வரகுக் கோழி

ஒரு பறவை இனம்
(லிசர் புளோரிகான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வரகுக் கோழி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Sypheotides

Lesson, 1839
இனம்:
S. indicus
இருசொற் பெயரீடு
Sypheotides indicus
(Miller, 1782)
Spot distribution map (includes historic records)
Overall distribution (reddish) and breeding areas (green)
வேறு பெயர்கள்

Sypheotis aurita

வரகுக் கோழி (lesser florican) என்பது பஸ்டார்ட் குடும்பத்தில் சிறிய பறவை.[2] மேலும் சிபியோடைட்ஸ் பேரினத்தின் ஒரே உறுப்பினர் இதுவாகும். இந்தியத் துணைக்கண்டத்தில் உயரமான புல்வெளிகள், புதர்கள் உள்ள இடங்களில் இவை காணப்படுகிறன. இவற்றின் உறைவிடங்கள் அழிக்கப்படுவதாலும், இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதாலும் இவற்றின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துபோய் அரிய பறவை ஆகிவிட்டது. தமிழ்நாட்டிலிருந்த புல்வெளிகள் சீரழிக்கப்பட்டதால் இங்கிருந்த வரகுக்கோழிகளை் மறைந்துவிட்டன.[3]

விளக்கம் தொகு

 
ஆண் வரகுக் கோழி

இப்பறவை வீட்டுக் கோழி அளவு இருக்கும். ஆண் 46 செ.மீ நீளமும், பெண் 51 செ. மீ நீளமும் இருக்கும். மேல் அலகு கொம்பு நிறமான பழுப்பும், கீழ் அலகு மஞ்சள் கலந்த ஊண் நிறத்தில் இருக்கும். விழிப்படலம் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்திலும், கால்கள் அழுக்கு மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.

ஆண் பறவை இனப்பெருக்கக் காலத்தில் கருப்பும் வெண்மையுமாக தலையில் வளைந்த கருப்புக் கொண்டையோடு காட்சியளிக்கும். குளிர் காலத்தில் ஆண்பறவை பெண் பறவையை ஒத்ததாக இருக்கும்.

பெண் பறவை மணல் நிறம் தோய்ந்த வெளிர் மஞ்சள் நிறமாக முதுகில் கருப்பு நிற அம்பு வடிவமான சிறு கோடுகளைக் காணலாம். தொண்டையிலும், மார்பிலும் இரு கருங்கோடுகள் காணப்படும். உச்சியும் நெற்றியும் கருப்பாக இருக்கும். ஆணைவிட சற்று பருத்ததாக பெண் பறவை இருக்கும்.

பரவலும் வாழிடமும் தொகு

இந்த இனம் முன்னர் இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதி முழுவதும் பரவலாக இருந்தது, ஆனால் இலங்கையில் இருக்கவில்லை. இது முக்கியமாக இந்தியாவின் நடு மற்றும் மேற்கு பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கிறது. பாக்கித்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் மக்ரான் கடற்கரையிலிருந்து வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. இந்த இனங்கள் மழைப்பொழிவுக்கு ஏற்ற வகையில் நகர்கின்றன, இதனால் இவற்றின் இருப்பு ஒழுங்கற்றதாக இருக்கலாம்.[4] இவற்றின் விருப்பமான வாழ்விடம் புல்வெளிகள் என்றாலும் இவை சில நேரங்களில் பருத்தி மற்றும் பருப்பு போன்ற வயல்களில் காணப்படுகின்றன. இனப்பெருக்கம் செய்யும் பகுதிகளாக தற்காலத்தில் முக்கியமாக குசராத், மத்தியப் பிரதேசம், தெற்கு நேபாளத்தின் சில பகுதிகள், ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகள் மட்டுமே ஆகும்.[5]

நடத்தையும் சூழலியலும் தொகு

 
வரகுக் கோழி முட்டைகளின் நிற வேறுபாட்டைக் காட்டும் படம்.

இந்த வரகுக் கோழி தனித்தனியாகவோ அல்லது ஜோடியாகவோ அடர்ந்த புல்வெளியில் அல்லது சில சமயங்களில் வயல்களில் காணப்படும். இனப்பெருக்க காலத்தில் ஆண் பறவைகள் பழங்குடி வேட்டைக்காரர்களால் எளிதில் சுட்டுக் கொல்லபடுகின்றன ஏனெனில் இவற்றின் காதல் ஊடாட்டத்தின் எளிதில் கண்டுபிடிக்கப்படுகின்றன. இது உண்பதற்கு நன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது ஆனால் வங்காள புளோரிக்கன் இறைச்சியை விட தாழ்வாக கருதப்படுகிறது.[6] இவை மற்ற பஸ்டர்டுகளை விட வேகமாக பறக்கின்றன. மேலும் பறக்கும் போது வாத்து போன்ற தோற்றத்தைக் கொடுக்கின்றன. நன்கு ஓடும் ஆற்றலும், பெரிய இறக்கைகளைப் பரப்பி நன்றாகப் பறக்கும் திறமையும் இதற்கு உண்டு.

