வங்காள நவாபுகள்

வங்காள நவாபுகள் (Nawabs of Bengal or Nawab Nizam of Bengal and Orissa) முகலாயப் பேரரசின் வங்காளம், ஒடிசா, பிகார் மற்றும் முர்சிதாபாத் பிரதேசங்களின் நவாப் நிசாம் எனும் ஆளுநர்கள் ஆவர்.

வங்காள நவாபுகள்
1717–1765
குறிக்கோள்: Nil Desperandum
"There is no cause for despair, never despair"
வங்காள, முர்சிதாபாத் நவாபுகள்அமைவிடம்
தலைநகரம்முர்சிதாபாத்c
பேசப்படும் மொழிகள்வங்காளம்
பாரசீகம்
உருது
போஜ்புரி
மைதிலி
அசாமியம்
சமயம்
சியா இசுலாம்
அரசாங்கம்மாகாணம்
வரலாற்று சகாப்தம்முகலாயப் பேரரசு
இந்தியாவில் கம்பெனி ஆட்சி
• முகலாயப் பேரரசு
1526
• Established
1717
23 சூன் 1757
22 அக்டோபர் 1764
• மன்சூர் அலி கானிடமிருந்து வங்காள நவாபு பதவி பறித்தல்
1880
• Disestablished
1765
மக்கள் தொகை
• 1901
75 மில்லியன்[1]
முந்தையது
பின்னையது
வங்காள சுல்தானகம்
தில்லி சுல்தானகம்
முகலாயப் பேரரசு
இந்தியாவில் கம்பெனி ஆட்சி
வங்காள மாகாணம்
பிரித்தானிய இந்தியா
தற்போதைய பகுதிகள் இந்தியா
 வங்காளதேசம்
  1. 1880ல் நவாப் பட்டம் ஒழித்தல்
  2. After Indian independence in 1947, followed by the promulgation of the இந்திய அரசியலமைப்பு on 26 January 1950, which marked the transformation of the Dominion of India into the இந்தியா, the Article 18 of the Indian Constitution abolished all titles, except those given by the இந்திய அரசு to those who have made their mark in military and academic fields. However, under the policy of Privy Purse nobles were allowed to enjoy certain privileges and keep their titles. However, this policy was abolished in 1971 by the twenty-sixth Amendment of the Constitution of India. Thus the title of the "Nawab Bahadur of Murshidabad" was officially, constitutionally and legally abolished in 1971.
  3. Murshidabad was the capital for both the Nawabs of Bengal and the Nawabs of Murshidabad.

வங்காள நவாபுகள் முகலாயப் பேரரசின் பிரதிநிதிகளாக பெயரளவில் இருப்பினும், 1717 - 1765க்கு இடைப்பட்ட காலங்களில், வங்காள மாகாணத்தின் தன்னாட்சியாளர்களாகவே விளங்கினர்.

வங்காளத்தின் இறுதி நவாப் சிராஜுதின் உத் தௌலாவை, 1757ல் நடைபெற்ற பிளாசிப் போரின் போது, பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி படைத்தலைவர்களிடம், மிர் ஜாஃபர் என்ற படைத்தலைவர் காட்டிக் கொடுத்ததால், அவருக்கு வஙகாள நவாப் பதவியை ஆங்கிலேயர்கள் பரிசாக அளித்தனர். [2]

1765 முதல் 1772 முடிய பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனிக்கு அடங்கிய வங்காள பொம்மை நவாபுகள் ஆண்டனர். 1772ம் ஆண்டிலிருந்து வஙகாளத்தை பிரித்தானியர்களின் நேரடி ஆட்சியின் கீழ் சென்றது.

