லட்சுமி ஆலைகள்

லட்சுமி ஆலைகள் (Lakshmi Mills) என்பது இந்தியாவின் கோயம்புத்தூரிலுள்ள, ஒரு பெரிய துணி நூற்பாலை மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் ஜி. குப்புசாமி நாயுடு என்பவரால் 1910 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.[1]

கோவில்பட்டி மற்றும் பல்லடம், அவிநாசி சாலையில் இந்த நிறுவனத்தின் இரண்டு துணி கலப்புத் தொகுதிகள் உள்ளன. மேலும் துணி நெய்வதற்குத் தேவையான இயந்திரந்களைத் தயாரிக்கும் லட்சுமி இயந்திர வேலைகள் (எல் எம் வி) உள்ளிட்ட நிறுவனங்களும் இதன் நிர்வாகத்தின் கீழ் நடைபெறுகிறது. கோயம்புத்தூரிலுள்ள பாப்பநாயக்கன்பாளையத்திலும் ஒரு நூற்பாலைத் தொகுதி உள்ளது. அது அந்தப் பகுதிக்கு நில எல்லைக் குறியாக உள்ளது.

வரலாறு தொகு

இந்த நிறுவனத்தைத் தோற்றுவித்த ஜி. குப்புசாமி நாயுடு பாப்பநாயக்கன்பாளையத்தில், கோயம்புத்தூர் பிறந்தார். பஞ்சுப்பிரித்தல் வணிகத்தை கோயம்புத்தூரில் செய்து வந்தார். பின் 1910 இல் லட்சுமி ஆலைகளைத் தோற்றுவித்து அங்கு பருத்தி நூல் மற்றும் துணிகளை லட்சுமி ஆலைகள் எனும் சிட்டையில் (லேபிள்) அவினாசி சாலையில் உள்ள நிறுவனத்தில் உற்பத்தி செய்யத் துவங்கினர். 1940 ஆம் ஆண்டின் மத்தியில் கோவில்பட்டியில் ஒரு நூற்பாலைத் தொகுதியைத் தொடங்கினர். 1960 இன் மத்தியில் பல்லடத்தின் நூற்பாலைத் தொகுதி செயல்பாட்டிற்கு வந்தது. 1930 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு சிங்காநல்லூரில் செயல்பட்டு வந்த கோயம்புத்தூர் பருத்தி நூற்பாலை 1977 இல் லட்சுமி ஆலைகள் நிறுவனத்துடன் இணைந்தது. இந்தத் தொகுதி லட்சுமி ஆலைகளின் நிர்வாகத்தின் கீழ் 1950 இல் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் காட்சிக்கூடங்கள் தென் தமிழகத்தின் பல முக்கிய நகரங்களில் உள்ளன. அதில் சட்டைகள், புடவைகள், போன்றவைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

நிறுவன மேம்பாடு தொகு

லட்சுமி ஆலைகள் நிறுவனம் துணிநெய்யத் தேவையான கருவிகள் உற்பத்தியிலும் கால்பதித்தது. குறிப்பாக லட்சுமி இயந்திர வேலைகள் (எல் எம் வி), லட்சுமி தானியங்கி தறி , லட்சுமி ரிங் சுற்று வனிகர் (டிராவல்லர்ஸ்) போன்றவை. மேலும் இந்த நிர்வாகம் தென் தமிழகத்தில் செயற்கை இழைக்கான மரக் குழைமம் உற்பத்தியைத் துவங்கியது. இதற்கான தொழில்நுட்ப உரிமையை இத்தாலி நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளது.

குறிப்பிடத்தகுந்த இயக்குனர்கள் தொகு

ஜி. குப்புசாமி நாயுடு தொகு

இந்த நிறுவனத்தை 1910 ஆம் ஆண்டு உருவாக்கியது ஜி. குப்புசாமி நாயுடு ஆவார். இந்தியா, ஆங்கிலேய அரசுகளின் கீழ் இருந்த சமயத்தில் நெசவுத் தொழிற்துறையிலும் அவர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. ஏனெனில் அதற்கானத் தொழிற்சாலைகள் அவர்களுக்கே சொந்தமாக இருந்தது. இந்த ஆலைகளைத் துவங்கியதன் மூலம் இந்தியவின் முதல் நெசவுத் தொழிற்சாலையை உருவாக்கியவர் எனும் பெருமையை நாயுடு அவர்கள் பெற்றார்.[2]

ஜி. கு. தேவராஜுலு தொகு

ஜி. குப்புசாமிநாயுடுவின் முதல் மகனான ஜி. கு. தேவராஜுலு உத்திம தொழில்முனைவோராக இருந்தார். இவரின் சில தைரியமான முடிவுகள் உலகத் தரமான தொழில்நுட்பங்களை பருத்தி நூற்பாலைத் துறையில் இடம்பெறச் செய்தது. சுவிட்சர்லாந்து நிறுவனங்கள் இந்தியாவுடன் இணைந்து நெசவுத் தொழிற்துறையில் ஈடுபடச் செய்தார். இந்த பல்வகைப்படுத்துதல் மாற்றத்தின் மூலமாக நிறுவனத்தை லாபகரமாக உருவாக்கியதில் முன்னோடியாகத் திகழ்ந்தார்.[2]

ஜி. கு. சுந்தரம் தொகு

இவர் ஒரு விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். இலண்டனில் நெசவுத் தொழில்நுட்பம் பற்றி கல்வி பயின்றார். சுவின் போன்ற கலப்பின பருத்தி வகைகளைப் பயன்படுத்தியதன் முன்னோடியாகத் திகழ்ந்தார்.[3] லட்சுமி இயந்திர வேலைகள் நிறுவனத்தின் இயக்குனராக இவர் இருந்தார்.[4] மேலும் இவர் லட்சுமி தானியங்கி நூற்பு நிறுவனத்தின் அவைத்தலைவராகவும் இருந்தார். தென்னிந்திய பருத்தி நூற்பாலைகள் சங்கத்தை தோறுவித்து அதன் தலைவராகவும் 1978 முதல் 1998 வரை இருந்தார்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "சிறந்த நூற்பாலைகள்", லட்சுமி ஆலைகள் (in அமெரிக்க ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-03-24
  2. 2.0 2.1 "Best Yarn Manufacturers | Polyester Cotton Fabrics - Lakshmi Mills", Lakshmi Mills (in அமெரிக்க ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-03-24
  3. Revathy, L N (19 May 2009). "The Business Line : Lakshmi Mills chairman G.K. Sundaram passed away". Chennai, India: The Business Line. http://www.thehindubusinessline.com/todays-paper/tp-corporate/lakshmi-mills-chairman-gk-sundaram-dead/article1051928.ece. பார்த்த நாள்: 8 May 2016. 
  4. Satyamurty, G (13 January 2009). "The Hindu : Ram, Lakshman of textile city Architects of Coimbatore:". Chennai, India: The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/ram-lakshman-of-textile-city-architects-of-coimbatore/article373852.ece. பார்த்த நாள்: 15 March 2015. 
  5. "G.K. Sundaram, doyen of textile industry, passes away", The Hindu (in Indian English), 2009-05-19, ISSN 0971-751X, பார்க்கப்பட்ட நாள் 2018-03-24

வெளியிணைப்புகள் தொகு

லட்சுமி ஆலைகள் பரணிடப்பட்டது 2010-08-20 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=லட்சுமி_ஆலைகள்&oldid=3860152" இலிருந்து மீள்விக்கப்பட்டது