லொரன்சோ டி அல்மெய்டா
லோரென்சோ டி அல்மெய்டா (Lourenço de Almeida, இறப்பு: 1508[1]), இலங்கையின் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த முதலாவது போர்த்துக்கேயன். இவன் போர்த்துக்கீச மாலுமியும், நாடுகாண் பயணியுமான பிரான்சிஸ்கோ டி அல்மெய்டாவின் மகன் ஆவார்.
லொரன்சோ டி அல்மெய்டா | |
---|---|
பிறப்பு | Martim |
இறப்பு | 1508 Chaul |
பணி | தேடலாய்வாளர், இராணுவ பணியாளர் |
மாலைதீவுகளுக்கு தனது மூன்று கப்பல்களுடன் புறப்பட்ட லோரன்சோ டி அல்மெய்டா கடல் நீரோட்டத்தின் காரணமாக வடபக்கமாக இழுக்கப்பட்டு 1505 ஆம் ஆண்டு நவம்பர் 15 இல் இலங்கைக்கரையில் தரையிறங்கினார். இலங்கைத்தீவின் கறுவா, மிளகு, கஸ்தூரி, யானைகள், யானைத்தந்தம், இரத்தினம் மற்றும் முத்துக்கள் போன்றனவற்றால் கிடைக்கும் இலாபத்தின்பால் மனம் கவரப்பட்ட அவருடைய வழி வந்தவர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையில் எண்ணற்ற சமர்கள் ஏற்பட்டு, இறுதியில் வியாபாரத் தனியுரிமை நிறுவப்பட்டது[2]. இதன் மூலம் போர்த்துக்கேயப் பேரரசை ஆசியா வரை பரப்பினார்.
இந்தியாவின் கோழிக்கோட்டில் இடம்பெற்ற கடற்சமரில் கொல்லப்பட்டார்[3].
மேற்கோள்கள்தொகு
- ↑ பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் லொரன்சோ டி அல்மெய்டா
- ↑ திருக்கோணமலையின் வரலாறு, லெப். கேணல். ஜீ.பி.தோமஸ் R.A (நூலகம் திட்டத்தில்)
- ↑ Rose, Hugh James [1853] (1857). A New General Biographical Dictionary, London: B. Fellowes et al.