லாச்சென்
லாச்சென் என்பது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஒரு சிறு நகரம். இது கடல் மட்டத்தில் இருந்து 2750 மீட்டர் உயரத்தில் உள்ளது. லாச்சென் என்பதற்கு பெரும் கணவாய் என்று பொருள். சிக்கிம் அரசு இந்நகரை சுற்றுலா இடமாக மேம்படுத்தி வருகிறது. குருதோங்மார் ஏரிக்குச் செல்வதற்கு இங்கு தங்கிச் செல்வதே சிறந்த வழி. இவ்வூர் மாநிலத்தலைநகரான கேங்டாக்கில் இருந்து 129 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இச்சாலை குறுகியது சவால் நிறைந்தது. கேங்டாக்கில் இருந்து லாச்செனை அடைய ஆறு மணி நேரம் ஆகும். ஆண்டு தோறும் தாங்கு எனப்படும் யாக் எருமைப் பந்தயம் இங்கு நடைபெறுகிறது.
லாச்சென் | |
— சிறு நகரம் — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சிக்கிம் |
ஆளுநர் | சீனிவாச பாட்டீல், லட்சுமன் ஆச்சார்யா |
முதலமைச்சர் | பவன் குமார் சாம்லிங், பிரேம் சிங் தமாங் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |