லெட்டோவிசைட்டு

சல்பேட்டுக் கனிமம்

லெட்டோவிசைட்டு (Letovicite) என்பது ஓர் அமோனியம் சல்பேட்டு கனிமம் ஆகும். (NH4)3H(SO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் இக்கனிமம் விவரிக்கப்படுகிறது. ஐயுபிஏசி முறை லெட்டோவிசைட்டை டிரையமோனியம் சல்பேட்டு ஐதரசன் சல்பேட்டு என்று குறிப்பிடுகிறது. நிக்கல் சிடரன்சு வகைபாடு 07.ஏடி.20 என்று வகைப்படுத்துகிறது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் லெட்டோவிசைட்டு கனிமத்தை Let[2]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

லெட்டோவிசைட்டு
Letovicite
அன்னா 2 மைன், ஆச்சென், வடக்கு ரைன் - வெசுட்பாலியா,செருமனியில் கிடைத்த அம்மோனியம் சல்பேட்டின் கனிம லெட்டோவிசைட்டின் வெள்ளை படிகங்கள்.
பொதுவானாவை
வகைசல்பேட்டு கனிமம்
வேதி வாய்பாடு(NH4)3H(SO4)2
இனங்காணல்
நிறம்நிறமற்றது முதல் வெள்ளை வரை
படிக இயல்புசிறிய போலி-அறுகோண-தகடுகள், மணிகள்
படிக அமைப்புஒற்றை சரிவச்சு
இரட்டைப் படிகமுறல்தாள் படல இரட்டை
பிளப்புDistinct on {001} இல் தனித்துவம்
முறிவுசமமற்று
மோவின் அளவுகோல் வலிமை1–2
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒப்படர்த்தி1.83
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (−), நிறமற்றது (ஒளியை பிரதிபலிக்கும்)
2V கோணம்75° (கணக்கிடப்பட்டது)
கரைதிறன்நீரில் கரையும்
மேற்கோள்கள்[1]

கழிவு நிலக்கரி குவியல்கள் எரியும் போது வெள்ளை நிறத்தில் ஒற்றை சரிவச்சுடன் இரண்டாம் நிலை கனிமமாகவும். வெந்நீரூற்றுகளில் படிவுகளாகவும் இக்கனிமம் அரிதாக தோன்றுகிறது. 1932 ஆம் ஆண்டு மொராவியாவின் லெட்டோவைசு மண்டலத்தில் முதன் முதலாக கண்டறியப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Leclaire, A.; Ledésert, M.; Monier, J. C.; Daoud, A.; Damak, M. (1 August 1985). "Structure du disulfate acide de triammonium. Une redétermination. Relations des chaînes de liaisons hydrogène avec la morphologie et la conductivité électrique". Acta Crystallographica Section B: Structural Science 41 (4): 209–213. doi:10.1107/S0108768185002002. Bibcode: 1985AcCrB..41..209L. 
  2. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 

நூற்பட்டியல்

தொகு
  • Palache, P.; Berman H.; Frondel, C. (1960). "Dana's System of Mineralogy, Volume II: Halides, Nitrates, Borates, Carbonates, Sulfates, Phosphates, Arsenates, Tungstates, Molybdates, Etc. (Seventh Edition)" John Wiley and Sons, Inc., New York, pp. 397.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெட்டோவிசைட்டு&oldid=4093677" இலிருந்து மீள்விக்கப்பட்டது