வண்ணம் (சிற்றிலக்கியம்)
வண்ணம் என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. இரட்டைப்புலவர் பாடிய ஏகாம்பரநாதர் வண்ணம் என்னும் நூலில் இதன் அமைப்பைக் காணலாம்.
- பாடல் பகுதியில் வினாவோ, வினவுவது போன்ற செய்தியோ கூறப்பட்டிருக்கும். அதற்கு விடையாக இரண்டொரு சொல்லில் விடையும் சொல்லப்பட்டிருக்கும். இது பொருள்நோக்கு வண்ணம்.
எடுத்துக்காட்டு:
- எருக்கிலை பழுப்பதேன்
- எருமைக்கன்று சாவதேன்
- பாலற்று (பால் இல்லாமல்)
- மற்றொன்று சொல்நோக்கு வண்ணம். இதில் இசைப்பாடலின் இடையே, அடியின் இறுதியில் தனிச்சொல்லோ, தனிச்சொல் தொடரோ அமைந்திருக்கும்.
- அருணகிரிநாதர் பாடல்கள்
- வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் சுவாமிகள் பாடல்கள்
எடுத்துக்காட்டு:
- மறுத்தோன்ற வெளுத்த பிழை
- படப் பாந்தள் இடைச் செருகி
- வளர்ந்தோங்கி முடித்த சடையார் - காஞ்சனம் அனையார்
- மலர்க்காந்தள் முறுக்கு அவிழ ... [1]
அடிக்குறிப்பு
தொகு- ↑ ஏகாம்பரநாதர் வண்ணம்