வணங்கான்
வணங்கான் (Vanangaan) என்பது 2025 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை பாலா எழுதி, இயக்கியிருக்கிறார். அதிரடி நாடகம் தொடர்பான இத்திரைப்படத்தை வி. ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சியும் இயக்குநர் பாலாவும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் அருண் விஜய், ரோசினி பிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
வணங்கான் | |
---|---|
![]() திரைப்பட வெளியீட்டுச் சுவரொட்டி | |
இயக்கம் | பாலா |
தயாரிப்பு | பாலா சுரேசு காமாட்சி |
கதை | பாலா |
இசை | பாடல்கள்: ஜி. வி. பிரகாஷ் குமார் பின்னணி இசை: சாம் சி. எஸ். |
நடிப்பு | அருண் விஜய் ரோசினி பிரகாஷ் |
ஒளிப்பதிவு | ஆர். பி. குருதேவ் |
படத்தொகுப்பு | சதீஷ் சூர்யா |
கலையகம் | பி சுடூடியோசு வி ஹவுசு புரொடொக்சன்சு |
வெளியீடு | 10 சனவரி 2025 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படம் 2022 மார்ச்சு மாதம் முறையாக அறிவிக்கப்பட்டது. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக சூர்யா 42 என்ற தற்காலிகப் பெயரில் நடித்து தயாரித்தார். அதே நேரத்தில் வணங்கான் என்ற பெயர் சூலை மாதத்தில் முறையாக அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பில் சில முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், கதைக்கள மாற்றங்கள் காரணமாக திசம்பர் மாதத்தில் இப்படத்திலிருந்து சூர்யாவும், 2டி எண்டர்டெயின்மெண்டும் விலக்குப் பெற்றனர். அவருக்குப் பதிலாக அருண் விஜய், கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடித்தனர். சுரேஷ் காமாட்சியும் பாலாவும் இணைந்து தயாரிப்புப் பணிகளை ஏற்றனர்.[1] அருண் விஜயுடன் முதன்மைப் புகைப்படம் எடுக்கும் பணி 2023 மார்ச் மாதம் தொடங்கி 2024 ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, ஆர். பி. குருதேவ் ஒளிப்பதிவும் சதீஷ் சூர்யா படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
வணங்கான் 2025 சனவரி 10 அன்று உலக அளவில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
நடிகர்கள்
தொகு- அருண் விஜய்
- ரோஷினி பிரகாஷ்
- சமுத்திரக்கனி - இந்தியக் காவல்துறைக் கண்பாளிப்பாளர் ஆர். கதிரவன்
- ஜான் விஜய்
- மிஷ்கின்
- ராதாரவி
- ரிதா
- சகாய தேவி
- பாலா சிவாஜி
- சண்முகராஜன்
- சிங்கம்புலி
- யோகன் சாக்கோ
- கவிதா கோபி
- பிருந்தா சாரதி
- ரவி மரியா
- மை. பா. நாராயணன்
- அருள்தாஸ்
- முனிஷ் சிவகுருநாத்
தயாரிப்பு
தொகுசூர்யாவின் அடுத்த திரைப்படமான சூர்யா 41 என்ற தற்காலிகப் பெயரில் அமைந்த திரைப்படத்தை பாலா இயக்குவதாகவும், 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக சூர்யா, ஜோதிகா இணைந்து தயாரிப்பதாகவும் 2022 மார்ச் 28 அன்று சூர்யா முறையாக அறிவித்தார்.[2] பாலாவின் பிறந்த நாளான 2022 சூலை 11 அன்று, சூர்யா முதற் தோற்ற சுவரொட்டியை வெளியிட்டார். மேலும் தமிழில் வணங்கான் என்றும், தெலுங்கில் அச்சலுடு என்ற தலைப்பிலும் வெளியிட்டார்.[3] நந்தா, பிதாமகன் திரைப்படங்களுக்குப் பிறகு பாலாவும் சூர்யாவும் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படம் இதுவாகும்.[4] சூர்யா இரட்டை வேடங்களில் நடித்ததாகக் கூறப்படுகிறது. அவற்றில் ஒன்று காது கேளாத ஊமையான கதாபாத்திரமாகும்.[5] கீர்த்தி ஷெட்டி, மமிதா பைஜு ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.[6]
