லாரல் மற்றும் ஹார்டி

லாரல் மற்றும் ஹார்டி (Laurel and Hardy) மிகபிரபலமான அமெரிக்க திரைப்பட நகைச்சுவை இரட்டையர்கள் இவர்கள் செய்யும் நகைச்சுவை சேட்டைகளினால் வெகுவாக பிரபலமானார்கள். ஒல்லியான தேகமுடைய பிரித்தானிய ஆங்கிலேயராக ஸ்டேன் லாரல்'உம் (1890-1965) குண்டான உருவமுள்ள அமெரிக்கராக ஆலிவர் ஹார்டி'யும்(1892-1957) கதாபத்திரங்களில் சித்தரிக்கப்பட்டனர்.[2][3] இவர்களிருவரும் 1920களின் கடைசிகளில் இருந்து 1940களின் மத்தியப்பகுதி வரை சேட்டை நகைச்சுவையில் (slapstick comey) முடிசூட மன்னர்களாக திகழ்ந்தனர். லாரல் எப்பொழுதும் குழந்தை தனமாக செயல்களால் குழப்பம் ஏற்படுத்தும் நபராகவும், அதிக பந்தா உடைய ஹார்டியின் தோழமை கதாபாத்திரத்திமாக நடித்தார். இருவரும் சேர்ந்து நூறு திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ளனர். ஆரம்ப காலங்களில் 1930களில் முழுநீளத்திரைப்படங்கள் தயாரிக்கபடுவதற்கு முன்பு வரை குறும்படங்களில் மட்டுமே நடித்தனர். சன்ஸ் ஆஃப் தி டிசெர்ட் (1933), தி மியூசிக் பாக்ஸ் (1932), பேப்ஸ் இன் டாய்லேன்ட் (1934), மற்றும் வே அவுட் வெஸ்ட் (1937) ஆகியன மிகப்பிரமாண்டமான வெற்றியை ஈட்டின. ஹார்டியின் "Well, here's another nice mess you've gotten me into!" என்கிற வாக்கியம் இன்றும் பிரபலமாக உள்ளது.

லாரல் மற்றும் ஹார்டி
ஸ்டேன் லாரல் மற்றும் ஆலிவர் ஹார்டி
ஸ்டேன் லாரல் மற்றும் ஆலிவர் ஹார்டி
தேசியம் பிரித்தானியர் (லாரல்)
அமெரிக்கர் (ஹார்டி)
நடிப்புக் காலம் 1927–1955
நகைச்சுவை வகை(கள்) சேட்டை நகைச்சுவை, நகைச்சுவை
முக்கிய தயாரிப்புகளும் பாத்திரங்களும் த மியூசிக் பாக்ஸ், பேபிஸ் இன் டாய்லான்ட், வே அவுட் வெஸ்ட், ஹெல்ப்மேட்ஸ், அனாதர் ஃபைன் மெஸ், சன்ஸ் ஆப் டெசர்ட், பிளாக்-ஹெட்ஸ், பிசி பாடீஸ், டோந்டு இன் அ ஹோட்டல்
முன்னாள் உறுப்பினர்கள் ஸ்டேன் லாரல்
ஆலிவர் ஹார்டி
இணையத்தளம் www.laurel-and-hardy.com
இங்கிலாந்தின் ரெட்கார் கடற்கரையில் சித்தரிக்கப்பட்டுள்ள லாரல் மற்றும் ஹார்டி இருவரின் சில்ஹவுட் உருவப்படம்
லாரலும் ஹார்டியும் முதன்முறையாக தி லக்கி டாக் (1921) திரைப்படத்தில் ஒன்றாகத் தோன்றினர்[1]

லாரலும் ஹார்டியும் முதன் முதலாக 1921 இல் வெளி வந்த "தி லக்கி டாக்" என்கிற திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பின்பு 1926 ஆம் ஆண்டு வரைக்கும் இவர்கள் வேறு எந்த படங்களிலும் இணைந்து நடிக்கவில்லை ஹால் ரோச் பிலிம் ஸ்டூடியோவுடன் செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்தின் படியால் இருவரும் இணைந்து நடிக்கத் தொடங்கினர். ஹால் ரோச் பிலிம் ஸ்டூடியோ நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவடைந்த பின்பு இவர்கள் ட்வேன்ட்டியத் செஞ்சுரி பாக்ஸ் மற்றும் மெட்ரோ கோல்ட்வின் மேயர் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து நடிக்க தொடங்கினர். பின்னர் 1944ன் இறுதியில் மேடைநாடகங்களில் நாட்டம் செலுத்த தொடங்கினர். பின்னர் இங்கிலாந்து, அயர்லாந்து, மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்தும் நாடங்களை அரங்கேற்றினர். கடைசியாக 1950ல் ஃபிரெஞ்ச்/இத்தாலிய இணைத்தயாரிப்பான அடல் கே'யின் தயாரிப்பில் ஒரு கடைசி திரைப்படத்தில் நடித்தனர். மொத்தமாக இவர்கள் இணைந்து 107 திரைப்படங்களில் நடித்துள்ளனர். இவற்றில் 40 குறும்படங்களும், 32 ஒலியில்லா குறும்படங்களும், மற்றும் 23 முழு நீள திரைப்படங்களும் அடங்கும். மட்டுமல்லாது சமீபத்தில் தெரியவந்த கேலக்ஸி ஆஃப் ஸ்டார்ஸ் உட்பட 12 திரைப்படங்களில் கௌரவ தோற்றங்களிலும் நடித்துள்ளனர்.