1793ம் ஆண்டு முதல் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியினர், வங்காள நவாபுகளின் ஆளுநர் பதவிகளை பறித்துக் கொண்டு, அதற்கு பதிலாக ஓய்வூதியம் வழங்கினர்.[3][4]

நவம்பர், 1880ல் வங்காளத்தின் இறுதி நவாப் மன்சூர் அலி கானுக்குப் பதிலாக அவரது மகன் அசன் அலி மிர்சாவை வங்காளம் மற்றும் முர்சிதாபாத் நவாபாக பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் நியமித்தனர். [5].[5][6] 1880ல் வங்காள நவாபுகளின் பட்டங்களை ஆங்கிலேயர்கள் பறித்தனர்.

1947ல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர், வங்காள மாகாணத்தில் சுதேச சமஸ்தானங்கள் இந்தியா மற்றும் கிழக்கு பாகிஸ்தானுடன் இணைக்கப்ப்பட்டது.[7] முர்சிதாபாத், 17 ஆகஸ்டு 1947ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[7] முர்சிதாபாத் நவாப்புகளின் இறுதி வாரிசு 1969ல் வாரிஸ் அலி மிர்சாவுடன் முடிவுற்றதாக இந்திய அரசு அறிவித்தது.[8]

வங்காள நவாபுகள்தொகு

 
வங்காள நவாப் சிராச் உத் தவ்லாவின் கல்லறை

வங்காளம் மற்றும் முர்சிதாபாத்தை 1717 முதல் 1880 முடிய நசிரி, அப்சர் மற்றும் நஜபி என மூன்று இசுலாமிய வம்ச நவாபுகள் ஆண்டனர்.[9]

நசிரி வம்ச நவாபுகள் 1717 முதல் 1740 வரையும், அப்சர் வம்ச நவாபுகள் 1740 முதல் 1757 வரையும் ஆண்டனர். வங்காளத்தை மூன்றாவதாகவும், இறுதியாக ஆண்டவர்கள் நஜபி இசுலாமிய நவாபுகள் ஆவார்.[10]

முகலாயப் பேரரசில் வங்காள நவாபுகள்தொகு

முகலாயப் பேரரசில் செழிப்பு மிக்க மாகாணம் வங்காளம் ஆகும்.[11] 1700ல் முகலாயப் பேரரசின் வீழ்ச்சி காலத்தில், வங்காள நவாபுகள் பெயரளவிற்கு முகலாயப் பேரரசின் பிரதிநிதிகளாக வங்காளத்தை ஆண்டாலும், தங்களது படைகளை வலுப்படுத்தி தன்னாட்சியுடன் ஆண்டனர்.[12][13]

வங்காள நவாபுகள் மீதான மராத்தியப் படையெடுப்புகள்தொகு

மராத்தியர்கள் 1741 முதல் 1748 வரை ஆறு முறை வங்காளத்தின் மீது படையெடுத்தனர். இப்படையெடுப்புகளின் போது, மராத்தியப் படைத்தலைவர் இரகுநாதராவ், வங்காள நவாபுகள் ஆண்ட தற்கால ஒடியாவின் பகுதிகளை கைப்பற்றினார். மராத்தியப் படையெடுப்புகளால் பிகார், வங்காளம், ஒடிசா பகுதிகளின் பொருளாதாரம் பாதிப்படைந்தது.

1751ல் வங்காள நவாப் அலிவர்த்தி கான், மராத்தியர்களுடன் செய்து கொண்ட போர் ஒப்பந்தப்படி, வங்காள நவாபுகள் தங்களின் ஆட்சிப் பகுதியான ஒடிசாவின் பெரும்பகுதிகளை மராத்தியர்களுக்கு விட்டுக்கொடுத்ததுடன், ஆண்டுக்கு 12 இலட்சம் ரூபாயும் கப்பம் கட்ட வேண்டியதாயிறு. [14]

கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சியில் வங்காள நவாபுகளும் மற்றும் நவாபுகளின் வீழ்ச்சியும்தொகு

1750களில் மராத்தியப் படைகளால், முகலாயப் பேரரசின் முதுகெலும்பு முறிக்கப்பட்ட நிலையில், பேரரசு முழுவதும் தன்னாட்சி கொண்ட சிறிதும், பெரிதுமான புதிய இராச்சியங்கள் உருவாயின.

