லினன் துணி
லினன் துணி என்பது ஒருவகை நற்சணல் செடியின் நாரிலிருந்து தயாரிக்கப்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தியர் நேர்த்தியான லினன் துணி நெய்தனர். எகிப்திய, யூத மத குருக்கள் மதச்சடங்குகள் செய்யும்போது லினன் துணி உடுத்தினர். கிரேக்க நாகரிகம் பெருவளர்ச்சி அடைந்த சமயம், பணக்காரரும் லினன் துணியை பயன்படுத்தினர். ஐரோப்பிய வரலாறு இடைக்காலத்தில் ஐரோப்பிய மக்கள் பெரும்பாலோர் லினன் துணியை பயன்படுத்தினர்.
லினன் துணி தயாரிக்கும் முறைதொகு
நற்சணல் செடியை தக்க பருவத்தில் அறுவடை செய்து, தண்டுகளைக் கட்டுக்கட்டாகக் கட்டி வெயிலில் நன்கு உலரவிடவும் தண்டை ஒழுங்குபடுத்திச் சுமையாகக் கட்டி ஊறப்போடவேண்டும். ரஷ்ய நாட்டில் 3-4 வாரம் பனியிலிட்டு உலரவைப்பர். அயர்லாந்து நாட்டினர் நிலையான நீரில் இட்டு ஊறவைப்பர். பெல்ஜியர்கள் ஓடும் நீரில் இட்டு சுமைகளை ஊறவைப்பர். எந்த முறையில் சுமையை ஊறவைக்கிறோமோ அதைப் பொறுத்து ந நாரின் நிறம், வலிமை முதலியவை அமையும். பின்னர் நீளமான நார் மற்றும் குட்டையான நார் போன்றவற்றை தனித்தனியாப் பிரித்து, பருத்தி நூல் நூற்ப்பதைப் போல லினன் நாரை நூலாக நூற்றுப் பருத்தித் துணியை நெய்வதைப்போல லினன் துணியை நெய்வர்.
பயன்கள்தொகு
பாய்மரக்கப்பலில் பயன்படும் பாய்த் துணி, கித்தான், தர்ப்பாய், கோணி, விரிப்பு முதலிய முரட்டுத்துணி முதல் கைக்குட்டை, சட்டைத்துணி முதலிய மெல்லியவகை துணி வகைகள் தயாரிக்கப்படுகிறது.