வலைவாசல்:தமிழிலக்கியம்


தமிழிலக்கிய வலைவாசல்


தொகு  

தமிழிலக்கிய வலைவாசல் உங்களை வரவேற்கிறது


தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி என பல வடிவங்கள் உள்ளன. தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன. தொல்பழங்காலத்தில், அக்காலப் பாண்டிய அரசர்களின் ஆதரவில், ஒன்றுக்குப்பின் ஒன்றாக மூன்று தமிழ்ச்சங்கங்கள் தமிழாராய்ந்ததாகவும், அக்காலத்தில் தமிழிலக்கியங்கள் பல இயற்றப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என அழைக்கப்படும் இம் முச்சங்கங்கள் சார்ந்த இலக்கியங்களிலே கடைச்சங்க நூல்கள் மட்டுமே தற்போது கிடைப்பதாகச் சொல்கிறார்கள். முன்னிரண்டு சங்கங்களையும் சேர்ந்த நூல்கள், அக்காலங்களில் ஏற்பட்ட கடல்கோள்களின்போது, நாட்டின் பெரும்பகுதியுடன் சேர்ந்து அழிந்து போனதாக கருதப்படுகிறது. எனினும், முதலிரு சங்கங்கள் இருந்தது பற்றியோ அல்லது அக்காலத்தில் இலக்கியங்கள் இருந்தது பற்றியோ போதிய உறுதியான ஆதாரங்கள் எதுவுமில்லை.

தமிழ் இலக்கியம் பற்றி மேலும்...
தொகு  

சிறப்புக் கட்டுரை


உடையார் (புதினம்)
உடையார் என்பது பாலகுமாரன் எழுதிய வரலாற்றுப் புதினம் ஆகும். ஆறு பாகங்களை உடைய (177 அத்தியாயங்கள்) இப்புதினம் முதலில் இதயம் பேசுகிறது வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் விசா பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்ட வரலாற்றை, கற்பனை நயத்தோடு, மாமன்னர் இராஜராஜ சோழனை நாயகனாகவும் அவரது மனைவி பஞ்சவன்மாதேவியை நாயகியாகவும் கொண்டு எழுதப்பட்டது.

கல்கியின் பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழனின் இளம் பருவத்தைச் சிறப்பாகச் சொல்லிய புதினம் ஆகும். பாலகுமாரனின் உடையார் புதினம், ராஜராஜ சோழனின் ஆட்சி செய்த காலகட்டத்தையும் குறிப்பாக தஞ்சை பெரிய கோயில் கட்ட எடுத்துக்கொண்ட முயற்சிகள் மற்றும் கட்டப்பட்ட விதம் ஆகியவற்றையும் கதைக்களமாகக் கொண்டுள்ளது.

தொகு  

தமிழ் இலக்கியம் குறித்த பகுப்புகள்


தொகு  

இலக்கியவாதிகள்


சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் (ஜனவரி 18, 1854 - 1922, சுன்னாகம், யாழ்ப்பாணம்) இலங்கையைச் சேர்ந்த புலவர் ஆவார். காலனித்துவ ஆட்சிக்காலத்தில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தவர்களில் இவரும் ஒருவராவர். யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் என்ற ஊரில் பிறந்த குமாரசுவாமிப்புலவரின் தந்தை அம்பலவாணர் தமிழ் இலக்கிய இலக்கணங்களை தமது பெரிய தகப்பனாராகிய முத்துக்குமாரக் கவிராயரிடம் கற்றுத் தேறியவர். அத்துடன் சைவ சமய ஈடுபாடும் கொண்டவர். தென்கோவை குமாருடையார் மகள் சிதம்பராம்மையரை 1840 வைகாசி ஐந்தாம் நாள் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் முறையே சிவகாமிப்பிள்ளை, குமாரசுவாமி மற்றும் காமாட்சிப்பிள்ளை என மூன்று மகவுகளை பெற்றனர். 1854 ஆம் ஆண்டு தை 18 ஆம் நாள் குமாரசுவாமி பிறந்தார்.

தொகு  

சிறப்புப் படம்


அகத்தியர்
அகத்தியர்
படிம உதவி: sowrirajan s

சித்தர்களில் முதன்மையானவராகக் கருதப்படும் அகத்தியர், அகத்தியம் எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர் என அறியப்பெறுகிறார். காவிரியாற்றின் கல்லணையில் அகத்தியர் சிலை.

தொகு  

உங்களுக்குத் தெரியுமா...?


  • நரிவிருத்தம் என்பது 6-7 ம் நூற்றாண்டுகளில் திருத்தக்க தேவர் என்ற சமணரால் எழுதப்பட்ட நிலையாமைக் கோட்பாட்டை விளக்கும் ஒரு தமிழ் அறநூல் ஆகும்.
  • தூங்கெயில் என்பது சங்கப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு கோட்டையாகும்.
  • சாற்றுக்கவி என்பது முந்தைய காலத்தில் நூல் உருவாக்குவோர் தங்கள் நூலுக்காக பெரும் புலவர்களிடம் கேட்டுப் பெறும் கவிதையாகும்.
தொகு  

தொடர்பானவை


தொகு  

இலக்கியம் குறித்த பகுப்புகள்

தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


  • தமிழிலக்கியம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • தமிழிலக்கியம் தொடர்பான குறுங்கட்டுரைகளை விரிவுபடுத்தலாம்.
  • தமிழிலக்கியம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • தமிழிலக்கியம் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • தமிழிலக்கியம் தொடர்பான பகுப்புகளை ஒழுங்கமைத்து சீர்படுத்தலாம்
தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:தமிழிலக்கியம்&oldid=1986913" இலிருந்து மீள்விக்கப்பட்டது