லோக் ஜனசக்தி கட்சி
லோக் ஜனசக்தி கட்சி (LJP) இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இயங்கி வரும் ஒரு மாநில அரசியல் கட்சி ஆகும். 2000 ஆம் ஆண்டு இந்த கட்சி ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரிந்து உருவானது. பீகாரில் உள்ள தலித் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர், பிரதிநிதித்துவம் பெற இக் கட்சி செயல்படுகிறது.இராம் விலாசு பாசுவான் இக்கட்சியை உருவாக்கினார்.
லோக் ஜனசக்தி கட்சி | |
---|---|
நிறுவனர் | இராம் விலாசு பாசுவான் |
தொடக்கம் | 28 நவம்பர் 2000 |
பிரிவு | ஜனதா தளம் |
தலைமையகம் | இந்திகாப் சுபானி, 12, ஜன்பாத், புது தில்லி, இந்தியா |
இளைஞர் அமைப்பு | யுவ லோக் ஜனசக்தி கட்சி |
தொழிலாளர் அமைப்பு | ஜனசக்தி மஸ்தூர் சபை |
கொள்கை | சமய சார்பின்மை சமூகவுடைமை |
இ.தே.ஆ நிலை | மாநிலக் கட்சி[1] |
கூட்டணி | தேசிய ஜனநாயக கூட்டணி (2000—2003, 2014—2021) ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (2004-2009) |
இணையதளம் | |
ljp | |
இந்தியா அரசியல் |
வரலாறு
தொகுஐக்கிய சனதா தளத்திலிருந்து பிரிந்து 2000 ஆம் ஆண்டு இராம் விலாசு பாசுவான் உருவாக்கினார். இக்கட்சி உருவாக்கத்திற்கு அவரது தம்பி செய் நாராயண் பிரசாத் நிசாத்தும் ரமேசு சிகாசினாகியும் துணையிருந்தார்கள்.[2][3][4]
2004 மக்களவை தேர்தலில் காங்கிரசும் இராச்டிரிய சனதா தளமும் உள்ள கூட்டணியில் போட்டியிட்டு நான்கு மக்களவைத் தொகுதிகளில் வென்றது. இராம் விலாசு பாசுவான் ஒன்றிய வேதிப்பொருட்கள் உர அமைச்சராக தொடர்ந்ததுடன் உருக்கு அமைச்சராகவும் பதவி வகித்தார்.
2005 ஆம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரசும் இராச்டிரிய சனதா தளமும் உள்ள கூட்டணியில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள்.[5]
அத்தேர்தலில் எக்கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை, இக்கட்சி எந்த கூட்டணியும் ஆட்சியமைக்க ஆதரவு தர மறுத்து விட்டது. அதனால் இக்கட்சியின் சில சட்டமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய சனதாதளத்திற்கு கட்சி மாறி தேசிய சனநாயக கூட்டணி ஆட்சியமைக்க உதவப் போவதாக வதந்தி உலவியது. இந்த பல்வேறு குழப்பங்களால் பீகாரில் குடியரசு தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்டது. சில மாதங்கள் கழித்து சட்டமன்றம் கலைக்கப்பட்டு 2005 அக்டோபரில் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் தேசிய சனநாயக கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று நிதிசு குமார் தலைமையில் ஆட்சியமைத்தது. அக்டோபரில் நடந்த தேர்தலில் இக்கட்சி 10 தொகுதிகளிலேயே வெல்ல முடிந்தது. [5][5][6][6][7]
இராச்டிரிய சனதா தளத்துடனும் சமாச்வாடி கட்சியுடனும் இணைந்து நான்காவது அணி அமைத்து 2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை சந்தித்தில் இராச்டிரிய சனதா தளம் நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. இக்கட்சி ஓர் தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தேர்தலுக்குப் பின் லாலு பிரசாத் யாதவ் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை விட்டு வந்தது தவறென்று கூறி புதிதாக மன் மோகன் சிங் தலைமையில் அமையவிருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தார்.
முன்னாள் இந்திய முதன்மை அமைச்சர் வி. பி. சிங் உருவாக்கிய சன மோர்ச்சாவை, வி. பி. சிங்கின் மகனும் அதன் தலைவருமான அசய பிரதாப் சிங் லோக் சனசக்தியுடன் 2009 மார்ச்சில் இணைத்தார். உடனடியாக அசய பிரதாபுக்கு கட்சியில் உயர் பொறுப்பு வழங்கப்பட்டது. [8]
தங்கள் மாநில கட்சிப்பிரிவை இராம் விலாசு பாசுவான் கவனிப்பதில்லை எனக்கூறி 2009 மக்களவை தேர்தலுக்கு முன்பு சார்கண்ட் மாநில லோக் சனசக்தியினர் காங்கிரசில் இணைந்தனர். பின்பு இராம் விலாசு பாசுவான் சார்கண்ட் கட்சிப்பிரிவை கலைத்தார்.[9]
2010 பீகார் சட்டப்பேரவை தேர்தலில் இராச்டிரிய சனதா தளத்துடன் கூட்டணி அமைத்துப்போட்டியிட்டதில் 6.75% வாக்குகளை பெற்று மூன்று தொகுதிகளில் வென்றது. இது முந்தைய 2005 அக்டோபர் தேர்தலில் வென்றதை விட ஏழு தொகுதிகள் குறைவாகும்.
