லோகேஷ் திரையுலக அண்டம்

லோகேஷ் திரையுலக அண்டம் (ஆங்கில மொழி: Lokesh Cinematic Universe) என்பது லோகேஷ் கனகராஜ் என்பவர் உருவாக்கிய இந்தியத் தமிழ் மொழி அதிரடிப் பரபரப்பூட்டும் திரைப்படங்களின் பகிரப்பட்ட அண்டம் ஆகும்.[1][2][3][4] அண்டத்தின் முதலம்சமானக் கைதி 2019 ஆம் ஆண்டு வெளியாகி இரண்டாவதாக விக்ரம் 3 சூன் 2022 இல் வெளியானது.[5][6][7] இது அதிக வசூல் ஈட்டிய தமிழ்த் திரைப்படங்களுள் ஒன்றாகும்.[8]

லோகேஷ் திரையுலக அண்டம்
படைத்தவர்லோகேஷ் கனகராஜ்
அசல் வேலைப்பாடுகள்கைதி (2019)
உரிமையாளர்ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ்
திரைப்படங்களும் தொலைக்காட்சியும்
திரைப்படங்கள்
ஒலி
ஒலிப்பதிவு"கைதி ஒலிச்சுவடு" "விக்ரம் ஒலிச்சுவடு"
இதர
பதியீடுமொத்தம் (2 திரைப்படங்கள்):
மதிப்பீடு. ₹145–175 கோடி
சீட்டுக்கூண்டுமொத்தம் (2 திரைப்படங்கள்):
மதிப்பீடு. ₹480 கோடி

வளர்ச்சி தொகு

முதல் முழு நீளத் திரைப்படமான மாநகரத்தை முடித்ததிலிருந்தே லோகேஷ் கனகராஜ் பகிரப்பட்ட திரைப்படங்களின் அண்டத்தைப் படைத்து அதன் உலகை விரிவாக்க வேண்டும் என்றும் இதுபோன்ற செயல்திட்டங்களுக்கு நீண்ட ஆயுள் இருக்கும் என்றும் கூறினார். கைதியின் தயாரிப்பின்போது அந்த யோசனையைப் புத்தாய பல திறந்த முனைக் கதைக்களங்களுடன் சோதித்துப் பின்பு அதனை உடைமைகளை உடைய ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் ஆகியவற்றுடன் ஒருங்கே பணிபுரிந்து விக்ரம் திரைப்படத்தில் இணைத்தார். இத்தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களே பகிரப்பட்ட அண்டத்தை நிறுவி கைதி 2 மற்றும் விக்ரம் 2 உட்பட வருங்காலத்தில் வெளியாகும் பற்பல செயல்திட்டங்களை அறிவித்துள்ளன. இவையே லோகேஷ் திரையுலக அண்டம் என்று அதிகாரப்பூர்வமாக நன்றிக்கடன் ஏற்கும்.[9][10][11][2]

திரைப்படங்கள் தொகு

திரைப்படம் வெளியீட்டு தேதி இயக்குநர் திரைக்கதையாசிரியர்(கள்) தயாரிப்பாளர்(கள்)
கைதி 25 அக்டோபர் 2019 லோகேஷ் கனகராஜ் லோகேஷ் கனகராஜ் மற்றும் பார்த்திபன் எஸ். ஆர். பிரகாஷ்பாபு, எஸ். ஆர். பிரபு மற்றும் திருப்பூர் விவேக்
விக்ரம் 3 சூன் 2022 லோகேஷ் கனகராஜ் கமல் ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன்

வருங்காலம் தொகு

கைதி 2 தொகு

பின்தொடர்ச்சி அறிவிக்கப்பட்டது மற்றும் கார்த்தி அவரது கதாப்பாத்திரம் 'டில்லி'யாகத் தொடர்ந்து நடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.[10][12][13]

விக்ரம் 2 தொகு

விக்ரமின் உச்சக்கட்ட காட்சிக்குப் பிறகு சூரியாவை 'ரோலெக்ஸ்'ஆக அறிமுகப்படுத்தி பின்தொடர்ச்சி அறிவிக்கப்பட்டது.[14][15][16]

நடிகர்களும் கதாப்பாத்திரங்களும் தொகு

பட்டியல் குறிசுட்டி(கள்)

இப்பிரிவு லோகேஷ் திரையுலக அண்டத்தில் தோன்றிய மற்றும் தோன்றவிருக்கும் கதாப்பாத்திரங்களைக் காட்டுகிறது.

  • காலியான கரு சாம்பல்நிற கட்டமானது கதாப்பாத்திரம் திரைப்படத்தில் இல்லை (அ) அக்கதாப்பாத்திரத்தின் அதிகாரப்பூர்வ இருப்பு உறுதிபடுத்தப்படவில்லை என்பதைக் குறிக்கிறது.
  • கௌ என்பது கௌரவக் கதாப்பாத்திரம் என்பதைக் குறிக்கிறது.
  • கு என்பது குரல்-மட்டுமான கதாப்பாத்திரம் என்பதைக் குறிக்கிறது.
  • என்பது கதாப்பாத்திரத்தின் இளைய பதிப்பைக் குறிக்கிறது.
கதாப்பாத்திரங்கள் திரைப்படங்கள்
கைதி (2019) விக்ரம் (2022)
டில்லி கார்த்தி கார்த்திகு
வியவர் அருண் குமார் விக்ரம் கமல் ஹாசன்
ரோலெக்ஸ் சூரியாகௌ
அன்பு அர்ஜுன் தாஸ் அர்ஜுன் தாஸ்கௌ
முகவர் அமர் ஃபஹத் ஃபாசில்
சந்தானம் விஜய் சேதுபதி
ஆய்வாளர் பேஜாய் நரேன்
ஸ்டீஃபென் ராஜ் ஹரீஷ் பேரடி ஹரீஷ் பேரடிகௌ
அடைக்கலம் ஹரிஷ் உத்தமன் ஹரிஷ் உத்தமன்கௌ
காமாட்சி தீனா தீனாகௌ
அமுதா பேபி மோனிக்கா பேபி மோனிக்காகௌ
நப்போலியன் ஜார்ஜ் மரியன்
துணை காவல் ஆணையர் பிரபஞ்சன் காளிதாஸ் ஜெயராம்
ஜோஸ் செம்பன் வினோத் ஜோஸ்
முகவர் டீனா வசந்தி
முகவர் லாரன்ஸ் இளங்கோ குமரவேல்
முகவர் உப்பிலியப்பன் சந்தான பாரதி