உணவுப்பழக்கம் தொகு

புதர் அதிகமாக இல்லாத வெளியிடங்களில் தத்துக்கிளி போன்ற பூச்சிகளையும், பல்லிகளையும், சிறுபாம்புகளையும் பிடித்துத் தின்னும். தானியங்களையும் தின்னும்.[7][8]

பொதுவாக வரகுக்கோழிகள் காலை அல்லது மாலை நேரங்களில் உணவு தேடுகின்றன. புதிதாக இடம்பெயர்ந்த பறவைகள் மட்டுமே, நாள் முழுவதும் உணவு தேடுகின்றன.[8]

இனப்பெருக்கம் தொகு

தென்மேற்கு பருவமழை தொடங்குவதைப் பொறுத்து இனப்பெருக்க காலம் மாறுபடும். மேலும் வட இந்தியாவில் செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலும், தென்னிந்தியாவின் சில பகுதிகளில் ஏப்ரல் முதல் மே வரையிலும் இவை இனப்பெருக்கம் செய்கின்றன.[9]

இனப்பெருக்க காலத்தில், ஆண் பறவைகள் ஒரு விசித்திரமான கூக்குரலிட்டு அல்லது தட்டும் சத்தத்துடன் புல்லில் இருந்து திடீரென குதித்து, இறக்கைகளை அசைத்து களியாட்டம்போடும். இந்த குதியாட்டடங்கள் சுமார் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிமிட இடைவெளியில் மீண்டும் மீண்டும் செய்கின்றன. இந்த காட்சிகள் முக்கியமாக அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் அரங்கேற்றபட்டுகின்றன. ஆனால் மேகமூட்டமான வானிலை உள்ள நாளில் பகளிலேயே இவ்வாறு ஆட்டம்போடும். இவ்வாறு ஆட்டம்போடும் பறவைகள் வேட்டைக்கு எளிதில் இலக்கானது கடந்த காலத்தில் இவற்றின் எண்ணிக்கை வாழ்ச்சியடைய காரணமானது.[5][10]

தரையில் சிறு குழியில் புதர்களிடையே கூடமைத்த பெண் பறவைகள் 3 முதல்4 வரையிலான (1.88 x 1.6 அங்குலம்) முட்டைகள் இடும். கூடு பொதுவாக அடர்ந்த புல்லில் இருக்கும். அடைகாத்தல் மற்றும் குஞ்சுகளை வளர்ப்பதில் பெண்கள் பறவைகள் மட்டுமே பங்கு கொள்கிறன. அடைகாக்கும் காலம் சுமார் 21 நாட்கள் ஆகும்.

குறிப்புகள் தொகு

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Sypheotides indicus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Bindra, Prerna (25 August 2018). "The fall of a florican" – via www.thehindu.com.
  3. சு. தியடோர் பாஸ்கரன் (28 மார்ச் 2018). "தோட்டத்துக்கு வந்த தேன்பருந்து". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 3 மே 2018. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. Whistler, Hugh (1949). Popular handbook of Indian birds (4th ). Gurney and Jackson, London. பக். 447–449. https://archive.org/stream/popularhandbooko033226mbp#page/n495/mode/1up. 
  5. 5.0 5.1 Sankaran, Ravi; Rahmani, AR; Ganguli-Lachungpa, U (1992). "The distribution and status of the Lesser Florican Sypheotides indica (J.F. Miller) in the Indian subcontinent". Journal of the Bombay Natural History Society 89 (2): 156–179. https://biodiversitylibrary.org/page/48732616. 
  6. Baldwin, JH (1877). The large and small game of Bengal and the North-Western Provinces of India. Henry S King & Co., London. பக். 316–318. https://archive.org/stream/largeandsmallga00baldgoog#page/n347/mode/1up. 
  7. குழந்தைகள் கலைக் களஞ்சியம்",1986, சென்னை:தமிழ் வளர்ச்சிக் கழகம்.
  8. 8.0 8.1 "Protecting Bustards in India: Special Issue" (PDF). World Wildlife Fund-India. பார்க்கப்பட்ட நாள் 9 June 2013.
  9. Ali, S; S D Ripley (1980). Handbook of the birds of India and Pakistan. 2 (2nd ). Oxford University Press. பக். 196–198. 
  10. Sankaran, Ravi (1994). "Some aspects of the territorial system in Lesser Florican Sypheotides indica (J.F. Miller)". Journal of the Bombay Natural History Society 91 (2): 173–186. 

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
வரகுக் கோழி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரகுக்_கோழி&oldid=3764989" இலிருந்து மீள்விக்கப்பட்டது