லூசி குரியன்

சகோதரி லூசி குரியன் (Sister Lucy Kurien) இந்தியாவின் புனேவைத் தலைமையிடமாகக் கொண்ட, மஹெர் என்ற அமைப்பின் நிறுவன இயக்குனராவார். இது வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கக், ஆதரவற்ற பெண்கள் மற்றும், குழந்தைகளுக்கான இடைநம்பிக்கையான ஒரு அமைப்பாகும். [1]

சகோதரி லூசி குரியன்
சகோதரி லூசி குரியன் (இடது)
பிறப்பு1 சூன் 1956 (1956-06-01) (அகவை 67)
கோலயாத், கண்ணூர், கேரளம்
தேசியம் இந்தியா
பணிசமூகப்பணி, பெண்களின் உரிமைகள், கத்தோலிக்க சகோதரி
அறியப்படுவதுமெஹர் அமைப்பின் நிறுவனர்
மனிதநேயம் மற்றும் இயற்கைக்கான சேவைக்கான இடைநம்பிக்கைக்கான சங்கத்தின் நிறுவனர்
பெற்றோர்வச்சச்சில் குரியன் (தந்தை)
மரிய குட்டி (தாய்)
விருதுகள்நாரி சக்தி விருது
பால் ஹாரில் சகா - பன்னாட்டு சுழற் சங்கம்
வனிதா இதழின் ஆண்டின் சிறந்த பெண் 2016
உலகளாவிய மகளிர் தலைமைத்துவ விருது 2011

வாழ்க்கை தொகு

தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் பிறந்த சகோதரி லூசி தனது பன்னிரண்டு வயதில் ஒரு சிறப்பான கல்வியைப் பெறுவதற்காக மும்பைக்குச் சென்றார். மும்பை நகரத்தின் சேரிகளில் வசிக்கும் ஏழைகளின் நிலைமை கண்டது இவரது முதல் அறிமுகமாகும். பத்தொன்பது வயதில், இவர் கன்னியாஸ்திரி ஆக வேண்டும் என்று முடிவு செய்து ஹோலி கிராஸ் அமைப்பில் சேர்ந்தார். ஹோலி கிராஸ் நிறுவனம் இது கற்பித்தல் மற்றும் செவிலியத்தில் கவனம் செலுத்தியது. [2]

இருப்பினும், பின்னர், அன்னை தெரேசாவின் பணிகளால் இவர் ஈர்க்கப்பட்டார். மேலும் தான் உதவ விரும்பும் மக்களுடன் நெருக்கமாக இருக்க விரும்பினார். ஏழைகளின் வாழ்க்கையுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள முடிவெடுத்து அவர்களுடனேய்யெ தங்கினார். வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ ஹோலி கிராஸ் கான்வென்ட்டின் சகோதரி நொய்லின் பிண்டோ என்பவரால் நிறுவப்பட்ட "ஹோப்" அமைப்பில் 1989இல் சேர்ந்தார். தன்னிடம் உதவி கேட்டு வந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் கண்வன் மது அருந்திவிட்டு அவளை தீயிட்டு எரித்தார். இதனால் அவளும் அவளது குழந்தையும் இறந்தனர். [2]

மஹெரின் துவக்கம் தொகு

இந்த நிகழ்ச்சியால் இவர், முற்றிலும் மன்மொடிந்து போனார். இத்தகைய பெண்களுக்காக உதவுவதற்காக மகாராட்டிராவின் புனேவில் 1997இல் "மஹெர்" என்ற அரசு சாரா அமைப்பு நிறுவப்பட்டது. யாரிடமிருந்தும் ஆதரவைப் பெற முடியாததால், அதனை இவர் தனியே தொடங்க வேண்டியிருந்தது. பின்னர், நண்பரான திருத்தந்தை பிரான்சிஸ் டிசா என்பவர், இவருக்கு ஆலோசனையுடன் உதவியும் செய்தார். இது கிறிஸ்தவமல்லாத ஒரு அமைப்பைத் தொடங்க சில நன்கொடையாளர்களைக் கண்டுபிடிக்கவும் உதவியது. மஹெர் 100% மதச்சார்பற்ற நிறுவனமாகும். வன்முறை, பட்டினி அல்லது புறக்கணிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மஹெர் பாதுகாப்பான அடைக்கலமாகவும் மறுவாழ்வும் அளிக்கிறது.

விருதுகளும் கௌரவங்களும் தொகு

இவரது சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக, அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி சகோதரி லூசி குரியனுக்கு நாரி சக்தி விருதினை (பெண்கள் அதிகாரமளித்தல்) 2016 மார்ச் 8 அன்று புதுதில்லியில் வழங்கினார். [3] சமூக சேவையில் சிறந்து விளங்குவதற்கான டி.சி.சி.ஏ.ஏ விருது 2010, உலகளாவிய மகளிர் தலைமைத்துவ விருது 2011, பால் ஹாரிஸ் சக கூட்டளார், ஆண்டின் சிறந்த வனிதா விருது ஆகியவையும் இவரது விருதுகள் பட்டியலில் அடங்கும்.

இவரும் இவரது அமைப்பும் இந்திய தொலைக்காட்சியில் ஆமிர் கான் தொகுத்து வழங்கிய பிரபல நிகழ்ச்சியான சத்யமேவ் ஜெயதே என்ற நிகச்சியில் இடம் பெற்றனர். மேலும், வத்திக்கான் வானொலியிலும் பல முறை இடம்பெற்றுள்ளார். 2015 ஆம் ஆண்டில், கிளிண்டன் குளோபல் முன்முயற்சியில் கலந்து கொள்ள இவர் அழைக்கப்பட்டார். மே 2017 இல், மஹெருக்கு ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை ஒரு "சிறப்பு ஆலோசனை அந்தஸ்து " வழங்கியது.

 
திருத்தந்தை பிரான்சிசுடன் லூசி

சகோதரி லூசி போப் பிரான்சிசு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் ஆகியோரை வெவ்வேறு சந்தித்துள்ளார்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லூசி_குரியன்&oldid=3120806" இலிருந்து மீள்விக்கப்பட்டது