வலைவாசல்:பெண்ணியம்/உங்களுக்குத்தெரியுமா/பரிந்துரைகள்
- மேரி கியூரி வேதியியல் மற்றும் இயற்பியல் ஆய்வுகளுக்காக, 1911, 1903 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை நோபல் பரிசுகளை பெற்ற முதல் நபர்.
- அன்னை தெரேசா 1979 இல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980 இல் பாரத ரத்னா விருதினையும் பெற்றார்.
- மலாலா யூசப்சையி மிகவும் சிறுவயதில் 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்றவர்.
- மணியம்மையார் திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்தவர். கந்த புராணத்தையும், இராமாயணத்தையும் ஒப்பாய்வு செய்து குடியரசு இதழில் கட்டுரை எழுதினார்.
- கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் (கே. பி. சுந்தராம்பாள்) தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர்.
- கல்பனா சாவ்லா, நாசாவின், முதன் முதலாக விண்ணில் செலுத்தப்பட்ட, விண்வெளி ஓடமான கொலம்பியா விண்ணோடத்தில், விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியப்பெண்.
- ம. ச. சுப்புலட்சுமி ஐக்கிய நாடுகள் அவையில் அரங்கேற்றத்தை நிகழ்த்திய, பாரத ரத்னா பட்டம் பெற்ற கருநாடக இசைப் பாடகியாவார்.
- மாதங்கி அருள்பிரகாசம், தமிழீழ விடுதலைப் போராட்டங்களின் ஒலிப்புகள் அதிகமாகக் கொண்டப் பாடல்களை பாடிவரும் ஒரு ராப் இசைப் பாடகர். ஆயிற்று
- காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவரும், இறைவனை இசைத்தமிழால் பாடியவர்களில் முதலாமானவரும் ஆவார். ஆயிற்று
- சித்தி ஜூனைதா பேகம் முதல் தமிழ் முஸ்லிம் பெண் எழுத்தாளர். இவர் எழுதிய முதல் சிறுகதை, 1929ல் தாருல் இஸ்லாம் இதழில் வெளிவந்தது. ஆயிற்று
- சிவசங்கரி, 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாசிரியருக்கான பரிசு பெற்றவர். இவர் எழுதிய பாரத தரிசனம் எனும் நூலுக்கு இப் பரிசு வழங்கப்பட்டது.
- அனுராதா ரமணன் சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். ஆனந்த விகடனில் வெளியான இவரது ’சிறை’, சிறந்த சிறுகதைக்கான தங்கப் பதக்கம் வென்றது. 1978 ஆம் ஆண்டு எம். ஜி. ஆரிடம் இருந்து தங்கப்பதக்கம் பெற்றார்.
- மார்கரெட் தாட்சர் பிரித்தானியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் ஆவார். வேதியியல் ஆய்வாளராக துவங்கிய மார்கரெட் பின்னர் சட்டம் படித்து பார் அட் லா ஆனார். ஆயிற்று
- எலிசபெத் பிளாக்வெல் உலகிலேயே அமெரிக்காவில் முதன்முதல் மருத்துவப் பட்டப்படிப்புப் படித்துத் தேறிய உலகின் முதல் பெண் மருத்துவராக விளங்கியவர். ஆயிற்று
- இராதிகா சிற்சபையீசன் கனடா நாடாளுமன்றம் சென்ற முதல் தமிழர் ஆவார். யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டம் பெற்றவர். ஆயிற்று
- பெண் விடுதலைக்காகப் போராடிய அன்னி பெசண்ட் அம்மையார் அயர்லாந்தில் பிறந்து லண்டனில் குடியேறியவர். சென்னை அடையாறில் பிரும்மஞான சங்கத்தின் தலைமை நிலையத்தை நிறுவினார்.
- சில்வியா கார்ட்ரைட் கம்போடியாவிலுள்ள சிறப்பு நீதிமன்ற கழகத்தின் தலைவரும் பெண்களுக்கு எதிராக வேற்றுமை காட்டுதலை ஒழிப்பதற்கான ஐநா குழுவின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். ஆயிற்று
- திண்டிவனம் அருகில் உள்ள இரட்டணை என்ற ஊரில் 1875 ஆம் ஆண்டில் பிறந்த அசலாம்பிகை பெண் விடுதலை பற்றிய சிந்தனைகளுடன் இந்திய விடுதலை குறித்த கருத்துகளையும் மேடைகளில் பேசியவர். ஆயிற்று
- மீனாம்பாள் சிவராஜ் பெண் விடுதலைக்காகவும், தலித் விடுதலைக்காகவும் போராடுவதைத் தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு போராடியப் பெண்மணியாவார்.
- சின்னப்பிள்ளை கிராமப்புற மகளிரிடையே சிறுசேமிப்பு பழக்கம் ஏற்படுத்தி, களஞ்சியம் எனும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பொருளாதார நிலையை மேம்படுத்திக் காட்டியவர். மகளிர் மேம்பாட்டிற்காக வழங்கப்படும் "ஸ்திரீ சக்தி” எனும் உயர் விருது பெற்றவர். ஆயிற்று
- பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி சென்னை மாகாண சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியாவார். தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை, குழந்தைத் திருமணங்களைத் தடை செய்யும் சட்டங்களை நிறைவேற்றியவர்.
- மேரி சாந்தி தைரியம் மலேசிய மனித உரிமை, பெண்ணுரிமைப் போராளி ஆவார். ஐக்கிய நாடுகள் அவையின் பாலினத்திற்கான சம உரிமைக் குழுவிலும் பெண்களுக்கெதிரான பாகுபாட்டை ஒழிக்கும் குழுவிலும் பணியாற்றியவர். ஆயிற்று
- இங்கிலாந்தில் பிறந்த எம்மலின் பான்கர்ஸ்ட் பெண்களுக்கான வாக்குரிமைக்காகக் குரல் கொடுத்து அதை பெற்றுத் தந்த உலகின் முதல் பெண். 1999 ஆம் ஆண்டு டைம் இதழ் இவரை 20 ஆம் நூற்றாண்டின் முக்கிய 100 நபர்களில் ஒருவராக அறிவித்தது.
- சி. பி. முத்தம்மா இந்தியக் குடியுரிமைப் பணித் தேர்வில் வெற்றியடைந்த முதல் பெண் மற்றும் இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரி.