வட்டார வளர்ச்சி அலுவலகம்
வட்டார வளர்ச்சி அலுவலகம் (Block Development Office) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டில், முன்னூற்று எண்பத்தைந்து ஊராட்சி ஒன்றியங்களின்[1] கீழ் உள்ள 12,524 ஊராட்சி மன்றங்களில் உள்ள ஊர் மக்களின் கல்வி, மருத்துவம், சுகாதாரம், போக்குவரத்து வசதிகள், வேலைவாய்ப்பு மற்றும் மகளிர், பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடி இனத்தவர் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் பொருட்டு, இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுகளின் சமூக நலத் திட்டங்களை திட்டங்களை கிராமங்களில் நடைமுறைப்படுத்தவும். அரசுகள் வழங்கும் நிதிகள் மற்றும் மானியங்களை கையாள்வதற்கும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியவர்களின் வழிகாட்டுதல்களின் படியும் வட்டார அளவில் செயல்படுகிறது.[2]
மத்திய, மாநில அரசுகளின் ஊரக வளர்ச்சி திட்டங்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கண்காணிப்பார்.[3][4][5]
அலுவலர்கள்
தொகுவட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியம் அலுவலர்களின் விவரம்[6]
- வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ)
- வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ)
- துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது)
- துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்)
- துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை)
- துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ம.கா.தே.ஊ.வே.உ.தி)
- துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு)
- மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
- உதவிப்பொறியாளர்கள்
- பணிப்பார்வையாளர்கள்
- கணக்கர்
- பிரிவு உதவியாளர்கள்
- விரிவாக்க அலுவலர் (சமூக நலம்)
- ஊர் நல அலுவலர்கள்