வட்டார வள மையம்

வட்டார வள மையம் (BRC- Block Resource Centre) என்பது இந்தியாவில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் கல்விச்செயல்பாடுகளை வட்டார அளவில் ஒருங்கிணைக்கவும், வட்டார எல்லைக்குட்பட்ட ஆசிரியர்களுக்குப் பணியிடைப் பயிற்சியை அளிக்கவும் கல்வி தொடர்பான புள்ளி விவரங்களைச் சேகரிக்கவும் அனைத்து மாநிலங்களிலும் ஒன்றிய அளவில் ஏற்படுத்தப்பட்ட மையம் ஆகும். [1] [2] இந்த மையம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், இந்தியா மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட பிற கல்வி அமைப்புகளுடன் இணைந்து பள்ளி மற்றும் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் செயலாற்றி வருகின்றன.[3]

செயல்பாடுகள் தொகு

வட்டார வளமையம் பின்வரும் செயல்பாடுகளை ஒன்றிய அளவில் நடைமுறைப்படுத்துகிறது[4].

  • கல்வித்துறையில் அறிமுகப்படுத்தப்படும் புதிய அணுகுமுறைகள் தொடர்பாக ஆசிரியர்களுக்குப் பணியிடை மற்றும் புத்தாக்கப் பயிற்சிகளை வழங்குதல்.
  • பள்ளிகளை மேற்பார்வை செய்து ஆலோசனைகள் வழங்குதல்.
  • அனைவருக்கும் கல்வித் திட்டச் செயல்பாடுகளை ஒன்றிய அளவில் நடைமுறைப்படுத்துதல்
  • தகவல் சேகரித்தல் (சேர்க்கை- இடைநிற்றல்- பள்ளிசெல்லா குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பு)மாற்றுப்பள்ளிகள், உண்டு உறைவிடப் பள்ளிகளை ஏற்படுத்த கருத்துரு அனுப்புதல்.
  • பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மையங்கள் (CRC-Cluster Resource Centre) மூலம் ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தலில் புதிய உத்திகள் குறித்து பயிற்சி அளித்தல்.

மேற்கோள்கள் தொகு

  1. http://ssa.nic.in/pedagogy/10.%20BRC-CRC-Report%20of%20the%20first%20Consultative%20meeting%20-TISS.pdf/at_download/file
  2. http://mhrd.gov.in/scheme_te
  3. தமிழ்நாடு அரசுக்காக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (2009). இந்தியக் கல்வி முறை இரண்டாமாண்டு வளநூல் (PDF). தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியல் பணிகள் கழகம். p. 191. Archived from the original (PDF) on 2017-07-12. பார்க்கப்பட்ட நாள் 2017-06-27.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2017-07-12. பார்க்கப்பட்ட நாள் 2017-06-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட்டார_வள_மையம்&oldid=3753161" இலிருந்து மீள்விக்கப்பட்டது