1757ல் நடைபெற்ற பிளாசி சண்டையில், வங்காள நவாப் சிராச் உத் தவ்லாவை, கிழக்கிந்தியக் கம்பெனி படைத்தலைவர் ராபர்ட் கிளைவ் வெற்றி கொண்டார்.[15] இப்போருக்குப் பின்னர் வங்காள நவாபுகள், ஆங்கிலேயப் படைகளின் பாதுக்காப்பில், பொம்மை நவாபுகளாக வங்காளத்தை ஆண்டனர்.[15]

பிளாசிப் போரில் ஆங்கிலேயர்களுக்கு உதவிய மீர் ஜாபரை பாரட்டும் விதமாக, சிராச் உத் தவ்லாவிற்கு பதிலாக வங்காள நவாபாக நியமித்தனர்.[15]

வங்காள நவாபு மிர் ஜாஃபர் மற்றும் அயோத்தி நவாபு ஆகியோர் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியுடன் கூட்டுச் சேர்ந்து ஆங்கிலேயப் படைகளை, 1764ல் பிகாரில் உள்ள பக்சாரில் நடைபெற்ற பக்சார் சண்டையில், ஆங்கிலேயப் படைகள் வங்காள நவாபு மற்றும் அயோத்தி நவாபுகளின் படைகளை வென்றனர்.

போரின் முடிவில் 12 ஆகஸ்டு 1765 அன்று முகலாயப் பேரரசர் ஷா ஆலமிற்கும், கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே அலகாபாத் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தப்படி, வங்காளம், பிகார் மற்றும் ஒடிசா உள்ளிட்ட கிழக்கிந்தியாவின் மக்களிடம் கிழக்கிந்திய கம்பெனி நேரடியாக வரி வசூலிக்கும் உரிமை பெற்றது. மேலும் அயோத்தி நவாப் சுஜா உத்-தவுலா அலகாபாத் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, கம்பனியாருடன் அமைதி ஏற்படுத்திக் கொண்டார்.

மேலும் வங்காள மாகாணத்தின் பெரும் பகுதிகளில் நிலவரி வசூலிக்கும் உரிமையை கிழக்கிந்தியக் கம்பெனியினர் பெற்றனர். 1774ல் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியின் இந்தியத் தலைமை ஆளுநர் ஆக பதவியேற்ற வாரன் ஹேஸ்டிங்ஸ், 1765ல் வங்காளத்தை கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிப் பகுதியாக வங்காள மாகாணமாக நிறுவினர். கொல்கத்தா நகரம் வங்காள மாகாணத்திற்கு தலைநகரானது. இந்தியத் தலைமை ஆளுநர் வாரன்ஹேஸ்டிங்ஸ், வங்காள நவாபுகளுக்கு பணியிலிருந்து ஓய்வு கொடுத்து, மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கினர்.

வங்காள நவாபுகளின் பட்டியல்தொகு

சர்பராஸ் கான் மற்றும் மீர் ஜாபர் ஆகியோர் மட்டுமே இரண்டு முறை வங்காள நவாபுகளாக பதவியில் இருந்தனர்.[16]1717ல் முர்சித் குயுலி கானால் நிறுவப்பட்ட வங்காள நவாபுகளின் ஆட்சி, முர்சிதாபாத் நவாப் மன்சூர் அலி கானுடன் 1881ல் நிறைவுற்றது.[12][17][16]

