வரிக் கழுதைப்புலி

கழுதைப்புலியில் ஒரு இனம்
வரிக் கழுதைப்புலி
புதைப்படிவ காலம்:0.7–0 Ma
பிளியோசீன் இடைக்காலம் முதல்
நேபாள விலங்குக் காட்சிச்சாலையில் வரிக் கழுதைப்புலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கையானா
இனம்:
கை. கையானா
இருசொற் பெயரீடு
கையானா கையானா
(லின்., 1758) [2]
வரிக் கழுதைப்புலி பரம்பல்
வேறு பெயர்கள் [3]
கேனிசு கையினா லின்., 1758
(மேலும் பல)

வரிக் கழுதைப்புலி (striped hyena, கையீனா கையீனா) என்பது வட ஆப்பிரிக்கா, கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், காகசஸ், மத்திய ஆசியா, இந்திய துணைக் கண்டம் ஆகிய பகுதிகளில் காணப்படும் ஒரு விலங்காகும். இது வேகமாக அழிந்து வரக்கூடிய இனமாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தினால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் பரந்து காணப்படும் இவ்வகை விலங்குகள் தற்செயலாகவோ, வேண்டுமென்றோ தொடர் துன்புறுத்துதலுக்கு ஆளாகின்றன. மேலும், இதன் அடுத்தடுத்த தலைமுறைகளில் 10 சதவிகித விலங்குகள் தொடர்ச்சியான அழிவாய்ப்பை நோக்கி சென்றுகொண்டுள்ளது எனத்தெரிய வருகிறது.[1]

பொதுவாக இவ்வகை கழுதைப்புலிகள் உருவத்தில் மிகச் சிறிதாகக் காணப்பட்டாலும், பேரினங்கள்[4] இழந்த சில பாலூட்டியின் குணங்களை பழமை மாறாமல் அப்படியே கொண்டுள்ளது. மிகச்சிறிய தலையைக் கொண்ட இவைகள்[5][6] ஒவ்வொன்றும் உணவுக்காக தனித்தனியே விலங்குகளை வேட்டையாடும் குணத்தை கொண்டிருக்கும்.[7] மிக அரிதான நிகழ்வுகளிலேயே மனிதர்கள் மீது இதன் தாக்குதல் இருக்கும்.[8] கோடிட்ட கழுதைப்புலி என்பது ஒரு இணையுடனே வாழும் விலங்காகும். ஆண் மற்றும் பெண் கழுதைப்புலிகள் தங்கள் குட்டிகளை வளர்ப்பதில் ஒன்றுக்கொன்று உதவிக்கொள்கின்றன.[9] கோடிட்ட கழுதைப்புலிகள் பொதுவாக முழுமையான இருட்டில் மட்டுமே தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். சூரிய உதயத்திற்கு முன்பு மீண்டும் அதன் குகைக்குள் சென்று விடும்.[10] பொதுவாக இறந்த அல்லது சாகும் தருவாயிலுள்ள விலங்குகளையே உணவாகக் கொண்டாலும் மிகப்பெரிய விலங்குகளுடனான போட்டியில் தனித்தே போராடும்.[11]

மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளின் உட்புறங்களிலும் கோடிட்ட கழுதைப்புலிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சில பகுதிகளில், இவற்றின் குரல் மற்றும் உடல் பாகங்களைப் பற்றி பல மாயாஜால கதைகள் உலாவுகின்றன.[12]

மேலும் இவ்விலங்கினைப் பற்றி "செபுஉவா" அல்லது "சிவோவா" என எபிரெய விவிலியத்தில் குறிப்புகள் காணப்படுகிறது, இருப்பினும் ஆங்கில மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பைபிள்களில் இக்குறிப்புகள் காணப்படவில்லை.[13] பண்டைய கிரேக்கர்கள் இதை "க்ளானோஸ்" மற்றும் "இனா- ஹைனா" என்று குறிப்பிடுவது தெரிய வருகிறது. மேலும் அனத்தோலியா பகுதியின் ஏஜீயான் கடற்பிரதேசங்களிலும் இதைப் பற்றிய தகவல்கள் அறிய வருகின்றன.[14]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 AbiSaid, M.; Dloniak, S.M.D. (2015). "Hyaena hyaena". IUCN Red List of Threatened Species 2015: e.T10274A45195080. doi:10.2305/IUCN.UK.2015-2.RLTS.T10274A45195080.en. https://www.iucnredlist.org/species/10274/45195080. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. Linnæus, Carl (1758). Systema naturæ per regna tria naturæ, secundum classes, ordines, genera, species, cum characteribus, differentiis, synonymis, locis. Tomus I (in Latin) (10th ed.). Holmiæ (Stockholm): Laurentius Salvius. p. 40. பார்க்கப்பட்ட நாள் 23 November 2012.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. Wilson, D. E.; Reeder, D. M., eds. (2005). "Hyaena hyaena". Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
  4. Kurtén 1968, ப. 66–68
  5. Rosevear 1974, ப. 348
  6. Heptner & Sludskii 1992, ப. 16
  7. Mills & Hofer 1998, ப. 22
  8. Heptner & Sludskii 1992, ப. 46
  9. Heptner & Sludskii 1992, ப. 40–42
  10. Heptner & Sludskii 1992, ப. 36–37
  11. Pocock 1941, ப. 72
  12. Frembgen, Jürgen W. The Magicality of the Hyena: Beliefs and Practices in West and South Asia பரணிடப்பட்டது 2012-03-20 at the வந்தவழி இயந்திரம், Asian Folklore Studies, Volume 57, 1998: 331–344
  13. Bright, Michael (2006). Beasts of the Field: The Revealing Natural History of Animals in the Bible. pp. 127–129. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86105-831-4.
  14. Αριστοτέλης 4th century BCE: Των περί τα ζώα ιστοριών.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரிக்_கழுதைப்புலி&oldid=4098465" இலிருந்து மீள்விக்கப்பட்டது