இணைந்து பணியாற்றுவதற்கு முன்னாள்

தொகு

ஸ்டேன் லாரல்

தொகு

ஸ்டேன் லாரல் (ஜூன் 16, 1890 - ஃபிப்ரவரி 23, 1965)-ன் இயற்பெயர் ஆர்தர் ஸ்டேன்லி ஜெஃபர்சன். இவர் இங்கிலாந்தில், லான்கஷயர்-ல் பிறந்தார்.[4] இவரது தந்தை ஆர்தர் ஜோசஃப் திரையரங்கு சார்ந்த தொழில் முனைவோர் ஆவார் மேலும் வடக்கு இங்கிலாந்திலும் ஸ்காட்லாந்திலும் இருந்த திரையரங்கின் சொந்தக்காரரும் ஆவார். கலைத்துறை என்பது லாரலின் பிறப்பிலிருந்தே உடனிருந்த ரத்த சொந்தம் ஆகும். 1905-ல் ஜெஃபர்சன்-ன் குடும்பம் கிளாஸ்கௌ-விற்கு குடிபெயர்ந்தது. இங்கிருந்த தி மெட்ரோபோல் என்கிற நாடக அரங்கத்தில் தான் லாரல் முதன் முதலாக மேடையேறினார். இதன் பின்பு லாரல் படிப்படியாக கலைத்துறையில் வேகமாக முன்னேறினார். பின்னை 1909-ல் இங்கிலாந்தில் முன்னணி நகைச்சுவை குழுவான இம்ப்ரிசாரியோ-வில் இடம்பெற்றார். பின்னர் 1912-ல் லாரல் ஃபிரெட் கார்னோ-வின் குழுவுடன் இணைந்து அமெரிக்கா முழுவதும் நாடக அரங்கேற்றம் செய்வதற்காக இங்கிலாந்தை விட்டு வெளியேறினார். இந்த பயணம் தனது வாழ்வில் ஒரு பெரும் திருப்பத்தை உண்டாக்கும் என்று கருதினார். 1917-ல் லாரல் மே டல்பேர்க் என்கிற நடிகையுடன் இணைந்து நாடகங்களில் நகைச்சுவைகளை நிகழ்த்தி வந்தார். ஹல்பேர்க்-உடன் இணைந்து லாரல் முதல் முதலாக 1917-ல் நட்ஸ் இன் மே என்கிற திரைப்படத்தில் நடித்தார்.[5] இந்த நிலையில் தான் இவர் தனது பெயரை ஸ்டேன் லாரல் என்று மாற்றிக்கொண்டார். சட்டபூர்வமாக தனது பெயரை 1931-ல் பதிவுசெய்து கொண்டார். டல்பேர்க் தான் லாரல்-ன் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார் இதுவே இவர் லாரல் நடிக்கும் பெரும்பாலான படங்களில் பங்குவகிக்க தூண்டியது. பின்னாளில் இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரிடையே விரிசல் ஏற்பட்டது. இதனூடே ஜோ ராக் என்கிற திரைப்பட தயாரிப்பாளரின் தலையீட்டின் மூலம் டல்பேர்க் தனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவிற்கு திரும்பினார். 1925-ல் லாரல் ஹால் ரோச் நிறுவனத்தில் இயக்குனர் மற்றும் எழுத்தாளராக இணைந்தார். மேலும் 1925 மற்றும் 1926 ஆகிய இடைப்பட்ட காலங்களில் இவர் 22 திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். ஹார்டியுடன் இணை சேர்வதற்கு முன்பு லாரல் 50-ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார்.

