லீப்சிக் பல்கலைக்கழகம்

லீப்சிக் பல்கலைக்கழகம், செருமனியின் சக்சனி சுதந்திர மாநிலத்தில் உள்ள லீப்சிக் நகரில் அமைந்துள்ளது. இது ஐரோப்பாவில் உள்ள மிகப் பழைய பல்கலைக்கழகங்களுள் ஒன்று. தொடர்ச்சியாகச் செயற்பட்ட ஆண்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில் இப் பல்கலைக்கழகம் செருமனியில் உள்ள இரண்டாவது பழைமையான பல்கலைக் கழகமாக விளங்குகிறது. இது உலக அளவிலானதும், பண்பாட்டு அடிப்படையிலான ஒப்பியல் வரலாற்று ஆய்வுகளிலும், உயர் மட்டக் கற்பித்தலிலும் நீண்ட மரபு கொண்டது.

லீப்சிக் பல்கலைக்கழகம்
Universität Leipzig
இலத்தீன்: Alma mater Lipsiensis
குறிக்கோளுரைAus Tradition Grenzen überschreiten - எல்லைகள் தாண்டும் ஒரு மரபு
வகைபொது
உருவாக்கம்டிசம்பர் 2, 1409
தலைமை ஆசிரியர்Franz Häuser
நிருவாகப் பணியாளர்
3,196 (2005)
மாணவர்கள்29,668 (winter 2006/2007)
அமைவிடம், ,
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்www.uni-leipzig.de/

இப் பல்கலைக் கழகம், 1409 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி சக்சனியின் எலெக்டர் முதலாம் பிரெடெரிக் அவரது உடன்பிறந்தாரான மீசனின் மார்கிறேவ் இரண்டாம் வில்லியம் ஆகியோரால் நிறுவப்பட்டது. தொடக்கத்தில் இது நான்கு கல்வித்துறைகளைக் கொண்டு விளங்கியது. தொடங்கிய காலத்தில் இருந்து, தொடர்ச்சியாக 600 ஆண்டுக்காலக் கற்பித்தல் மற்றும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுவருகிறது.

வரலாறு தொகு

லீப்சிக் பல்கலைக்கழகம், பிராக் பல்கலைக்கழகத்தை மாதிரியாகக் கொண்டு அமைக்கப்பட்டது. யான் குஸ் நெருக்கடிக்குப் பின் பிராக் பல்கலைக்கழகத்தில் இருந்த செருமன் மொழி பேசும் விரிவுரையாளர்கள் லீப்சிக் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டனர். 1409 ஆம் ஆண்டு செப்டெம்பர் ஒன்பதாம் தேதி திருத்தந்தை ஐந்தாம் அலெக்சான்டரின் அனுமதி பெறப்பட்டபின்னர் இது திறந்து வைக்கப்பட்டது. முதல் நூற்றாண்டுகளில் இதன் வளர்ச்சி மெதுவாகவே இருந்ததுடன், இது ஒரு பிரதேச நிருவனமாகவே செயற்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில் இது உலக்த் தரத்திலான கல்வி மற்றும் ஆய்வுகளுக்கான நிறுவனமாக வளர்ந்தபோது இந்நிலை மாறியது. இரண்டாம் உலகப் போர் வரை இப் பல்கலைக்கழகத்தில் பல புகழ்பெற்ற அறிஞர்களும், நோபல் பரிசு பெற்ற அறிஞர்களும் பணிபுரிய முன்வந்தனர். இங்கு கற்றோரும், பணிபுரிந்தோரும் கூடப் பின்னாளில் முக்கியமான அறிவியலாளர்களாகத் திகழ்ந்தனர்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லீப்சிக்_பல்கலைக்கழகம்&oldid=3323155" இலிருந்து மீள்விக்கப்பட்டது