வஜா கணக்கு


வஜா கணக்குதொகு

கிராம நிர்வாக அலுவலர் பராமரிக்கும் கிராம கணக்கு எண்-5, 'வஜா கணக்கு' எனப்படுகிறது. இதன் அடிப்படையில்,பருவநிலை பாதிப்பு அடையும்பபோது நிலவரி தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.இது மூன்று பிரிவுகளாக பராமரிக்கப்படுகிறது.

  1. பிரிவு 1. பருவநிலை பாதிப்பு ஏற்படும்போது அதாவது மழையின்மை, நீர்பாசன ஆதாரம் வற்றுதல், ஏரி நீர்வரத்து குறைதல் போன்ற காரணங்களால் கிராம நிர்வாக அலுவலரால் பயிராய்வு செய்யப்பட்டு விளைச்சல் அளவு 25% குறைவாக இருந்தால் அத்தகைய சமயங்களில் வஜா செய்யப்படும் தீர்வை விவரங்கள் முதல் பிரிவில் காட்டபடுகிறது.விவசாயிகள் கோரிக்கை அடிப்படையிலும் இந்த தள்ளுபடி வழங்கப்படும்.
  2. பிரிவு 2. நிலையான நிரந்தர தள்ளுபடிகள் இரண்டாம் பிரிவில் பராமரிக்கப்படுகிறது.நீர்ப்பாச ஆதாரத்தை பயன்படுத்தாமல் இறவை மூலம் தண்ணீர் பெறும் நன்செய் நிலங்களுக்கு இந்த பிரிவின் கீழ் ஏக்கருக்கு ஒரு சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது.
  3. பிரிவு 3. அசாதாரன நிலை பாதிப்புகள் பற்றி மூன்றாம் பிரிவில் குறிப்பிடப்படுகிறது.அத்தகைய பாதிப்பு ஏற்பட்டால்வருவாய் நிலை எண் 14-ன் படி நிலவரி தள்ளுபடி செய்யப்படுகிறது.

இந்த கணக்குகளை பராமரிக்கும் கிராம நிவாக அலுவலர், ஜமாபந்தியின் போது வருவாய்கோட்ட அலுவலர்ரின் ஒப்புதலோடு, ஜமாபந்தி அலுவலரிடம் வஜா கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மேற்கோள்தொகு

http://www.nellai.tn.nic.in/pdf/revenuemanual.pdf பரணிடப்பட்டது 2017-07-12 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வஜா_கணக்கு&oldid=3515663" இருந்து மீள்விக்கப்பட்டது