லிட்டில் பாய்

லிட்டில் பாய் (ஆங்கிலம்: Little Boy; சின்னப் பையன்) என்பது ஜப்பான் நகரான ஹிரோசிமா மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 இல் ஐக்கிய அமெரிக்காவினால் வீசப்பட்ட அணுகுண்டிற்கு இடப்பட்ட பெயர் ஆகும். இது அமெரிக்காவின் வான்படை விமானியான போல் டிபெட்ஸ் என்பவரால் எனோலா கே (Enola Gay) என்ற பி-29 ரக விமானத்தில் இருந்து வீசப்பட்டது[1]. இதுவே ஆயுதமாகப் பாவிக்கப்பட்ட முதலாவது அணுகுண்டாகும். இது வீசப்பட்டு மூன்றாவது நாளில் "கொழுத்த மனிதன்" என்ற பெயரில் இரண்டாவது அணுகுண்டு நாகசாக்கி நகர் மீது வீசப்பட்டது[2].

சின்னப் பையன்
(அணுகுண்டு)
Little Boy
போருக்குப் பின்னரான "சின்னப் பையன்" அணுகுண்டின் மாதிரி
வகைஅணு ஆயுதம்
அமைக்கப்பட்ட நாடுஐக்கிய அமெரிக்கா
அளவீடுகள்
எடை8,818.49 இறா.
4,000 கிகி
நீளம்9.84 அடி
3.0 மீ
விட்டம்2.3 அடி
0.7 மீ

வெடிப்பின் விளைவு13 முதல் 16 கிலோடன் TNT

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. லிட்டில் பாய் என்ற பெயர் முன்னாள் அதிபர் ரூஸ்வெல்ட்டைக் குறீப்பதாக பிபிசியின் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
  2. ஹக்கீம், ஜோய் (1995). அமெரிக்க வரலாறு: போர், அமைதி மற்றும் அனைத்து ஜாஸ். நியூயோர்க்: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அச்சகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-509514-6. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=லிட்டில்_பாய்&oldid=3372154" இலிருந்து மீள்விக்கப்பட்டது