முதன்மை பட்டியைத் திறக்கவும்

வடுகபட்டி (தேனி)

(வடுகபட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வடுகப்பட்டி பேரூராட்சி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்த ஊர் தேனியிலிருந்து பெரியகுளம் - வைகை அணை வழியாக ஆண்டிபட்டி செல்லும் பாதையில் 20 கிமீ தூரத்தில், வராக நதியின் தென்கரையில் அமைந்திருக்கிறது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,391 வீடுகளும், 13,204 மக்கள்தொகையும் கொண்டது. [1] இது 5.12 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 51 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

இந்த ஊரில் இந்தியாவில் மூன்றாவது பெரிய பூண்டுச் சந்தை உள்ளது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை இங்கிருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பூண்டு அனுப்பி வைக்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் விளைவிக்கப்படும் பூண்டு பல வியாபாரிகளின் மூலமாக இங்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

பெயர்க்காரணம்தொகு

ஆந்திரம் போன்ற பகுதிகளில் இருந்து தமிழகதிற்கு குடிபெயர்ந்த நாயக்கர்களை தமிழ் மக்கள் வடுகர் என்று அழைப்பது உண்டு . இவர்கள் வடக்கில் இருந்து வந்த காரணத்தால் இப்பெயர் பெற்றது . அவ்வாறாக வந்த வடுக மக்கள் ஏற்படுத்திய குடியிருப்பின் காரணமாக வடுகபட்டி என்று அழைக்கப்படுகிறது [3] .

சிறப்புதொகு

கவிஞர் வைரமுத்து இந்த ஊரில் பிறந்த சிறப்பு மிக்க நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரங்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடுகபட்டி_(தேனி)&oldid=2818044" இருந்து மீள்விக்கப்பட்டது