லுப்பார் ஆறு
லுப்பார் ஆறு (மலாய்: Sungai Lupar; ஆங்கிலம்: Lupar River); மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள ஓர் ஆறு ஆகும். சரவாக், செரி அமான் பிரிவின், செபுயாவ் நகரத்தையும்; கம்போங் தெரிசோ கிராமத்தையும் (Kampung Teriso) ஊடுருவிச் செல்கிறது.
லுப்பார் ஆறு Lupar River Sungai Batang Lupar | |
---|---|
லுப்பார் ஆறு; சூரியன் மறையும் காட்சி (2018) | |
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | கிலிங்கான் மலைத்தொடர் |
⁃ அமைவு | மலேசியா |
முகத்துவாரம் | |
⁃ ஆள்கூறுகள் | 1°30′51.6″N 110°58′58.7″E / 1.514333°N 110.982972°E |
⁃ உயர ஏற்றம் | 0 m (0 அடி) |
நீளம் | 275 km (171 mi) |
வடிநில அளவு | 6,558 km2 (2,532 sq mi) |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | செபுயாவ், கம்போங் தெரிசோ, தென்சீனக் கடல் |
⁃ சராசரி | 490 m3/s (17,000 cu ft/s) |
கிலிங்கான் மலைத்தொடரில் (Klinkang Range) தொடங்கும் லுப்பார் ஆறு; இறுதியாக, தென்சீனக்கடலில் கலக்கிறது.
275 கிலோமீட்டர்கள் நீளம் கொண்ட இந்த ஆறு, ராஜாங் ஆறு மற்றும் பாராம் ஆறு ஆகிய ஆறுகளுக்குப் பிறகு சரவாக்கில் மூன்றாவது நீளமான ஆறாகும்.[1][2]
பொது
தொகுலுப்பார் ஆற்றின் வழியில் அமைந்துள்ள குறிப்பிடத்தக்க குடியிருப்புகள்:
- செபுயாவ்[2]
- தெரிசோ கிராமம்[2]
- லிங்கா நகரம்[3]
- சிமாங்காங்[4]
- எங்கிலிலி[5]
கழிமுக அலைஏற்றம்
தொகுஉள்நாட்டில் பெனாக் (Benak) என்று அழைக்கப்படும் கழிமுக அலைஏற்றம் (Tidal Bore) என்பது இந்த ஆற்றில் நிகழும் ஒரு தனித்துவமான இயற்கை நிகழ்வாகும். ஆற்றின் கழிமுகத்திற்குள் செல்லும் அலைஏற்றங்கள் மூன்று மீட்டர் உயர அலைகளை உருவாக்குகின்றன.
இந்த அலைகள் ஆற்றின் நீரோட்டத்திற்கு எதிராகப் பயணிக்கின்றன. உலகின் 56 இடங்களில் கழிமுக அலைஏற்றங்கள் காணப்படுகின்றன. அவற்றில் லுப்பார் ஆற்றின் கழிமுகமும் ஒன்றாகும்.
பெனாக் திருவிழா
தொகுபெனாக் திருவிழா (Pesta Benak), ஆண்டுதோறும் செரி அமானில் உள்ள லுப்பார் ஆற்றின் கழிமுகக் கரையில் நடத்தப்படுகிறது.
நீர் சார்ந்த நிகழ்வுகள், பெனாக் அழகிப் போட்டி, கெபாயா பெனாக் அழகிப் போட்டி, பாடல் போட்டிகள், உணவுப் பசார், பாரம்பரிய விளையாட்டுகள், உள்ளூர் வணிகப் பொருட்களின் கண்காட்சி, லுப்பார் ஆற்றைப் பற்றிய கண்காட்சி; மற்றும் பாரம்பரிய இபான், மலாய், சீன திருமண விழாக் காட்சிகளும் பெனாக் திருவிழாவில் இடம்பெறுகின்றன.[5][6]
முதலை தாக்குதல்கள்
தொகுலுப்பார் ஆறு, அதன் முதலைகளின் தாக்குதல்களுக்கு நன்கு அறியப்பட்டது. 2010-ஆம் ஆண்டுகளில், சரவாக்கின் 22.2% முதலைத் தாக்குதல்கள் லுப்பார் ஆற்றுப் படுகையில் பதிவாகியுள்ளன; இது மாநிலத்திலேயே அதிகமாகும்.[1][7]}}
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Mohd Izwan Zulaini bin Abdul Gani. Historical Perspective, Distribution, Ecology and Population Genetics of Saltwater Crocodile (Crocodylus porosus Schneider, 1801) in Sarawak, Malaysian Borneo. https://ir.unimas.my/id/eprint/26230/1/Mohd%20Izwan%20(2019)%20-%20Historical%20Perspective,%20Distribution,%20Ecology%20and%20Population%20Genetics%20of%20Saltwater%20Crocodile%20(Crocodylus%20porosus%20Schneider,%201801)%20in%20Sarawak,%20Malaysian%20Borneo.pdf. பார்த்த நாள்: 12 December 2019.
- ↑ 2.0 2.1 2.2 Malissa Sahari (10 April 2018). "Rohani, Batang Lupar dan geografinya" (in ms). Astro Awani. http://www.astroawani.com/gaya-hidup/rohani-batang-lupar-dan-geografinya-172509.
- ↑ "Lingga folk still dependent on Batang Lupar". The Borneo Post. 24 February 2011. https://www.theborneopost.com/2011/02/24/lingga-folk-still-dependent-on-batang-lupar/.
- ↑ Joshua Eric (25 October 2019). "Sri Aman jadi Simanggang semula" (in ms). Harian Metro. https://www.hmetro.com.my/mutakhir/2019/10/510796/sri-aman-jadi-simanggang-semula.
- ↑ 5.0 5.1 Jack Wong (19 June 2007). "Thousands watch tidal bore at Batang Lupar". The Star. https://www.thestar.com.my/news/community/2007/06/19/thousands-watch-tidal-bore-at-batang-lupar.
- ↑ "Tidal Bore Festival (Pesta Benak) 2019". Sarawak Tourism இம் மூலத்தில் இருந்து 19 ஜனவரி 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220119133651/https://sarawaktourism.com/event/tidal-bore-festival-pesta-benak/.
- ↑ Husna (10 July 2019). "Lagenda Bujang Senang, Si Buaya Pembaham Ramai Manusia di Sarawak" (in ms). Libur. https://www.libur.com.my/lagenda-bujang-senang-si-buaya-pembaham-ramai-manusia-di-sarawak/.