ஆலிவர் ஹார்டி

தொகு

ஆலிவர் ஹார்டி (ஜனவரி 18, 1892 - ஆகஸ்ட் 7,1957)-ன் இயற்பெயர் நார்வெல் ஹார்டி. இவர் ஜார்ஜியாவில் பிறந்தவர். இவர் தனது தந்தையாரின் பெயரின் முதல் பாதியை தனது பெயரோடு இணைத்துக்கொண்டு தனது பெயரை ஆலிவர் நார்வெல் ஹார்டி என்று மாற்றிக்கொண்டார். இவருக்கு நெருக்கமானவர்களால் ஆலி மற்றும் பேப் என்றும் அழைக்கப்பட்டார். பேப் என்கிற இவரது பட்டப்பெயரானது இத்தாலியின் லூபின் ஸ்டுடியோவிற்கு அருகிலுள்ள நாவிதர் ஒருவரிடம் இருந்து கிடைக்கபெற்றதாகும். ஹார்டி தனது ஆரம்ப காலங்களில் பேப் ஹார்டி என்றே அழைக்கப்பெற்றார். இவரது பதின்ம வயதின் பிற்பகுதிகளில் இவர் ஒரு மேடைப்பாடகராகவும் வெற்றியை ஈட்டினார். ஜியார்ஜியாவின் மில்எட்ஜ்வில்-லில் ஒரு திரையரங்கையும் நடத்தினார். இதன் ஒருபகுதி பங்குதாரராக இவரது தாயார் இருந்தார். இங்கு திரைப்படங்களை பார்த்து பார்த்தே இவர் தனது ஆர்வ மிகுதியில் நடிகராக வளர்ந்தார். பின்னர் 1913-ல் லூபின் இயங்குபட நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றினார். முதலில் இவர் ஸ்டுடியோகளில் சிறு சிறு எடுபிடி வேலைகள் முதற்கொண்டு செய்து படிப்படியாகவே முன்னேறினார் அந்த நேரங்களில் தான் வசன நடை மற்றும் ஒத்தாசை செய்து கற்றுகொண்டார். 1914-ல் இவர் மெடெலின் சலோசைன் என்பவரை மணந்துகொண்டார். ஹார்டி முதன் முதலாக அவுட் விட்டிங் டாட் என்கிற திரைப்படத்தில் பேப் கதாபத்திரத்தில் நடித்தார். பின்னர் 1914 முதல் 1916 வரையிலான காலகட்டங்களில் ஹார்டி விம் காமெடி கம்பெனி என்கிற நிறுவனத்துடன் இணைந்து 177 குறும்படங்களில் பேப் கதாபாத்திரத்தில் பணியாற்றினார். இந்த குறும்படங்கள் 1917 வரையிலும் திரையிடப்பட்டன. கதாநாயகன், எதிர்நாயகன், மற்றும் பெண்வேடம் போன்ற மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிக்கும் திறம்படைத்திருந்ததால் இவர் அதிக நடிக்கும் வாய்ப்புகள் பெற்ற நடிகராக மாறினார். மொத்தத்தில் ஹார்டி 250-ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். பின்னர் நியூயார்க் நகரில் இருந்து தனது மனைவியுடன் கலிஃபோர்னியா-விற்கு வாய்ப்புகளை தேடி போனார்.

நகைச்சுவை பாணியும் பண்புறு வருணனையும்

தொகு

லாரல் மற்றும் ஹார்டியின் நடிக்கும் பாணியானது பொதுவாக சேஷ்டைகளின் மூலம் நகைப்பை உண்டாக்கும் விதமான ஸ்லாப்ஸ்டிக் காமெடி என்கிற பாணியை ஒத்ததாகவே இருக்கும். இவர்களை அடிக்கடி உடல் சார்ந்த விவாதங்களிலேயே ஈடுபடுவர். இந்த பாணியானது கிட்டத்தட்ட குழந்தைகளுக்கான கேலிச்சித்திரங்களை பிரதிபலிப்பதாகவே அமைந்தன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Laurel and Hardy". Archived from the original on 18 April 2019. பார்க்கப்பட்ட நாள் 18 April 2019.
  2. "Laurel and Hardy." Britannica Online Encyclopedia. Retrieved: June 12, 2011.
  3. Rawlngs, Nate. "Top 10 across-the-pond duos." பரணிடப்பட்டது ஆகத்து 21, 2013 at the வந்தவழி இயந்திரம்டைம் (இதழ்) July 20, 2010. Retrieved: June 18, 2012.
  4. Everson, William K. (1967). The Films of Laurel and Hardy. New York: Citadel Press. p. 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780806501468.
  5. Cavett, Dick (7 September 2012). "The Fine Mess-Maker at Home". The New York Times. Archived from the original on 9 September 2012. பார்க்கப்பட்ட நாள் 8 September 2012.

வெளி இணைப்புகள்

தொகு

Bibliography

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாரல்_மற்றும்_ஹார்டி&oldid=3905835" இலிருந்து மீள்விக்கப்பட்டது