வருவாய் துறை


வருவாய்த் துறை, தமிழ்நாடு அரசின் தொன்மையான துறைகளில் ஒன்றாகும். இத்துறை முதலில் பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தில் கி பி 1786ல் துவக்கப்பட்டது.

வருவாய் துறை தமிழ் நாடு
TamilNadu Logo.svg
அமைப்பு மேலோட்டம்
அமைப்பு 1811
ஆட்சி எல்லை தமிழ் நாடு
தலைமையகம் சென்னை
பொறுப்பான அமைச்சர் R. B. உதயகுமாா், வருவாய் துறை அமைச்சா்
அமைப்பு தலைமைs Dr. B. சந்திரமோகன், இ.ஆ.ப.,, அரசு முதன்மைச் செயலாளா்
A. S. சவுரிநாராயணன், இணை செயலாளர்
மூல நிறுவனம் தமிழ் நாடு அரசு
இணையத்தளம்
Revenue Department

வரலாறுEdit

இந்தியாவில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தால் 1781-ல் வருவாய் வாரியம் உருவாக்கப்பட்டது. முதல் வருவாய் வாரியம் 1786-ல் வங்காள மாகாணத்திலும் அதனைத்தொடர்ந்து சென்னை மாகாணத்திலும் தோற்றுவிக்கப்பட்டது. பின்னர் பிரித்தானிய இந்தியாவின் அனைத்து மாகாணங்களிலும் தோற்றுவிக்கப்பட்டது. தமிழகத்தில் 1980-ஆம் ஆண்டில் தமிழ்நாடு வருவாய் வாரியம் ஒழிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை உருவாக்கப்பட்டது.

2004 சுனாமிக்குப் பின்னர், பேரிடர் மேலாண்மையை நிர்வகிக்கவும், தணிக்கவும் 2005-ஆம் ஆண்டு முதல் வருவாய்த் துறையானது வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் தணிக்கும் துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. [1]

முக்கியப்பணிகள்Edit

1. தமிழக அரசின் திட்டங்களை செம்மையாக செயல்படுத்தி மக்களுக்கு சேவை செய்தல்

2. இயற்கை இடர்பாடுகளின் போது நிவாரணமும் அதன்படி மறுசீரமைப்பும் செய்தல்

3. அரசு நிலங்களை பாதுகாத்தல், அவை தொடர்பான ஆவணங்களை பராமரித்தல்

4. நிலவகை மாற்றம், நில ஒப்படை, அரசு நில குத்தகை, நிலக்கொடை, ஆக்ரமணம், நில உரிமை மாற்றம், நில எடுப்பு, பட்டா வழங்கல், நில சீர்திருத்தம், வரிவிதித்து வசூலித்தல் போன்ற பணிகளையும் வருவாய்த்துறை செய்கிறது.

வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்புத்துறையின் நிர்வாகம்Edit

வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்புத் துறையானது ஐந்து இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் தலைமையிலான ஆணையாளர்கள் ஐந்து துறைகளை நிர்வகிக்கின்றனர். அவைகள் பின்வருமாறு:

 • வருவாய் நிருவாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிப்புத்துறை ஆணையரகம். [2]
 • நில நிருவாக ஆணையரகம் [3]
 • நிலச்சீர்த்திருத்த ஆணையரகம். [4]
 • நில அளவை மற்றும் நிலவரித் திட்ட ஆணையரகம். [5]
 • நகர்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரி இயக்குநரகம். [6]

துறையின் மாவட்ட அளவிலான முக்கிய அலுவலர்கள்Edit

தமிழக பேரிடர் மேலாண்மைEdit

2004 சுனாமிக்குப் பின்னர், தமிழக அரசு 2005-ல் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை முகமை மூலம் கொள்கைகள் வகுத்துள்ளது. அரசு ஆணை எண் 143 வருவாய் என்சி 1(2), நாள்: 27.05.2013-ன் படி மாநில பேரிடர் மேலாண்மை ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. [7] பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 பிரிவு 14(2)-ன் படி மாநில பேரிடர் மேலாண்மை ஆணைக்குழுவின் தலைவராக முதலமைச்சரும், உறுப்பினர்களாக அதிகபட்சம் 9 நபர்கள் இருப்பர்.[8]

மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணைக்குழு:Edit

பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 பிரிவு 25(2)-ன் படி அதிகபட்சம் 7 உறுப்பினர்கள்

 • தலைவர் --- மாவட்ட ஆட்சியர்
 • உறுப்பினர்கள் --மாவட்ட வருவாய் அலுவலர், காவல் துறை கண்காணிப்பாளர், தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் மாவட்ட அளவிலான இரு அதிகாரிகள்

மாநில பேரிடர் மீட்பு நிதி (01.04.2010)Edit

இந்திய அரசின் பங்கு - 75% மாநில அரசின் பங்கு - 25%

சிறப்பு இனங்களில்:Edit

இந்திய அரசின் பங்கு - 90% மாநில அரசின் பங்கு - 10%

இதனையும் காண்கEdit

மேற்கோள்கள்Edit

 1. Commissionerate of Revenue Administration, Disaster Management and Mitigation
 2. Revenue and Disaster Management Department
 3. Commissionerate of Land Administration
 4. Commissionerate of Land Reforms
 5. Commissionerate of Survey and Settlement
 6. Urban Land Ceiling and Urban Land Tax
 7. Tamilnadu State Disaster Management - TNSDMA
 8. Disaster Management and Mitigations