம் மாநில குமாவுன் மலைப்பகுதிகளில் புகழிடம் அடைந்தனர்.

பின்னர் 1761-இல் நடந்த மூன்றாம் பானிபட் போரில் ஆப்கானிய மன்னர் அகமது ஷா துரானி மராத்தியர்களை வென்று, தில்லியை கைப்பற்றியவுடன், [6] குமாவுன் மலைப்பகுதியில் இருந்த ஆப்கானிய பஷ்தூன் மக்கள் மீண்டும் ரோகில்கண்ட் பகுதியில் குடியேறினர்.

கம்பெனி ஆட்சியின் போது ரோகில்கண்ட் பகுதியை ஆண்ட ஆப்கானிய மன்னர்கள், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களுக்கு ஆண்டு தோறும் குறிப்பிட்ட தொகையை திறை செலுத்தி, ஆங்கிலேயர்களுக்கு அடங்கி ஆண்டனர்.

இந்தியா விடுதலைக்குப் பின்னர் ரோகில்கண்ட் பகுதி உத்தரப் பிரதேச மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.

ஆட்சியாளர்கள்

தொகு

பரேலி நகரை தலைநகராகக் கொண்டு ரோகில்கண்ட் பகுதியை ஆப்கானிய ரோகில்லாக்கள் 1719 முதல் 1858 முடிய ஆண்டனர். சிப்பாய்க் கிளர்ச்சிக்குப் பின்னர் ரோகில்கண்ட் பகுதி ஆங்கிலேயரின் நேரடி ஆட்சியின் கீழ் சென்றது.

பெயர் ஆட்சி துவக்கம் ஆட்சி முடிவு
அலி முகமது கான் 1719 15 செப்டம்பர் 1748
பைசுல்லா கான் 15 செப்டம்பர் 1748 24 சூலை 1793
ஹபீஸ் ரகமத் கான் 15 செப்டம்பர் 1748 23 ஏப்ரல் 1774
முகமது அலி கான் பகதூர் (காப்பாளர்) 24 சூலை 1793 11 ஆகஸ்டு 1793
குலாம் முகமது கான் பகதூர் 11 ஆகஸ்டு 1793 24 அக்டோபர் 1794
அகமது அலி கான் பகதூர் 24 அக்டோபர் 1794 5 சூலை 1840
நசுருல்லா கான் (காப்பாளர்) 24 அக்டோபர் 1794 1811
முகமது சேத் கான் பகதூர் 5 சூலை 1840 1 ஏப்ரல் 1855
யூசுப் அலி கான் பகதூர் 1 ஏப்ரல் 1855 21 ஏப்ரல்1858

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Rohilla   இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. .
  2. Encyclopædia Britannica Online: Rohilkhand
  3. 3.0 3.1 Agrawal, Ashvini. Studies In Mughal History.
  4. Playne, Somerset; Solomon, R. V.; Bond, J. W.; Wright, Arnold. Indian States: A Biographical, Historical, and Administrative Survey.
  5. Rathod, N. G. The Great Maratha: Mahadaji Scindia.
  6. Rathod, N. G. The Great Maratha: Mahadaji Scindia.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோகில்கண்ட்&oldid=4057413" இலிருந்து மீள்விக்கப்பட்டது