லூ வின்சென்ட்

நியூசிலாந்து துடுப்பாட்டக்காரர்

லூ வின்சென்ட் (பிறப்பு: நவம்பர் 11, 1978) நியூசிலாந்தின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் பொதுவாக துவக்க வீரராக களம் இறங்கினார்.[1] இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் இருபது -20 சர்வதேச துடுப்பாட்டத்தில் நியூசிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார், அத்துடன் நியூசிலாந்து உள்நாட்டு துடுப்பாட்டத்தில் ஆக்லாந்து துடுப்பாட்ட அணி வொர்செஸ்டர்ஷைர் மற்றும் லங்காஷயர் ஆகிய அணிகளிலும் இவர் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஈசிபி 40, பங்களாதேஷ் பிரீமியர் லீக் மற்றும் சாம்பியன்ஸ் லீக் இருபது 20 .[2] இந்திய துடுப்பாட்ட லீக்கில் போட்டிகள் உட்பட பல தொழில்முறை துடுப்பாட்ட போட்டிகளில் இவர் சூதாட்டப்புகாரில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக வின்சென்ட்டை சர்வதேச துடுப்பாட்ட கவுன்சிலின் ஊழல் தடுப்பு பிரிவு (ஏ.சி.எஸ்.யூ) விசாரித்து வருவதாக 2013 டிசம்பரில் தகவல் வெளியானது. 2014 ஜூன் மாதம், வங்காளதேச துடுப்பாட்ட வாரியம் இவர் குற்றவாளி எனக் கண்டறிந்து மூன்று ஆண்டுகள் தடைசெய்தது.[3] 1 ஜூலை 2014 அன்று, சூதாட்டப் புகாரில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.[4] இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் துடுப்பாட்ட வாரியம் வின்சென்ட் அனைத்து வகையான துடுப்பாட்டடிலும் விளையாடுவதற்கு வாழ்நாள் தடை விதித்தது.[5]

சர்வதேச போட்டிகள்

தொகு

ஒரு வலது கை மட்டையாளரான இவர் , 2001-02 ஆம் ஆண்டில் பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். நியூசிலாந்து அணி முதல் ஆட்டப் பகுதியில் 534/9 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது , இதில் நான்கு வீரர்கள் நூறு ஓட்டங்கள் அடித்தனர், ஆனால் வேறு யாரும் இரண்டுஇலக்க ஓட்டங்களை எட்டவில்லை, வின்சென்ட் முதல் ஆட்டப்பகுதியில் 104 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து இரண்டாவது ஆட்டபபகுதியில் 54 ஓட்டங்களைப் பெற்றார். 2005-06 ஆம் ஆண்டில், ஹராரேவில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வின்சென்ட் 172 ரன்கள் எடுத்தார், ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்திற்கான அதிகபட்ச தனிநபர் ஓட்டங்கள் எடுத்து புதிய சாதனை படைத்தார், 1975 உலகக் கோப்பையில் கிழக்கு ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 120 பந்துகளில் 172 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் க்ளென் டர்னரின் சாதனையினை முறியடித்தார்.இதில் 16 நான்குகளும் ஒன்பது ஆறுகளும் அடங்கும் காமன்வெல்த் வங்கி முத்தரப்புத் தொடரில் விளையாடுவதற்காக இவர் மீண்டும் அணியில் சேர்க்கப்படார். ஏனெனில் நாதன் அஸ்டல் இந்தத் தொடர் நடந்து கொண்டிருக்கும் வேளையில் திடீரென ஓய்வு பெற்றார். அதனால் அவருக்கு மாற்று வீரராக இவர் தேர்வானார். அந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்திய இவர் தொடர்ச்சியாக ,மூன்று ஐம்பது ஓட்டங்களை எடுத்தார். சுழற்சி கொள்கையை அமல்படுத்தியதன் காரணமாக தேசிய அணியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், வின்சென்ட் மனச்சோர்வுக் கோளாறால் அவதிப்பட்டார் [6] இந்தியன் துடுப்பாட்ட லீக்கில் சண்டிகர் லயன்ஸ் அணியுடன் கையெழுத்திட்டதன் மூலம் இவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.[7] சில வர்ணனையாளர்கள் வின்சென்ட்டை நியாயமற்ற முறையில் நடத்தியது அவர் தேசிய அணியில் இருந்து நீக்குவதற்கு காரணமாக அமைந்தது என அப்போதைய நியூசிலாந்து பயிற்சியாளர் ஜான் பிரேஸ்வெல் குறிப்பிட்டுள்ளார்.[8]

சான்றுகள்

தொகு
  1. "'Time was right to retire', says Lou Vincent". stuff.co.nz. பார்க்கப்பட்ட நாள் 20 February 2013.
  2. https://www.nzherald.co.nz/sport/news/article.cfm?c_id=4&objectid=11257902
  3. "Match-fixing: Mohammad Ashraful banned for eight years". BBC Sport. https://www.bbc.co.uk/sport/0/cricket/27908730. பார்த்த நாள்: 19 June 2014. 
  4. "New Zealand`s Lou Vincent banned for Life in match fixing case". http://www.patrika.com/news/new-zealands-lou-vincent-banned-for-life-in-match-fixing-case/1015362. பார்த்த நாள்: 1 July 2014. 
  5. "Lou Vincent: Life ban for self-confessed cheat". BBC Sport. https://www.bbc.co.uk/sport/0/cricket/28104033. பார்த்த நாள்: 1 July 2014. 
  6. "Sports star battles depression". New Zealand Herald. 2008-02-10. பார்க்கப்பட்ட நாள் 2008-06-05.
  7. Cricinfo staff (2008-02-28). "New Zealand terminate Vincent's contract". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2008-06-05.
  8. Richard Boock (2008-03-01). "In defence of Lou Vincent". Sunday Star Times. பார்க்கப்பட்ட நாள் 2008-06-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூ_வின்சென்ட்&oldid=3968850" இலிருந்து மீள்விக்கப்பட்டது