சாள்சு அன்ரனி சிறப்புப் படையணி

(லெப். கேணல் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் மரபுவழிப் படையணி ஆகும். தமிழீழ விடுதலைப் புலிககளின் முதலாவது தாக்குதற் தளபதியான லெப்.சீலன் லூக்காஸ் சாள்ஸ் அன்ரனியின் பெயரைத் தன் பெயராகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. இப்படையணி, பயிற்சி, தந்திரம், துணிவு என்னும் மூன்றையும் தன் குறிக்கோள் வாசகமாகக் கொண்டு செயற்படுகின்றது. இது 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் உருவாக்கப்பட்டது.

லெப். கேணல் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சின்னம்

வரலாறு தொகு

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி ஈழப்போரில் நடந்த பெரும்பாலான சமர்களில் பங்கு பற்றி பல வெற்றிகளைப் பெற்றது.

1991 மே 5 அன்று இலங்கைப் படைத்துறையினர் ஓமந்தை கொந்தக்காரர்குளம் கோழியாக்குளம் ஆகிய இடங்களில் "வன்னி விக்கிரம 2" என்ற பெயர் நடவடிக்கை மூலம் எடுத்த பெரும் எடுப்பிலான இராணுவ முன்னெடுப்பை சார்ள்சு அன்ரனி சிறப்புப் படையணி முறியடித்தது. இது அவர்களது முதலாவது சமர் ஆகும். கேணல் பால்ராஜ் தளபதியாக இருந்து லெப். கேணல் ராஜன் இதனை வழி நடத்தி அந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. இச்சமரில் விடுதலைப் புலிகளின் 20 போராளிகள் கொல்லப்பட்டனர்.

5 சிறப்புத் தளபதிகள், 4 தளபதிகள், ஒரு துணைத்தளபதி, 12 தாக்குதல் தளபதிகள் உட்பட 1,200 போராளிகளை இப்படையணி 2005 ஆம் ஆண்டு வரை இழந்துள்ளது.