இரோசெச்டர் பல்கலைக்கழகம்

(ரோசெஸ்டர் பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இரோசெச்டர் பல்கலைக்கழகம் (University of Rochester) பரவலாக இரோசெச்டர், நியூயார்க் மாநிலத்தில் இரோசெச்டரில் அமைந்துள்ள தனியார் துறை, சமயச்சார்பற்ற, ஆய்வு பல்கலைக்கழகம் ஆகும்.[4] இப்பல்கலைக்கழகம் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் முனைவர் பட்ட ஆய்வுகளை வழங்கிவருகிறது. தொழில்சார் கல்வியும் வழங்கப்படுகின்றது. இப்பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் 6 பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள், 2 பேராசிரியர்கள், மற்றும் 1 மூத்த ஆய்வுக் கூட்டாளி நோபல் பரிசு பெற்றுள்ளனர்; 32 துறையாசிரியர்கள் அறிவியல், பொறியியல், மருத்துவத் துறைகளில் தேசிய அகாதமிகளில் இடம்பெற்றுள்ளனர்; 12 முன்னாள் மாணவர்களும் துறையாசிரியர்களும் புலிட்சர் பரிசு வென்றுள்ளனர்; 20 துறையாசிரியர்களுக்கு குக்கென்னெய்ம் பெல்லோசிப் கிடைத்துள்ளது.[5]

இரோசெச்டர் பல்கலைக்கழகம்
இலத்தீன்: Universitas Rocestriensis
குறிக்கோளுரைமெலியோரா (இலத்தீன்)
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
என்றும் சிறப்பாக (அல்லது, எப்போதும் சிறப்பு)
வகைதனியார், சமயச்சார்பற்றது
உருவாக்கம்1850
நிதிக் கொடை$2.35 பில்லியன் (2017)[1]
தலைவர்ரிச்சர்டு பெல்டுமேன் (interim)[2]
Provostராபர்ட்டு கிளார்க்
நிருவாகப் பணியாளர்
1,225
மாணவர்கள்11,126
பட்ட மாணவர்கள்6,304
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்4,822
அமைவிடம், ,
ஐ.அ.
வளாகம்புறநகர்/நகர்ப்புறம், 600 ஏக்கர்கள் (2.4 km2)
நிறங்கள்டண்டலியன் மஞ்சள், இரோசெச்டர் நீலம்[3]
வார்ப்புரு:College color boxes
தடகள விளையாட்டுகள்என்.சி.ஏ.ஏ. டிவிசன் III – பல்கலை தடக்களச் சங்கம்
சுருக்கப் பெயர்Yellowjackets
நற்பேறு சின்னம்Rocky the Yellowjacket
இணையதளம்www.rochester.edu

மேற்கோள்கள் தொகு

  1. http://www.rochester.edu/endowment/performance-reports/
  2. "Richard Feldman appointed interim president". NewsCenter. University of Rochester. 12 January 2018. பார்க்கப்பட்ட நாள் 20 February 2018.
  3. University of Rochester Identity Guide. http://www.rochester.edu/creativeservices/identityguide_2017.pdf. பார்த்த நாள்: June 25, 2017. 
  4. rochester.edu
  5. "Points of Pride". www.rochester.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-12-30.

வெளியிணைப்புகள் தொகு