படம் பட்டப் பெயர் சொந்தப் பெயர் பிறப்பு ஆட்சிக் காலம் இறப்பு
நசிரி வம்சம்
  ஜாபர் கான் பகதூர் நசிரி முர்சித் குயுலி கான் 1665 1717–1727 1727[18][19][20]
  அலாவுதீன் ஹைதர் ஜங் சர்பாரஸ் கான் 1700க்குப் பின் 1727-1731 29 ஏப்ரல் 1740[21]
  சூஜா உத் தௌலா சூஜா உத்தீன் முகமது கான் 1670களில் சூலை 1731 – 26 ஆகஸ்டு 1739 26 ஆகஸ்டு 1739[22][23]
  அலாவுதீன் ஹைதர் ஜங் சர்பராஸ் கான் 1700க்குப் பின்னர் 13 மார்ச் 1739 – ஏப்ரல் 1740 29 ஏப்ரல் 1740[21]
அப்சர் வம்சம்
  ஹசீம் உத் தௌலா அலிவர்த்தி கான் 10 மே 1671க்கு முன் 29 ஏப்ரல் 1740 – 9 ஏப்ரல் 1756 9 April 1756[24][25]
  சிராச் உத் தவ்லா முகமது சிராஜ் உத் தௌலா 1733 ஏப்ரல் 1756 – 2 சூலை 1757 2 சூலை 1757[26][27]
நஜபி வம்சம்
  ஜாபர் அலி கான் பகதூர் மிர் ஜாஃபர் 1691 சூன் 1757 – அக்டோபர் 1760 17 சனவரி 1765[28][29][30]
  இதிமத் உத் தௌலா மீர் காசிம் ? 20 அக்டோபர் 1760 – 1763 8 மே 1777[31]
  ஜாபர் அலி கான் பகதூர் மிர் ஜாஃபர் 1691 25 சூலை 1763 – 17 சனவரி 1765 17 சனவரி 1765[31][32]
  நசம் உத் தௌலா நசிமுத்தீன் அலி கான் பகதூர் 1750 5 பிப்ரவரி 1765 – 8 மே 1766 8 May 1766[33]
  செயிப் உத் தௌலா நஜபுத் அலி கான் பகதூர் 1749 22 மே1766 – 10 மார்ச் 1770 10 மார்ச் 1770[34]
  முபாரக் உத் தௌலா அஸ்ரப் அலி கான் பகதூர் 1759 21 மார்ச்1770 – 6 செப்டம்பர் 1793 6 செப்டம்பர் 1793[35]
  அசூத் உத் தௌலா பாபர் அலி கான் ? 1793 – 28 ஏப்ரல்1810 28 ஏப்ரல் 1810[36]
  அலி ஜா ஜெயினுப்பித்தீன் அலி கான் பகதூர் ? 5 சூன் 1810 – 6 ஆகஸ்டு 1821 6 ஆகஸ்டு 1821[37][38]
  வாலா ஜா அகமது அலி கான் பகதூர் ? 1821 – 30 அக்டோபர் 1824 30 அக்டோபர் 1824[39][40]
  உமாயூன் ஜா முபாரக் அலி கான் பகதூர் 29 செப்டம்பர் 1810 1824 – 3 அக்டோபர் 1838 3 அக்டோபர் 1838[41][42][43]
  பெரதூன் ஜா மன்சூர் அலி கான் 29 அக்டோபர் 1830 29 அக்டோபர் 1838 – 1 நவம்பர் 1880 (பதவி பறிக்கப்பட்டது) 5 நவம்பர் 1884[44]

முர்சிதாபாத் நவாபுகள்தொகு

ஆங்கிலேயர்களால் 1881ல் வங்காள நவாபுகளின் பட்டங்கள் பறித்த பிறகு, அப்பட்டங்கள் முர்சிதாபாத் நவாபுகளுக்கு வழங்கப்பட்டது.[12][17]1971ல் இந்திய அரசால் முர்சிதாபாத் நவாப் பட்டங்கள் பறிக்கப்பட்டது.