வரவேற்பு தொகு

சீட்டுக்கூண்டுச் செயல்புரிவு தொகு

லோகேஷ் திரையுலக அண்டமானது அதிக வசூல் ஈட்டிய தமிழ்த் திரைப்படங்களுள் ஒன்றாகும்.

திரைப்படம் வெளியீட்டு தேதி சீட்டுக்கூண்டு பாதீடு மேற்கோள்(கள்)
கைதி 25 அக்டோபர் 2019 ₹105 கோடி ₹25 கோடி [17]
விக்ரம் 3 சூன் 2022 ₹460 கோடி ₹120-150 கோடி [18][19][20]
மொத்தம் ₹565 கோடி ₹145-175 கோடி

மேற்கோள்கள் தொகு

  1. Athimuthu, Soundarya (2022-06-14). "What Is 'Vikram' Director Lokesh Kanagaraj's 'Lokesh Cinematic Universe'?". TheQuint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.
  2. 2.0 2.1 "Lokesh Kanagaraj reveals the idea of a cinematic universe - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.
  3. Desk, Online. "5 reasons why you shouldn't miss Lokesh Kanagaraj's 'Vikram'". DT next (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.
  4. "A Ghost and a prisoner - One-stop shop for all things that might connect Kaithi and Vikram". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.
  5. Athimuthu, Soundarya (2022-06-03). "'Vikram' Review: Kamal, Fahadh & Vijay Sethupathi Shine in Lokesh's Universe". TheQuint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.
  6. "Vikram sequel to connect to Kaithi; Director Lokesh Kanagaraj planning crime cinematic universe [Exclusive]". Bollywood Life (in ஆங்கிலம்). 2022-06-03. பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.
  7. "Kamal Haasan confirms Lokesh Kanagaraj's cinematic universe while talking about 'Vikram'? - Tamil News". IndiaGlitz.com. 2022-05-19. பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.
  8. "Vikram director Lokesh Kanagaraj is building his own cinematic universe". The Week (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.
  9. NELSON-ஐ திட்டுறது கஷ்டமா இருக்கு! - Lokesh Kanagaraj Post Release Interview Part-1 | Vikram | Kamal, பார்க்கப்பட்ட நாள் 2022-06-21
  10. 10.0 10.1 "Lokesh Kanagaraj spills a bean on the next film in his cinematic universe - 'Kaithi 2' confirmed! - Tamil News". IndiaGlitz.com. 2022-06-09. பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.
  11. Lokesh kanagaraj Interview With Baradwaj Rangan | Lights Camera Analysis | Vikram, பார்க்கப்பட்ட நாள் 2022-06-21
  12. "Vikram: Lokesh Kanagaraj confirms Kaithi 2 as netizen asks him about Arjun Das' character in Kamal Haasan's film". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.
  13. "Kamal Haasan-Suriya-Karthi combo in an unexpected mega project? - Tamil News". IndiaGlitz.com. 2022-06-02. பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.
  14. "Vikram: Two sequels of Kamal Haasan starrer in works? Here's what we know about Vikram 2 & Vikram 3". Bollywood Life (in ஆங்கிலம்). 2022-06-08. பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.
  15. "EXCLUSIVE: Vijay to play a gangster in his 40s in Lokesh Kanagaraj's next; Might enter LCU with Kamal Haasan". PINKVILLA (in ஆங்கிலம்). 2022-06-18. பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.
  16. "Vijay to play gangster in Lokesh Kanagaraj's film, Kamal Haasan might do cameo in Thalapathy 67". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.
  17. "Bigil, Petta, Viswasam, Kanchana 3, Nerkonda Paarvai, Kaithi power Kollywood's theatrical takings in 2019 to Rs 1000 cr-Entertainment News , Firstpost". Firstpost (in ஆங்கிலம்). 2019-12-04. பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.
  18. "'Vikram' box office collection day 16: Lokesh Kanagaraj's directorial crosses 150 crores in Tamil Nadu - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.
  19. Nast, Condé (2022-06-03). "Vikram: Here's how many crores Kamal Haasan, Fahadh Faasil & others charged for their roles in the movie made on a budget of Rs 120 Crores". GQ India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.
  20. "Kamal Haasan's 'Vikram' to hit theatres tomorrow. Can it beat 'Pushpa', 'RRR' and 'KGF: Chapter 2'?". Business Today (in ஆங்கிலம்). 2022-06-02. பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோகேஷ்_திரையுலக_அண்டம்&oldid=3818902" இலிருந்து மீள்விக்கப்பட்டது