வறுத்தல் அல்லது உலர் வறுப்பு (Dry roasting) என்பது எண்ணெய் அல்லது நீர் போன்றவற்றை பயன்படுத்தாமல் உலர்ந்த உணவுப்பொருட்களை வெப்பத்தை மட்டும் பயன்படுத்தி வறுத்தெடுத்தல் ஆகும். மற்ற வறண்ட வெப்ப முறைகள் போலல்லாமல், உலர் வறுப்பில் கொட்டைகள், விதைகள் போன்றவற்றை உணவுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. கொட்டைகள் தீய்ந்து போவதைத் தடுக்கவும், அனைத்து கொட்டைகள் மற்றும் விதைகளும் சமமான வெப்பம் பெறவும் கிளறிவிடப்படுகின்றது.

காபி கொட்டைகள் வறுபடுகின்றன

உலர் வறுப்பு என்பது சில உணவுப் கொருட்களுக்கான மசாலை தயாரிப்பதற்கான பொதுவான வழியாக உள்ளது.[1] வாணலி அல்லது கடாய் மூலமாகவோ அல்லது இதற்கெனவே தயாரிக்கபட்ட வறுப்பான்கள் (காபி கொட்டை, பீன்ஸ், வேர்கடலை போன்றவற்றை வறுக்க பயன்படும் வறுப்பான்கள்) கொண்டு வறுக்கப்படுகின்றன. உலர் வறுத்தலால் உணவில் உள்ள புரதங்கள் வேதி மாற்றமடைகின்றன், அதன் சுவையும் மாறுகிறது, சில மசாலைப் பொருட்களின் சுவையும் மணமும் கூடுகின்றது. வறுக்கப்படும் உணவுடன் சுவைக்காக மூலிகைகள், மசாலாக்கள், சர்க்கரை போன்றவை சேர்த்து பொன்நிறம் வரும் வரை வறுக்கப்படுகின்றன.

பொதுவாக உலர் வறுவலுக்கு வறுகடலை, தேயிலை,[2]காபி, சாக்லெட் மற்றும் கோகோ கொட்டைகள்[3] போன்றவை ஆட்படுகின்றன.[4]

மேற்கோள்கள் தொகு

  1. Zmark.net. "Healthy Cooking Tip and Recipe Idea: How To Dry Roast Dried Seeds and Dried Whole Spices - HealthWorld Online". Healthy.net. Archived from the original on 2017-02-02. பார்க்கப்பட்ட நாள் 2009-07-17.
  2. "Oolong Tea". Chinateahub.com. Retrieved 2009-07-17.
  3. "Roasting coffee beans at home". Essortment.com. Retrieved 2009-07-17.
  4. "HowStuffWorks "Cocoa Beans and the Roasting Process"". Recipes.howstuffworks.com. Retrieved 2009-07-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வறுத்தல்&oldid=3571051" இலிருந்து மீள்விக்கப்பட்டது