படம் பட்டப் பெயர் சொந்தப் பெயர் பிறப்பு ஆட்சிக் காலம் இறப்பு
நஜபி வம்சம்
  அலி காதிர் ஹசன் அலி மிர்சா 25 ஆகஸ்டு 1846 17 பிப்ரவரி 1882 – 25 டிசம்பர் 1906 25 டிசம்பர் 1906[45][46]
  அமீர் உல் ஒமரா வசீப் அலி மிர்சா 7 சனவரி 1875 டிசம்பர் 1906 – 23 அக்டோபர் 1959 23 அக்டோபர் 1959[45][47]
  ராய்ஸ் உத் தௌலா வாரிஸ் அலி மிர்சா 14 நவம்பர்1901 1959 – 20 நவம்பர் 1969 20 நவம்பர் 1969[48]

இதனையும் காண்கதொகு

அடிக்குறிப்புகள்தொகு

  1. Imperial Gazetteer of India vol. IV 1907, ப. 46
  2. Chaudhury, Sushil; Mohsin, KM (2012). "Sirajuddaula". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. Archived from the original on 14 June 2015. http://en.banglapedia.org/index.php?title=Sirajuddaula. 
  3. Singh, Vipul (2009). Longman History & Civics (Dual Government in Bengal). Pearson Education India. பக். 29–. https://books.google.com/books?id=75avUTXB11AC&pg=PA29. 
  4. Madhya Pradesh National Means-Cum-Merit Scholarship Exam (Warren Hasting's system of Dual Government). Upkar Prakashan. 2009. பக். 11–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7482-744-9. https://books.google.com/books?id=QnyaLNskRfEC&pg=PA11. 
  5. 5.0 5.1 Murshidabad.net (8 மே 2012). "Decline of the Nawabs of Bengal". 2 செப்டெம்பர் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 ஆகத்து 2012 அன்று பார்க்கப்பட்டது.
  6. Murshidabad.net (8 மே 2012). "Hassan Ali Mirza's succession". 2 ஆகத்து 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 ஆகத்து 2012 அன்று பார்க்கப்பட்டது.
  7. 7.0 7.1 Lumby 1954, ப. 232
  8. "The last reigning Nawab of Murshidabad, Waris Ali Mirza Khan Bahadur". 24 ஆகத்து 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 ஆகத்து 2012 அன்று பார்க்கப்பட்டது.
  9. Rahman, Urmi (23 December 2014) (in en). Bangladesh - Culture Smart!: The Essential Guide to Customs & Culture. Bravo Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781857336962. https://books.google.com/books?id=1HelAwAAQBAJ. 
  10. "Dynasties of The Nawabs". Murshidabad.net. 8 மே 2012. 3 செப்டெம்பர் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 ஆகத்து 2012 அன்று பார்க்கப்பட்டது.
  11. "Bengal subah was one the richest subahs of the Mughal Empire". 19 ஆகத்து 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 ஆகத்து 2012 அன்று பார்க்கப்பட்டது.
  12. 12.0 12.1 12.2 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; nawab என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  13. History Modern India – S. N. Sen – Google Books. Books.google.co.in. https://books.google.com/books?id=ga-pmgxsWwoC&pg=PA11&dq=balaji+vishwanath+peshwa&hl=en&sa=X&ei=WvbST-3aCIy0rAe6vsD8Dw&ved=0CD0Q6AEwATgK#v=onepage&q=balaji%20vishwanath%20peshwa&f=false. பார்த்த நாள்: 6 July 2012. 
  14. Wernham, R. B. (1 Nov 1968). The New Cambridge Modern History: Volume 3, Counter-Reformation and Price Revolution, 1559–1610 (Maratha invasion of Bengal). CUP Archive. https://books.google.com/books?id=1BY9AAAAIAAJ&pg=PA555. பார்த்த நாள்: 14 August 2012. 
  15. 15.0 15.1 15.2 "Defeat of Siraj ud-Daulah in the Battle of Plassey". 20 செப்டெம்பர் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 சூலை 2012 அன்று பார்க்கப்பட்டது.
  16. 16.0 16.1 "வங்காள நவாபுகள்". 6 January 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 July 2012 அன்று பார்க்கப்பட்டது.
