லாலா ருக் (Lala Rukh (activist) 1948 - 2017), என்பவர் பரவலாக பாக்கித்தானில் அறியப்படும் பாக்கித்தானிய ஆசிரியர், பெண்கள் உரிமை ஆர்வலர் மற்றும் கலைஞர் ஆவார். இவர் மகளிர் செயல் மன்றத்தின் நிறுவனர் என்று அறியப்பட்டார். [1] [2]

கல்வி மற்றும் தொழில்

தொகு

இவர் பஞ்சாப் பல்கலைக்கழகம், லாகூர், பாக்கித்தான் மற்றும் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் நுண்கலைகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில், முப்பது வருடங்கள் நுண்கலைத் துறையிலும், லாகூரில் உள்ள தேசிய கலைக் கல்லூரியிலும், [3] கற்பித்தல் பணியினை மேற்கொண்டார்.200 ஆம் ஆண்டில் தேசிய கலைக் கல்லூரியில் கலை பயிற்சித் திட்டத்தினைத் தொடங்கினார். [4] [5] துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் படிப்பதற்காக பாக்கித்தானில் பல்வேறு அரசு பயண மானியங்கள் இவருக்கு வழங்கப்பட்டன. [6]

கலைப் பணிகள்

தொகு

ருகினின் கலைப் படைப்புகளில் தியான வெளிப்பாடுகள் மையமாக இருந்தன. [7] இவரது கலைப் படைப்பு 2020 ஆம் ஆண்டில் ஜனவரில் 1இல் நியூயார்க்கு நகரத்தின் பெருநகரக் கலை அருங்காட்சியகத்தால் காட்சிப்படுத்தப்பட்டது. [8] [9] இவரது படைப்புகளின் பதிப்புகள், "ரூபக், 2016" (நவீன வரைகலையானது) டேட் மாடர்ன் ( லண்டன் ), [10] சம்தானி ஆர்ட் ஃபவுண்டேஷன் ( வங்காளதேசம்), ஆர்ட் ஜமீல் கலெக்சன் ( துபாய் ) மற்றும் தி மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட் (நியூயார்க் நகரம்) ) [11] ஆகியவற்றில் காட்சிப்படுத்தப்பட்டது.

இவர் அனைத்து பாக்கித்தான் இசை மாநாடு (1959), [12] வாஸ்ல் கலை நிறுவனம் (2000), மற்றும் கிரே நாய்ஸ் கேலரியின் நிறுவனர் ஆவார். [13]

2017 ஆம் ஆண்டில், ருக்கினின் படைப்புகள் ஜெர்மனியின் காசலில் சமகால கலை கண்காட்சி ஆவணப்படம் 14 இல் காட்சிப்படுத்தப்பட்டன. [14] [15] இவரது படைப்புகள் சீனா, ஏதென்ஸ் இசைப்பள்ளி, கிரீசில் 2017ஆம் ஆண்டிலும் , [16] அதே ஆண்டில் சுவிட்சர்லாந்தில் உள்ள குன்ஸ்தாஸ் மையத்திலும், மையம் பொம்பிடோ, பிரான்ஸ் 2018 இல், பந்த் தெல்ல தோகனா, வெனிஸ் 2019 மற்றும் இங்கிலாந்தின் மூன்று நகரங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டன.

பெண்ணிய ஆர்வலர்

தொகு

ருக் மகளிர் செயல் மன்றத்தின் (WAF) ஸ்தாபக உறுப்பினராக இருந்தார். 1981 இல் இதனை நிறுவிய பதினைந்து உறுப்பினர்களில் இவரும் ஒருவர் ஆவார். [17] ஒரு ஆர்வலர் மற்றும் பிரச்சாரகராக, இவர் பெண்கள் மற்றும் பல சிறுபான்மையினர் உரிமைகளுக்காகப் போராடினார். சர்வாதிகாரி ஜியாவுல் ஹக்கின் இராணுவச் சட்டத்திற்கு எதிரான பெண்கள் போராட்டத்திலும் இவர் பங்கேற்றார். இவரது அரசியல் நடவடிக்கைகளுக்காக, அந்த நேரத்தில் சிறைக்கு அனுப்பப்பட்டார். இவர் பெண்களுக்கு எதிரான பாகுபாடு என்று கருதி ஊடூத் கட்டளை தண்டனைச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிராக இருந்தார். முஷாரப்பின் சர்வாதிகார ஆட்சியின் போது, 2007 அவசரநிலை விதிக்கப்பட்டபோது, இவர் மற்ற 50 மகளிர் செயல் மன்ற உறுப்பினர்களுடன் கைது செய்யப்பட்டார். [18]

