வட்டத்தலை கிளி மீன்
வட்டத்தலை கிளி மீன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | லேப்ரிபார்மெசு
|
குடும்பம்: | |
பேரினம்: | இசுகேரசு
|
இனம்: | இ. குளோபிசெப்சு
|
இருசொற் பெயரீடு | |
இசுகேரசு குளோபிசெப்சு வலென்சினென்னசு, 1840 | |
வேறு பெயர்கள் [2] | |
கல்லியோடன் குளோபிசெப்சு (வலென்சினென்னசு, 1840) |
இசுகேரசு குளோபிசெப்சு (Scarus globiceps) பொதுவாக கோளத் தலை, ஊதா-வரி, சிறு புள்ளி அல்லது வட்டத்தலை கிளி மீன் என்று அழைக்கப்படுகிறது. இது இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு கடல் மீன் ஆகும். இங்கு இது பவளப் பாறைகளில் வாழ்கிறது.[1]
வகைப்பாடு
தொகுபிரெஞ்சு இயற்கை ஆர்வலர் அச்சில் வாலென்சியென்சு 1840ஆம் ஆண்டில் கோளத்தலை கிளி மீன்களை விவரித்தார். இந்த சிற்றினம் சார்லசு டார்வினால் சேகரிக்கப்பட்ட முதல் கிளி மீன் ஆகும். இவை கிட்டியைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து கோகோசு தீவுகளுக்குச் சென்றது. கோகோசு தீவில் காணப்பட்டது இசுகேரசு குளோபிசெப்சு என்றும் கிட்டி பகுதியில் காணப்பட்டது இசுகோரசு லெபிடசு என் லியோனார்ட் ஜெனின்சா பெயரிடப்பட்டது.[3] 1900ஆம் ஆண்டில், என்றி வீட் போலர் கரோலின் தீவிலிருந்து ஒரு மாதிரியை இசுகோரசு புரோனசு என்று விவரித்தார். இது பின்னர் இசுகோரசு குளோபிசெப்சு இனத்துடன் ஒத்ததாக இருந்தது.[4]
விளக்கம்
தொகுகோளத் தலை கிளி மீன் 45 செமீ (18 அங்குல நீளம்) நீளம் வரை வளரக்கூடியது. இதன் எடை 500 கிராம் வரை இருக்கும்.[2] இறுதிக் கட்டத்தில் உள்ள முதிர்வடைந்த ஆண் மீன் பெரும்பாலும் பச்சை நிற உடலைக் கொண்டுள்ளது. அதன் செதில்கள் சால்மன் இளஞ்சிவப்பு நிறத்துடன் ஓரங்களில் உள்ளன. வால் துடுப்பு சால்மன்-இளஞ்சிவப்பு பட்டைகளுடன் பச்சை நிறத்தில் உள்ளது. இது ஒரு கிடைமட்ட இளஞ்சிவப்பு பட்டையைக் கொண்டுள்ளது. இது மூக்கிலிருந்து கண்கள் வழியாகச் செவுள் மூடியின் இறுதி வரை பச்சை நிறத்தில் காணப்படும். இது மேல் மற்றும் கீழ்த் தட்டுகளில் 1 அல்லது 2 கோரைப் பற்களைக் கொண்டுள்ளது. இளம் கோளத்தலை கிளி மீன் சாம்பல்-பழுப்பு நிறத்திலிருக்கும். இவற்றின் வயிற்றில் மூன்று வெள்ளை பட்டைகள் உள்ளன.[5]
பரவல்
தொகுவட்டத்தலை கிளிமீன், பசிபிக் மேற்கில் உள்ள சொசைட்டி மற்றும் இலைன் தீவுகள் முதல் வடக்கில் இரியூக்யூ தீவுகள் வரை, தெற்கில் பெருந் தடுப்புப் பவளத்திட்டு மற்றும் இந்தியப் பெருங்கடல் முழுவதும் கிழக்கு ஆப்பிரிக்கா வரை காணப்படுகிறது. இது பொதுவாக வெளிப்புறப் பாறைகளில் காணப்படுகிறது. ஆனால் இவை கடற்காயல்களிலும் வாழ்கின்றன. சுமார் 12 மீட்ட ஆழப் பகுதிகளில் காணப்படும் இம்மீன் எப்போதாவது சுமார் 30 மீட்டர் (39) ஆழத்தில் காணப்படும்.[2]
பயன்பாடு
தொகுகுவாமில் உணவுக்காக இசுகோரசு குளோபிசெப்சு பிடிக்கப்படுகிறது .[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Myers, R.; Choat, J.H.; Russell, B.; Clements, K.D.; Rocha, L.A.; Lazuardi, M.E.; Muljadi, A.; Pardede, S. et al. (2012). "Scarus globiceps". IUCN Red List of Threatened Species 2012: e.T190694A17792374. doi:10.2305/IUCN.UK.2012.RLTS.T190694A17792374.en. https://www.iucnredlist.org/species/190694/17792374. பார்த்த நாள்: 20 November 2021.
- ↑ 2.0 2.1 2.2 Froese, Rainer; Pauly, Daniel (eds.). "Scarus globiceps". FishBase. August 2019 version. Darwin's Fishes: An Encyclopedia of Ichthyology, Ecology, and Evolution. Cambridge University Press. 2004. p. 154. ISBN 9781139451819.}}
- ↑ Darwin's Fishes: An Encyclopedia of Ichthyology, Ecology, and Evolution. Cambridge University Press. 2004. p. 154. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781139451819.
- ↑ Böhlke, Eugenia B. (1984). Proceedings of the Academy of Natural Sciences. Special Publication 14. Hanover, Pennsylvania: Sheridan Press. p. 151. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781437955323.
- ↑ John E. Randall; Gerald R. Allen; Roger C. Steene (1997). Fishes of the Great Barrier Reef and Coral Sea. University of Hawaii Press. p. 350. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780824818951.