ஆரம்பத்தில் படப்பிடிப்பு முழுவதுமாக மூன்று மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது, இருப்பினும், முன்னணி நடிகருக்கும் இயக்குநருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக சூன் மாதம் படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, வணங்கான் கைவிடப்பட்டதாக வதந்தி பரவியது, அதை சூர்யா ஒரு சமூக ஊடகப் பதிவில் மறுத்தார். அதில் அவர் "மீண்டும் களத்திற்கு வர காத்திருக்கிறேன்" என்று கூறினார்.[7] இருப்பினும், படத்தின் கதையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக சூர்யாவும், 2டி எண்டர்டெயின்மெண்டும், இனி இப்படத்தின் ஒரு பகுதியாக இல்லை என்று 2022 திசம்பர் 4 அன்று பாலா அறிவித்தார்.[8] 2023 மார்ச் மாதம் சூர்யாவுக்குப் பதிலாக அருண் விஜய் நடிக்கிறார் என்று உறுதி செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது. அதே நேரத்தில் ஷெட்டிக்குப் பதிலாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார்.[9][10] இறுதிப் படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடந்தது.[11] படப்பிடிப்பு 2024 ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது.[12]
சர்ச்சைகள்
தொகு2024 பெப்ரவரி 28 இல், படப்பிடிப்பின் போது பாலா தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தாக்கியதாக மமிதா பைஜு குற்றம் சாட்டினார். இந்நிகழ்வு கடைசியில் மமிதாவை இப்படத்திலிருந்து விலக்கிக் கொண்டது. பின்னர், ஊடகங்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும், இதுபோன்ற நிகழ்வுகள் எதுவும் தனக்கு ஏற்படவில்லை என்றும் மமிதா தெளிவுபடுத்தினார். ஆனால் மற்ற தொழில்முறைக் கடமைகள் காரணமாக படத்திலிருந்து விலகினார்.[13] பின்னர், ஆரஞ்சு தயாரிப்பகத்தின் திரைப்படத் தயாரிப்பாளர் எஸ். சரவணன், முதன்முதலாக 2020 இல் வணங்கான் என்ற தலைப்பைப் பதிவு செய்ததாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தின் வழியாகப் படத்தின் வெளியீட்டைத் தடுக்க முயன்றார். இருப்பினும், அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
பாடல்கள்
தொகுஇப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.[14] 2024 திசம்பர் 18 அன்று இசை வெளியீட்டு நிகழ்வைத் தொடர்ந்து, பாடல்கள் வெளியிடப்பட்டது.[15][16] முதலில் "இறை நூறு" என்ற பாடல் 2024 திசம்பர் 21 அன்று வெளியிடப்பட்டது.[17] சத்ய பிரகாஷ் பாடிய இரண்டாவது பாடல் "மௌனம் போலே" 2024 திசம்பர் 30 அன்று வெளியிடப்பட்டது.[18]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "இறை நூறு" | மது பாலகிருஷ்ணன் | ||||||||
2. | "முகிலின் மேலே" | சைந்தவி | ||||||||
3. | "மௌனம் போலே (ஆண் குரல்)" | சத்ய பிரகாஷ் | ||||||||
4. | "மௌனம் போலே (பெண் குரல்)" | இரக்சிதா சுரேஷ் | ||||||||
5. | "யாரோ நீ யாரோ" | மது பாலகிருஷ்ணன் |
வெளியீடு
தொகுவணங்கான் தைப்பொங்கல் வாரத்தில் 2025 சனவரி 10 அன்று வெளியிடப்பட்டது.[19]
மேற்கோள்கள்
தொகு- ↑ "First look of Arun Vijay - Bala's 'Vanangaan' out". தி இந்து. 25 September 2023 இம் மூலத்தில் இருந்து 25 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230925115735/https://www.thehindu.com/entertainment/movies/first-look-of-arun-vijay-balas-vanangaan-out/article67343731.ece.