மகளிர் செயல் மன்றத்தின் தீவிர உறுப்பினராக ருக், சமூகம், பெண்களின் உரிமைகள் மற்றும் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்த தனது கலையினை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார். [19] லாகூரில், அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் உள்ளூர் அச்சுப்பொறிகள், செய்திமடல்கள் மற்றும் எதிர்ப்புப் பொருட்களை அச்சிட மறுத்தபோது. ருக் பெண்களுக்கு சுதந்திரம் மற்றும் சம உரிமை கோரும் மகளிர் செயல் மன்றத்தின் பல சுவரொட்டிகளை தயாரிக்கவும், வடிவமைக்கவும் மற்றும் அச்சிடவும் தொடங்கினார். இவரது பெண்ணியக் கலையான "பெண்களுக்கு எதிரான குற்றங்கள்"அந்தக் காலத்தில் உருவானது. [20]

சொந்த வாழ்க்கை

தொகு

இவர் "அமைதி மற்றும் ஜனநாயகத்திற்கான பாக்கித்தான்-இந்திய மக்கள் மன்றத்தின் (PIPFPD)" ஒரு பகுதியாக இருந்தார். [21]

ருக் , திருமணம் செய்து கொள்ளவில்லை மற்றும் இவரது சகோதரியின் மகள் மரியத்தை தத்தெடுத்தார். ருக் ஜூன் 2017 இல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் . இவர் ஜூலை 7, 2017 அன்று இறந்தார் (69 வயது). [22]

சான்றுகள்

தொகு
  1. "Veteran activist Lala Rukh's demise mourned – Pakistan – Dunya News".
  2. Gabol, Imran (7 July 2017). "WAF activist and artist Lala Rukh passes away in Lahore".
  3. "Veteran activist Lala Rukh breathes her last". 7 July 2017. https://tribune.com.pk/story/1452522/veteran-activist-lala-rukh-breathes-last. 
  4. "Lala Rukh". Karachi Biennale 2017 (in ஆங்கிலம்).
  5. "Lala Rukh (1948–2017)". www.artforum.com.
  6. "Art Radar celebrates Lala Rukh". Archived from the original on 2020-05-16. பார்க்கப்பட்ட நாள் 2021-09-09.
  7. "Lala Rukh – Introduction by Natasha Ginwala".
  8. "The Met Acquires Works by Pakistani Artist Lala Rukh". www.metmuseum.org.
  9. "The Met Adds Works by Pakistani Artist Lala Rukh to Its Collection". www.artforum.com.
  10. "Lala Rukh: Panel Discussion – Talk at Online Event". Tate.
  11. "Resonance: After Lala Rukh". https://www.thefridaytimes.com/resonance-after-lala-rukh/. 
  12. "Celebrating Artist, Activist and Teacher Lala Rukh on International Women's Day". www.ruyamaps.org.
  13. "What Is the Most Iconic Artwork of the 21st Century? 14 Art Experts Weigh In". artnet News. 29 September 2017.
  14. "Lala Rukh – Documenta 14".
  15. "These Are the 8 Unmissable Highlights of documenta 14 in Kassel". artnet News. 9 June 2017.
  16. "In Memoriam: Lala Rukh (1948–2017)".
  17. "Women's Action Forum national convention, Lahore 1982". a lib dem in international development (in ஆங்கிலம்). 17 November 2006.
  18. "Lala Rukh – Zubaan".
  19. "Reclaiming History:A Feminist Story".
  20. "Crimes against Women". www.metmuseum.org.
  21. "Veteran activist Lala Rukh breathes her last" (in en). https://tribune.com.pk/story/1452522/veteran-activist-lala-rukh-breathes-last. "Veteran activist Lala Rukh breathes her last". The Express Tribune. 7 July 2017.
  22. Gabol, Imran (7 July 2017). "WAF activist and artist Lala Rukh passes away in Lahore".Gabol, Imran (7 July 2017). "WAF activist and artist Lala Rukh passes away in Lahore".
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாலா_ருக்&oldid=3570195" இலிருந்து மீள்விக்கப்பட்டது