2011 ஆகத்தில் இதன் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களில் இருவர் ஐக்கிய சனதா தளத்தில் இணைந்து விட்டதால் லோக் சனசக்தி ஐக்கிய சனதா தளத்துடன் இணைந்து விட்டதாக பீகார் சட்டமன்ற சபாநாயகர் அறிவித்தார். இதை கட்சி மறுத்து தாங்கள் இணையவில்லை என்றது.[10]
27 பிப்ரவரி 2014 அதிகாரபூர்மாக லோக் சனசக்தி பாசக தலைமையிலான தேசிய சனநாயக கூட்டணியில் இணைவதாக அறிவித்தது. [11] 2014 மக்களவை தேர்தலில் பீகாரில் போட்டியிட்ட ஏழு இடங்களில் ஆறில் வெற்றி பெற்றது. இராம் விலாசு பாசுவான், சிரக் பாசவான் வெற்றி பெற்றனர். மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதால் இராம் விலாசு பாசுவான் மாநிலங்கள் அவையிலிருந்து விலகினார். உணவு மற்றும் நுகர்பொருள் அமைச்சர் பொறுப்பை இராம் விலாசு பாசுவான் பெற்றார்
2015 பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாசகவின் தேசிய சனநாயக கூட்டணியில் 40 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டில் மட்டும் வென்றனர். இது 2010இல் பெற்றதை விட ஒன்று குறைவாகும்.
2017இல் ஐக்கிய சனதா தளம் தேசிய சனநாயக கூட்டணியில் இணைந்தபின் இராம் விலாசு பாசுவானின் சகோதரர் பசுபதி பராசு என்பவர் நிதிசு குமார் அமைச்சரவையில் கால்நடை மற்றும் மீன் வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
2020 பீகார் சட்டமன்ற தேர்தல்
தொகு2014இல் தேசிய சனநாயக கூட்டணியில் இணைந்த பின் பீகாரில் பாசகவும் லோக் சனசக்தியும் தேசிய சனநாயக கூட்டணியின் பெரிய கட்சிகளாக இருந்தன. 2015 தேர்தலில் தேசிய சனநாயக கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட மாகாகாத்பந்தன் கூட்டணியில் இராசுட்டிரிய சனதா தளம் மற்றும் இந்திய தேசிய காங்கிரசுடன் ஐக்கிய சனதா தளம் இருந்தது. 2017இல் அக்கூட்டணியை விட்டு தேசிய சனநாயக கூட்டணியில் இணைந்தது. தொகுதி பங்கீட்டு காரணமாக இக்கட்சியின் தலைவர் சிரக் பாசுவான் தனித்து போட்டியிடுவது என்று முடிவெடுத்தார்d[12]
லோக் சனசக்தியின் நாடாளுமன்ற குழு பாசகவை ஆதரிப்பதென்றும் பாசக போட்டியிடாத அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று கட்சி தலைமையின் முடிவை ஏற்று முடிவெடுத்தனர். [13]
மேற்கோள்கள்
தொகு- ↑ "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013" (PDF). India: Election Commission of India. 2013. Archived from the original (PDF) on 24 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.
- ↑ Yadav stalled rapproachement, says Paswan
- ↑ Paswan launches party
- ↑ Janata Dal(U) splits
- ↑ 5.0 5.1 5.2 "Rameshwar Prasad & Ors Versus Union of India & Anr". Supreme Court of India. பார்க்கப்பட்ட நாள் 24 January 2006.
- ↑ 6.0 6.1 "Bihar comes under President's rule". The Hindu. 7 March 2005 இம் மூலத்தில் இருந்து 4 செப்டம்பர் 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050904164313/http://www.hindu.com/2005/03/08/stories/2005030807560100.htm. பார்த்த நாள்: 28 February 2014.
- ↑ "Governor recommends President's rule in Bihar". Rediff. 6 March 2005. http://www.rediff.com/election/2005/mar/06bihar.htm. பார்த்த நாள்: 28 February 2014.
- ↑ Parsai, Gargi (7 March 2009). "Jan Morcha merges with LJP". The Hindu இம் மூலத்தில் இருந்து 10 மார்ச் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090310000827/http://www.hindu.com/2009/03/07/stories/2009030760711200.htm. பார்த்த நாள்: 28 February 2014.
- ↑ "LJP's Jharkhand unit merges with Congress". The Hindu. 1 April 2009 இம் மூலத்தில் இருந்து 5 ஏப்ரல் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090405184607/http://www.hindu.com/2009/04/01/stories/2009040155171000.htm. பார்த்த நாள்: 1 March 2014.
- ↑ "LJP denies merger with ruling JD-U in Bihar". Dainik Bhaskar. 13 August 2011. http://daily.bhaskar.com/article/BIH-ljp-denies-merger-with-ruling-jd-u-in-bihar-2353023.html. பார்த்த நாள்: 28 February 2014.
- ↑ "Paswan returns to NDA, formally announces alliance with BJP". Times of India. 27 February 2014. http://timesofindia.indiatimes.com/india/Paswan-returns-to-NDA-formally-announces-alliance-with-BJP/articleshow/31119521.cms.
- ↑ "Lok Janshakti Party to contest Bihar assembly polls alone". hindustan times. பார்க்கப்பட்ட நாள் 2020-10-05.
- ↑ "LJP won't contest assembly polls under Nitish Kumar's leadership in Bihar". Times of India. பார்க்கப்பட்ட நாள் 2020-10-05.