- ↑ "Suriya and Bala's upcoming film Suriya 41 goes on floors". தி நியூஸ் மினிட். 28 March 2022. Archived from the original on 28 March 2022. Retrieved 28 March 2022.
- ↑ "Suriya-Bala film titled 'Vanangaan'; first-look poster out". தி இந்து. 11 July 2022. Archived from the original on 11 July 2022. Retrieved 19 July 2022.
- ↑ "Suriya-Bala combo film after 18 years titled 'Vanangaan'". Asian Lite News. 13 July 2022. Archived from the original on 18 August 2022. Retrieved 19 August 2022.
- ↑ "Buzz: Suriya to play a dual role in 'Suriya 41' directed by Bala". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 11 May 2022. Archived from the original on 19 October 2022. Retrieved 19 October 2022.
- ↑ "Krithi Shetty Delighted to Have Acted in Vanangaan, Lauds Bala-Suriya Duo". News18. 12 July 2022. Archived from the original on 19 July 2022. Retrieved 19 July 2022.
- ↑ "Suriya Dismisses Rumours of His Project With Director Bala Getting Shelved". News18. 2022-05-27. Archived from the original on 9 June 2022. Retrieved 2023-03-13.
- ↑ "Actor Suriya drops out of director Bala's Vanangaan". தி இந்து. 4 December 2022. Archived from the original on 4 December 2022. Retrieved 4 December 2022.
- ↑ "Arun Vijay Spotted With Crew in Latest Still From Vanangaan Sets". News18. 2023-03-13. Archived from the original on 13 March 2023. Retrieved 2023-03-13.
- ↑ "Roshni Prakash replaces Krithi Shetty in Bala's Vanangaan". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 6 March 2023. Archived from the original on 13 March 2023. Retrieved 2023-03-13.
- ↑ vinoth (16 August 2023). "பாலாவின் வணங்கான் படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் அப்டேட்!". Webdunia. Archived from the original on 16 August 2023. Retrieved 16 August 2023.
- ↑ "It's a wrap for Bala - Arun Vijay's 'Vanangaan'". 13 April 2024 இம் மூலத்தில் இருந்து 17 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240417003703/https://www.thehindu.com/entertainment/movies/its-a-wrap-for-bala-arun-vijays-vanangaan/article68061164.ece.
- ↑ "Mamitha Baiju says her statement about director Bala was misconstrued: 'Haven't experienced physical or mental harm'". The Indian Express (in ஆங்கிலம்). 2024-03-02. Archived from the original on 3 March 2024. Retrieved 2024-03-03.
- ↑ "G V Prakash on Suriya-Bala movie : The music is almost done". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 6 March 2022. Archived from the original on 11 March 2022. Retrieved 12 July 2022.
- ↑ "Suriya Expresses Gratitude To Mentor Bala At Vanangaan Audio Launch". Times Now (in ஆங்கிலம்). 2024-12-19. Archived from the original on 20 December 2024. Retrieved 2024-12-21.
- ↑ "Arun Vijay And Sivakarthikeyan Bond At Vanangaan Audio Launch Dismissing Rumors Of Rift". Times Now (in ஆங்கிலம்). 2024-12-20. Archived from the original on 20 December 2024. Retrieved 2024-12-21.
- ↑ Kumar, Akshay (2024-12-21). "'Irai Nooru' from Bala-Arun Vijay's Vanangaan out". Cinema Express (in ஆங்கிலம்). Archived from the original on 2024-12-21. Retrieved 2024-12-21.
- ↑ Kumar, Akshay (2024-12-30). "'Mounam Pole' from Bala-Arun Vijay's Vanangaan out". Cinema Express (in ஆங்கிலம்). Archived from the original on 2024-12-31. Retrieved 2024-12-30.
- ↑ Kumar, Akshay (2024-12-04). "Arun Vijay's Vanangaan gets a release date". Cinema Express (in ஆங்கிலம்). Archived from the original on 2024-12-16. Retrieved 2024-12-04.