  17. 17.0 17.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; l என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  18. Paul, Gautam. "Murshidabad History - Murshid Quli Khan". murshidabad.net. 21 ஏப்ரல் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 மே 2016 அன்று பார்க்கப்பட்டது.
  19. "Murshid Quli Khan | Indian nawab". Encyclopædia Britannica. 1 ஆகத்து 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 மே 2016 அன்று பார்க்கப்பட்டது.
  20. Karim, Abdul (2012). "Murshid Quli Khan". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. Archived from the original on 4 April 2017. http://en.banglapedia.org/index.php?title=Murshid_Quli_Khan. 
  21. 21.0 21.1 Paul, Gautam. "Murshidabad History - Sarfaraz Khan". murshidabad.net. 21 ஏப்ரல் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 மே 2016 அன்று பார்க்கப்பட்டது.
  22. Karim, KM (2012). "Shujauddin Muhammad Khan". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. Archived from the original on 10 July 2015. http://en.banglapedia.org/index.php?title=Shujauddin_Muhammad_Khan. 
  23. Paul, Gautam. "Murshidabad History - Suja-ud-Daulla". murshidabad.net. 21 ஏப்ரல் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 மே 2016 அன்று பார்க்கப்பட்டது.
  24. Paul, Gautam. "Murshidabad History - Alivardi Khan". murshidabad.net. 9 March 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 May 2016 அன்று பார்க்கப்பட்டது.
  25. (in en) Bengal, Past & Present: Journal of the Calcutta Historical Society. The Society. 1962. பக். 34–36. https://books.google.com/books?id=1eMhAQAAIAAJ. 
  26. Paul, Gautam. "Murshidabad History - Siraj-ud-Daulla". murshidabad.net. 7 மே 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 மே 2016 அன்று பார்க்கப்பட்டது.
  27. "Nawab Siraj-ud-Daulah". Story Of Pakistan. 3 ஜனவரி 2005. 4 ஆகத்து 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 மே 2016 அன்று பார்க்கப்பட்டது.
  28. Zaidpūrī), Ghulām Ḥusain (called Salīm) (1902) (in en). The Riyaz̤u-s-salāt̤īn: A History of Bengal. Asiatic Society. பக். 384. https://books.google.com/books?id=4gg9Zvqs7mwC. 
  29. Paul, Gautam. "Murshidabad History - Mir Muhammed Jafar Ali Khan". murshidabad.net. 8 ஏப்ரல் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 மே 2016 அன்று பார்க்கப்பட்டது.
  30. "Portrait of an accidental Nawab". The Times of India. Archived from the original on 22 August 2016. https://web.archive.org/web/20160822062815/http://timesofindia.indiatimes.com/city/kolkata/Portrait-of-an-accidental-Nawab/articleshow/40618038.cms. 
  31. 31.0 31.1 Shah, Mohammad (2012). "Mir Jafar Ali Khan". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. Archived from the original on 3 July 2015. http://en.banglapedia.org/index.php?title=Mir_Jafar_Ali_Khan. 
  32. (in en) Bibliotheca Indica. Baptist Mission Press. 1902. பக். 397. https://books.google.com/books?id=3jk0AAAAIAAJ. 
  33. Paul, Gautam. "Murshidabad History - Najam-ud-Daulla". murshidabad.net. 21 ஏப்ரல் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 மே 2016 அன்று பார்க்கப்பட்டது.
  34. Paul, Gautam. "Murshidabad History - Saif-ud-Daulla". murshidabad.net. 21 ஏப்ரல் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 மே 2016 அன்று பார்க்கப்பட்டது.
  35. Khan, Abdul Majed (3 December 2007) (in en). The Transition in Bengal, 1756-75: A Study of Saiyid Muhammad Reza Khan. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780521049825. https://books.google.com/books?id=ZL38wll43-MC&pg=PA224&lpg=PA224&dq=Mubarak+ud-Daulah&source=bl&ots=31vQWcbody&sig=-ff2eerrxxUnLI3xPWOZgQ-XXws&hl=en&sa=X&redir_esc=y#v=onepage&q=Mubarak%2520ud-Daulah&f=false. 
