லியோனிடு ஹுர்விக்ஸ்

லியோனிடு ஹுர்விக்ஸ் (Leonid Hurwicz, ஆகஸ்ட் 21, 1917 - ஜூன் 24, 2008) ஒரு புகழ்பெற்ற பொருளியல் அறிஞர். இவர் 2007 ஆம் ஆண்டுக்கான பொருளியல் நோபல் பரிசை பேராசிரியர் எரிக் மாஸ்க்கின், பேராசிரியர் ரோஜர் மையெர்சன் ஆகியோருடன் சேர்ந்து வென்றார். பேராசிரியர் ஹூர்விக்ஸ் மின்னெசோட்டா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். நோபல் பரிசு பெற்றவர்களிலேயே அகவை அதிகம் உள்ளவர் இவர்தான். தனது 90 ஆவது அகவையில் நோப்ல பரிசு பெற்றுள்ளார்.

லியோனிடு ஹூர்விக்ஸ்
Leo Hurwicz
பிறப்புஆகஸ்ட் 21, 1917
மாஸ்கோ,  உருசியா
இறப்புசூன் 24, 2008(2008-06-24) (அகவை 90)
மினியாபொலிஸ், மினசோட்டா,  ஐக்கிய அமெரிக்கா
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
துறைபொருளியல்
கல்வி கற்ற இடங்கள்வார்சா பல்கலைக்கழகம்
பொருளியலுக்கான லண்டன் பாடசாலை
ஆய்வு நெறியாளர்ஜானிங் கூப்பர்ஸ்,
ஜேக்கப் மார்ஸ்சாக்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
டானியல் மக்ஃபாடென்
அறியப்படுவதுMechanism design
விருதுகள்அறிவியலுக்கான தேசிய விருது (1990)
பொருளாதார அறிவியலுகான நோபல் ஞாபகார்த்தப் பரிசு (2007)

இவர் பொருளியல், அரசியலறிவியல், குமுக அறிவியல் (சமூக அறிவியல்) ஆகிய துறைகளில் பயன்படும் முடிவுக்கேற்ற திட்டவகுதி (மெக்கானிசம் டிசைன்) என்னும் கருத்தை முன்வைத்தவர் என்றும், கேம் தியரி என்னும் மிகைமப் பகிர்வுக் கொள்கையை பொருளியலில் பயன்படுத்திய முன்னோடி[1] என்றும் கருதப்படுகின்றார். இவருடைய கருத்தை எரிக் மாஸ்க்கின், ரோஜர் மையெர்சன் ஆகியோர் இன்னும் வலுவூட்டி, நடைமுறைச் சந்தைச் சூழல்களுக்கும் பயனாகும்படி வளர்த்தெடுத்தனர்.

வாழ்க்கை வரலாறு

தொகு

ஹூர்விக்ஸ் (Hurwicz) 1917ல் முதல் உலகப் போர் நிகழ்ந்த காலத்தில் போலந்தில் யூதக் குடும்பத்தில் பிறந்தார். பிறந்தபின் ரஷ்யாவுக்குக் குடிபெயர்ந்து சென்று பின்னர் மீண்டும் போலந்தில் வார்சா நகரத்திற்குத் திரும்ப நேர்ந்தது. 1938ல் வார்சா பல்கலைக்கழகத்தில் LL.M பட்டம் பெற்றார். 1939ல் இலண்டன் பொருளியல் கல்லூரியில் படித்து பின்னர் ஜெனிவா நகரத்திற்கு சென்றார். இரண்டாவது உலகப்போர் துவங்கிய பின்னர், அவர் போர்த்துகலுக்குச் சென்றார். பின்னர் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குச் செல்ல நேந்தது. அங்கு ஹார்வர்டு பல்கலைகழகத்திலும் சிக்காகோ பல்கலைக்கழகத்திலும் படிப்பைத் தொடர்ந்தார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Higgins, Charlotte (15 October 2007). "Americans win Nobel for economics". BBC News. http://news.bbc.co.uk/1/hi/business/7045067.stm. பார்த்த நாள்: 2007-10-15. 
  2. Hughes, Art (15 October 2007). "Leonid Hurwicz -- commanding intellect, humble soul, Nobel Prize winner". Minnesota Public Radio. http://minnesota.publicradio.org/display/web/2007/10/15/nobelprofile/. பார்த்த நாள்: 2007-10-15. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லியோனிடு_ஹுர்விக்ஸ்&oldid=2896263" இலிருந்து மீள்விக்கப்பட்டது