  36. Paul, Gautam. "Murshidabad History - Babar Ali Delair Jang". murshidabad.net. 21 அக்டோபர் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 அக்டோபர் 2016 அன்று பார்க்கப்பட்டது.
  37. Paul, Gautam. "Murshidabad History - Ali Jah". murshidabad.net. 6 ஏப்ரல் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 அக்டோபர் 2016 அன்று பார்க்கப்பட்டது.
  38. Majumdar, Purna Chundra (1905) (in en). The Musnud of Murshidabad (1704-1904): being a synopsis of the history of Murshidabad for the last two centuries, to which are appended notes of places and objects of interest at Murshidabad. Saroda Ray. பக். 49. https://books.google.com/books?id=rcQ5AQAAIAAJ&pg=PA54-IA3&lpg=PA54-IA3&dq=Ali+Jah+Murshidabad&source=bl&ots=C-_mZy4ZTc&sig=0cYFT7AJkVtKhDMx_9v0MTzxre0&hl=en&sa=X&ved=0ahUKEwj88YTt6s7PAhXLWx4KHU_0DWgQ6AEIcTAS#v=onepage&q=Ali%20Jah%20Murshidabad&f=false. 
  39. Paul, Gautam. "Murshidabad History - Wala Jah". murshidabad.net. 21 அக்டோபர் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 அக்டோபர் 2016 அன்று பார்க்கப்பட்டது.
  40. (in en) Indian Records: With a Commercial View of the Relations Between the British Government and the Nawabs Nazim of Bengal, Behar and Orissa. G. Bubb. 1870. பக். 75. https://books.google.com/books?id=4GkBAAAAQAAJ&pg=PA75#v=onepage&q&f=false. 
  41. Paul, Gautam. "Murshidabad History - Humayun Jah". murshidabad.net. 10 ஜூன் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 அக்டோபர் 2016 அன்று பார்க்கப்பட்டது.
  42. Majumdar, Purna Chundra (1905) (in en). The Musnud of Murshidabad (1704-1904): being a synopsis of the history of Murshidabad for the last two centuries, to which are appended notes of places and objects of interest at Murshidabad. Saroda Ray. பக். 50. https://books.google.com/books?id=rcQ5AQAAIAAJ&pg=PA54-IA4&dq=Humayun+Jah&hl=en&sa=X&ved=0ahUKEwiMvbLO7c7PAhUBUT4KHX0MDr4Q6AEIHjAA#v=onepage&q=Humayun%20Jah&f=false. 
  43. Ray, Aniruddha (13 September 2016) (in en). Towns and Cities of Medieval India: A Brief Survey. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781351997300. https://books.google.com/books?id=12IPDQAAQBAJ&pg=PT570&dq=Humayun+Jah&hl=en&sa=X&ved=0ahUKEwiMvbLO7c7PAhUBUT4KHX0MDr4Q6AEIJDAB#v=onepage&q=Humayun%20Jah&f=false. 
  44. Paul, Gautam. "Murshidabad History - Feradun Jah". murshidabad.net. 22 மார்ச்சு 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 அக்டோபர் 2016 அன்று பார்க்கப்பட்டது.
  45. 45.0 45.1 "MURSHID16". www.royalark.net. 2 அக்டோபர் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 அக்டோபர் 2016 அன்று பார்க்கப்பட்டது.
  46. Paul, Gautam. "Murshidabad History - Hassan Ali". murshidabad.net. 1 செப்டெம்பர் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 அக்டோபர் 2016 அன்று பார்க்கப்பட்டது.
  47. Company, East India (1807) (in en). Papers Presented to the House of Commons Concerning the Late Nabob of the Carnatic. பக். 118. https://books.google.com/books?id=A39FAQAAMAAJ&pg=PA118&dq=Amir+ul-Omrah&hl=en&sa=X&ved=0ahUKEwi8rLik8c7PAhVKcj4KHUO1DOAQ6AEIJDAB#v=onepage&q=Amir%20ul-Omrah&f=false. 
  48. Paul, Gautam. "Murshidabad History - Waresh Ali". murshidabad.net. 22 மார்ச்சு 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 அக்டோபர் 2016 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்காள_நவாபுகள்&oldid=3588103" இருந்து மீள்விக்கப்பட்டது